Monday, 23 May 2022

புருஷர்கள் தங்கள் மனைவிகளை எப்படி பார்க்க வேண்டும்?

பாடம்:13 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?                                       

புருஷர்கள் தங்கள் மனைவிகளை எப்படி பார்க்க வேண்டும்?

எத்தனை புருஷர்கள் தங்கள் மனைவிகளின் மீது உண்மையான அக்கறையும் அன்பும் வைத்து இருக்கிறார்கள்?

இன்றைக்கு மனைவியை கிண்டல் செய்தும் கேலி பண்ணுவதுமான மீம்ஸ்கள் அதிகமாக வருகிறது 

அதை எல்லாம் புருஷர்கள் மகிழ்ச்சியோடு ஷேர் செய்கிறார்கள்

தேவன் நமக்கு துணையாக கொடுக்கப்பட்ட மனைவியை தரக்குறைவாக நடத்துவதோ அல்லது கேலி பண்ணுவதோ அல்லது கிண்டல் பண்ணுவதோ செய்தால் நிச்சயம் தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் நாம் தப்பிக்க முடியாது 

புருஷர்கள் தங்களுடைய மனைவியின் தோற்றத்தை எப்படி பார்க்கிறார்கள்?

புருஷன் தன் மனைவியை உண்மையாய் நேசிப்பான் என்றால் எந்த ஸ்திரீயைக் காட்டிலும் அழகுள்ளவளாக பார்க்க வேண்டும்
 
இன்றைக்கு அநேக புருஷர்கள் தங்களுடைய மனைவியை தவிர எல்லா ஸ்திரீகளையும் அழகுள்ளவளாக பார்க்கிறார்கள், இது ஆபத்தானதும் தேவனுக்கு விரோதமானதுமாக இருக்கிறது

அழகு என்பது வீண் என்பதை தேவன் சொன்னதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது
நீதி 31:30 சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண் கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

ஒரு ஸ்திரீ மதிகேடாய் நடக்கிறாள் என்றாள் அவளுடைய அழகு எதற்கு சமானமாய் இருக்கிறது?
நீதி 11:22 மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.

புருஷனுக்கு மனைவியின் ஸ்தனங்களே திருப்தி செய்ய வேண்டும்

மனைவியின் நேசத்தால் மாத்திரம் மயங்கி இருக்க வேண்டும்
நீதி 5:19 அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

இதை எல்லாம் தேவன் நமக்கு ஏன் சொல்லுகிறார்?

நாம் வேசித்தனத்தில் விழுந்து போகாத நம்மை எச்சரிக்கிறார்

மனைவியை எப்படி நேசிக்க வேண்டும் என்று உன்னத பாட்டு தெளிவாக போதிக்கிறது

புருஷன் தன் மனைவியை இப்படி தான் எப்போது பார்க்க வேண்டும்?

புருஷனானவன் தன் மனைவியை தவிர எந்த ஸ்திரீயும் அழகுள்ளவளாக பார்க்க கூடாது
உன் 6:10 சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம் போல் உதிக்கிற இவள் யார்?

சாலமோன் தன் மனைவியை எப்படி வர்ணித்து இருக்கிறார் என்பதை நாம் கவனித்து பார்க்க வேண்டும்

சாலமோன் தன் மனைவியை ரூபவதி புறா பிரியம் என் உத்தமி மணவாளி சகோதரி(ஆவிக்குரிய வகையில்) இப்படித்தான் அழைக்கிறார் 

புருஷனும் தன் மனைவியை அன்போடு அழைக்க கற்றுக் கொள்ள வேண்டும் 

சாலமோன் தன் மனைவியை எப்படி பார்த்தார்?
உன் 1:10 ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.
உன் 1:15 என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.
உன் 2:14 கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.

சாலமோன் அவளை சரீரபிரகாரமாக அதிகமாக நேசித்தார்
உன் 4:1 நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது.
உன் 4:2 உன்பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
உன் 4:3 உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
உன் 4:4 உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுத சாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.
உன் 4:5 உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
உன் 4:6 பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்து போகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்.

சாலமோன் தன் மனைவியின் நேசம் இன்பமாயிம் மதுரமாயிம் இருக்கிறது என்பதை அறிந்து இருந்தார்
உன் 4:10 உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
உன் 4:11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
உன் 4:12 என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.
உன் 4:13 உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,
உன் 4:14 நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்கார வனமாயிருக்கிறது.
உன் 4:15 தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.

சாலமோனைப் போல புருஷன் தன் மனைவியை உண்மையாக நேசித்து அன்பு வேண்டும்
உன் 7:1 ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.
உன் 7:2 உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது.
உன் 7:3 உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.
உன் 7:4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
உன் 7:5 உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது ராஜா நடைக்காவணங்களில் மயங்கி நிற்கிறார்.
உன் 7:6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
உன் 7:7 உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது.
உன் 7:8 நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
உன் 7:9 உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.

உலகில் எல்லா ஸ்திரீகளைக் காட்டிலும் ஒழுக்கத்தில் மிக சிறந்தவளும் மிகுந்த அழகுள்ளவளும் அதிக அன்பும் அக்கரையும் கொண்டவள் என் மனைவி மாத்திரமே என்கிற பார்வையும் எண்ணமும் ஒவ்வொரு புருஷனுக்கும் இருக்கும் என்றால் அவனே மிகச் சிறந்த புருஷனும் தன் மனைவியால் நேசிக்கப்படத்தக்கவனாகவும் இருப்பான்
உன் 1:8 ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment