Sunday, 29 May 2022

புருஷர்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதற்கு தேவன் அனுமதி கொடுத்து இருக்கிறாரா?

பாடம்:15  விவாகம் யாவருக்குள்ளும்  கனம் உள்ளதா?
 
புருஷர்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதற்கு தேவன் அனுமதி கொடுத்து இருக்கிறாரா?

கணவன் மனைவிக்குள்ளே குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் போது அநேக புருஷர்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்

நம்முடைய தேசத்தில் மனைவியை அடிப்பதை ஒரு கலாச்சாரமாக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் 

புருஷன் மனைவியை அடிப்பதினால் அவள் தனக்கு கீழ்ப்படிந்து இருப்பாள் என்றும்  அப்படி செய்கின்ற போது தான் ஒரு ஆண்மகன் என்பதை நிரூபிக்க முடியும் என்று  அநேகர் நம்புகிறார்கள்,ஆனால் அப்படி புருஷர்கள் நடந்து கொள்ளும் போது புருஷன் மீது அன்புக்கு பதிலாக மனைவிக்கு வெறுப்பும் கோபமும் அதிமாகும் என்பதை அநேகர் அறிந்து கொள்ளுவதில்லை

புருஷன் தன் மனைவியை அடிக்கக் கூடியவனாக இருப்பான் என்றால் அப்படிப்பட்ட குடும்பத்தில் ஒரு போதும் சமாதானம் இருக்க வாய்ப்பில்லை

கிறிஸ்தவ புருஷர்கள் தங்களை மனைவிகளை அடிப்பதற்கு தேவன் அனுமதி கொடுத்து இருக்கிறாரா?

புருஷன் தன் பிள்ளைகளை தவிர தன் மனைவியை அடிப்பதற்கு தேவன் அனுமதி கொடுக்கவில்லை
நீதி 23:13 பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
நீதி 23:14 நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

மனைவியின் சரீரத்திற்கு புருஷன் அதிகாரியாக இருந்தாலும் மனைவியின் சரீரத்தை அடிப்பதற்கு அதிகாரியல்ல என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவ புருஷர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்
1கொரி 7:4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்ளே ஏன் சண்டை ஏற்படுகிறது?

கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையில் கடுஞ் சொற்களை பயன்படுத்தும் போது தான் அங்கே கோபம் எழும்புகிறது
நீதி 15:1 ,,,, கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

புருஷன் கோபக்காரனாக இருந்தால் அங்கே என்ன எழும்பும்?

அங்கே சண்டை எழும்புகிறது
நீதி 15:18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்....
நீதி 30:33 பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

புருஷன் கோபக்காரனாகவே அல்லது மனைவி கோபக்காரியாக இருப்பார்கள் என்றால் அங்கே சண்டை என்பது ஓயாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
நீதி 19:13 ,,,,,,, மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.

குடும்பத்தில் பிரச்சனைகள் எழும்பும் போது கணவனோ அல்லது மனைவியோ சாந்தமான பிரத்தியுத்திரம் கொடுக்கும் போது அங்கே சமாதானம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது
நீதி 15:1 மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
நீதி 15:18 ,,,, நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

நாம் குற்றம் செய்து இருப்போம் என்றால் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
பிர 10:4 அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.

நாம் விவேகமுள்ளவர்களாக இருக்கும் போது நாம் கோபத்தை அடக்க முடியும் அதோடு மாத்திரம் அல்ல கணவன் மனைவிக்குள்ளே யார் குற்றம் செய்து இருந்தாலும் அதை மன்னிப்பது அவர்களுக்கு அது மகிமையாக இருக்கிறது
நீதி 19:11 மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

புருஷர்கள் கோபமும் தர்க்கமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்
1தீமோ 2:8 அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.

குடும்பத்தில் பிரச்சனைகளுக்கு காரணமாயிருக்கிற தூஷணமும் வம்பு வார்த்தைகளை கணவனும் மனைவியும் விட்டு விட வேண்டும்
கொலோ 3:8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
எபே 4:31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
கலா 5:26 வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

நாம் கோபப்படுவதற்கு எப்போதும் தாமதமாக இருக்க வேண்டும்
யாக் 1:19 ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
யாக் 1:20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

கோபங்கொண்டாலும் நாம் பாவம் செய்யக்கூடாது என்பதை ஒவ்வொரு புருஷர்களும் மனதிலே வைத்துக் கொள்ள வேண்டும்
எபே 4:26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

புருஷர்கள் தங்கள் மனைவிகளை அடிக்கும் போது அவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்

கணவனுக்கோ அல்லது மனைவிக்கே எரிச்சல் இருக்கும் என்றால் சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக எரிச்சல் தணிய வேண்டும்

கோபத்தை துக்கிக் கொண்டு சுமக்காதீர்கள் அது மிகவும் பாரமானது
நீதி 27:3 கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

புருஷர்களே உங்கள் மனைவிகளுக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்யுங்கள் அப்படி செய்கின்ற போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நித்திய ஜீவனை பெற முடியும்
1பேது 3:7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்

மனைவி புருஷனுடைய சொந்த சரீரமாக இருக்கிறாள்
எபே 5:28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும் தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.

புருஷன் தன் மாம்சத்தைப் போஷித்து காப்பற்ற வேண்டும்
எபே 5:29 தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.

மனைவி புருஷனுடைய எலும்பும் மாம்சமுமாய் இருக்கிறாள்
எபே 5:30 நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
ஆதி 2:23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

புருஷன் தன் மனைவியை அடிக்கும் போது என்ன சம்பவிக்கிறது?
மனைவி புருஷனுடைய எலும்பும் மாம்சமுமாய் இருக்கிற படியால் புருஷன் தன் மனைவியை அடிக்கும் அவன் தன்னை தானே அடித்துக் கொள்ளுகிறான்

மனைவி புருஷனை அடிக்கலாமா?

புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாய் இருக்கிறான்
1கொரி 11:7 புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால்,தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷனை சபிக்கக்கூடாது என்றால் அவனை அடித்தால் என்ன சம்பவிக்கும்?
யாக் 3:9 அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

ஸ்திரீயானவள் புருஷனை அடிக்கும் போது அவள் யாரை அவமானப்படுத்துகிறாள்?
தேவனை அவமானப்படுத்துகிறாள்
அப் 5:39 … தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.

கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment