பாடம் :10 ஓய்வு நாள் ஆசரிப்பு பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?
ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசரித்தார்களா?
ஓய்வுநாளை இஸ்ரவேலர்கள்(யூதர்கள்) ஆசரித்தார்கள் என்று தான் வேத வாக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது
ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசாரித்தார்கள் என்று எந்தவொரு வேத வாக்கியங்களும் இல்லை
இவர்கள் தங்கள் சபையாருக்கென்று நிறைய ஓய்வு நாள் சம்பந்தமான புஸ்தகங்களை எழுதி அவர்கள் கையில் கொடுக்கிறார்கள் அதை தான் அவர்கள் வாசித்து கொண்டு இருப்பார்கள்
இவர்களுக்கு எத்தனை வேத வாக்கியங்களை காண்பித்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
ஓய்வு நாளை எப்படி ஆசரிக்க வேண்டும் என்று இவர்களே புஸ்தகம் எழுதி வைத்து இருப்பார்கள் அதை தான் அந்த சபையாரும் பின்பற்றுவார்கள்
இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் ஓய்வுநாளை ஒருவன் மீறினால் என்ன தண்டனை கிடைக்கும்?
ஒய்வுநாளில் வேலை செய்தால் அவனை கொலை செய்து விடுங்கள் என்று தேவன் கட்டளையிட்டு இருந்தார்
யாத் 31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
யாத் 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
யாத் 35:2 நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.
இந்த வசனத்தில் ஓய்வு நாளை ஆசாரிக்க வேண்டும் என்பதை எடுத்து கொள்ளுவார்கள் அதில் வேலை செய்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்று கொள்ள மாட்டார்கள் அதை பற்றி கேட்டால் அது மோசேயின் பிரமாணம் அது சிலுவையில் முடிக்கப்பட்டது என்பார்கள்
ஓய்வுநாளில் விறகுபொறுக்கின மனிதனை சபையார் எல்லாரும் சேர்ந்து கல்லெறிந்து கொன்று போட்டார்கள்
எண் 15:32 இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
எண் 15:35 கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.
எண் 15:36 அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
அப்படியானால் இன்றைக்கு ஓய்வுநாள் பிரமாணத்தை பின்பற்றிக் கொண்டு இருப்பவர்கள் இந்த சட்டத்திட்டங்களை பின்பற்றுகிறார்களா?
இதை நீங்கள் அவர்களிடத்தில் கேட்டால் இது மோசேயின் பிரமாணம் என்பார்கள்
தேவனுடைய பிரமாணமும் மோசேயின் பிரமாணமும் இரண்டும் ஒன்றுதான் என்பதை வசன ஆதாரத்தோடு பின்வரும் பாடங்களில் படிப்போம்
புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்தில் பாவ அட்டவணையில் ஒய்வுநாளை மீறுதல் பாவம் என்றே தண்டனைக்குரிய குற்றம் என்றே எந்தவொரு வசனமும் சொல்லவில்லை
இயேசு கிறிஸ்து மனிதனுடைய இருதயத்தை தீட்டுப்படுத்தும் 13 பாவங்களை குறிப்பிடுகிறார்
மாற் 7:20 மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
மாற் 7:21 எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
மாற் 7:22 களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
மாற் 7:23 பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை
பவுல் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்கிறவர்கள் மரணத்திற்கு பாத்திரராயிருக்கிறார்கலொன்று 23 பாவங்களை குறிப்பிடுகிறார்
ரோம 1:28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
ரோம 1:29 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
ரோம 1:30 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
ரோம 1:31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
ரோம 1:32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை
பவுல் இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை என்று 17 பாவங்களை குறிப்பிடுகிறார்
கலா 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்
கலா 5:20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்
கலா 5:21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை
பவுல் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியற்றவர்கள் என்று 7 பாவங்களை குறிப்பிடுகிறார்
எபே 5:3 மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.
எபே 5:4 அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
எபே 5:5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
எபே 5:6 இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
எபே 5:7 அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்.
இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை
பவுல் கடைசி கால கொடிய பாவங்கள் என்று 19 பாவங்களை குறிப்பிடுகிறார்
2தீமோ 3:1 மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
2தீமோ 3:2 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
2தீமோ 3:3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
2தீமோ 3:4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
2தீமோ 3:5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை
அப்போஸ்தலனகிய யோவான் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் இன்று 8 பாவங்களை குறிப்பிடுகிறார்
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை
யோவான் தேவ ராஜ்யத்துக்கும் அவர் சமூகத்துக்கும் புறம்பே இருப்பார்கள் 6வித பாவங்களை குறிப்பிடுகிறார்
வெளி 22:15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை
கிறிஸ்துவின் பிரமாணத்தில் இல்லாத ஒன்றை இவர்கள் விசுவாசித்து போதித்துக் கொண்டிருக்கிறார்கள்
கிறிஸ்துவின் பிரமாணத்தில் ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசரித்தார்கள் என்று எந்த ஒரு ஆதாரத்தையும் இவர்களால் காண்பிக்க முடியாது
கிறிஸ்துவின் பிரமாணத்தில் கற்பனை என்று வந்தால் இவர்கள் 10 கற்பனை என்று யூகித்து கொள்வார்கள்
பத்து கட்டளையையும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள்
(பத்து கற்பனைகளைக் காட்டிலும் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பிரமாணத்தில் மேன்மையான கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது அதையும் நாம் வரும் பாடங்களில் கற்றுக் கொள்வோம்)
ஓய்வு நாள் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்குமானால் அது மீறப்படுவது மிக பெரிய பாவம் என்றால் புதிய ஏற்பாட்டின் பாவத்தின் பட்டியலில் ஒரு வசனத்தில் கூட ஏன் பரிசுத்த ஆவியானவர் சொல்லவில்லை?
கிறிஸ்துவின் சபைகளுக்கு எழுதப்பட்ட 21 நிருபங்களில் எந்த ஒரு நிருபத்திலும் ஓய்வு நாளை ஆசரியுங்கள் என்று பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பேசின அப்போஸ்தலர்களால் எந்த ஒரு கட்டளையும் கொடுக்கப்படவில்லை
கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த பிரமாணத்தில் ஓய்வுநாளை மீறுவது பாவத்தின் பட்டியலில் வரவில்லை ஏனென்றால் அது கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படவில்லை
யாக் 2:12 சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment