Friday, 27 May 2022

மனைவிகள் தங்கள் புருஷர்களை எப்படி பார்க்க வேண்டும்?

பாடம்:14  விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?                                         

மனைவிகள் தங்கள் புருஷர்களை எப்படி பார்க்க வேண்டும்?

புருஷர்கள் தங்களுடைய மனைவிகளை எப்படி நேசித்து அன்பு செலுத்தி அவர்களை பார்க்க  வேண்டும் என்பதை குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம் 

மனைவி தன் கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற கட்டளையை எத்தனை மனைவிகள் உணர்ந்து இருக்கிறார்கள்

கணவன் தன் மனைவி தனக்கு  கீழ்ப்படியக்கூடிய அளவுக்கு அவள் மீது அக்கறையும் அன்பும் காண்பிக்க  வேண்டும்

மனைவி தன் புருஷன் தன் மீது அன்பும் அக்கறையும் காண்பிக்கிற அளவுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்

நிறைய குடும்பங்களின் பிரச்சனைகளுக்கு கணவன் மனைவியினிடத்தில் அன்பும் கீழ்ப்படிதலும் குறைந்து போவதுதான் காரணமாய் இருக்கிறது 

நிறைய மனைவிகள் தங்கள் புருஷர்களை வாட போட என்றும் வா  போ என்று மரியாதை குறைவாக  அழைப்பதும் பேசுவதும் இன்றைக்கு நாகரீகமாக இருக்கிறது 

இப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் தேவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது 

மனைவிகள் தங்கள் புருஷர்களை எப்படி அழைக்கிறாள்?

சாலமோனை அவள் என் நேசர் என்றும் என் ஆத்தும நேசர் என்றும்  அழைத்து இருக்கிறாள் 

மனைவியானவள் தங்கள் புருஷர்களை எப்படி அழைக்கிறார்கள்?

அநேகர் தங்களுடைய புருஷர்களை மரியாதையோடு எல்லாம் அழைப்பது இல்லை, இன்றைக்கு புருஷர்களுக்கு செலுத்த வேண்டிய கனத்தை அநேக மனைவிகள் செலுத்துவதில்லை

மனைவிகள் தங்கள் புருஷர்களிடத்தில் எப்போதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
1பேது 3:1 அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
1பேது 3:2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.

மனைவியானவள் புறம்பான அலங்கரிப்பு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது
1பேது 3:3 மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

இந்த புறம்பான அலங்கரிப்பு தேவனுடைய பார்வையில் எப்படி இருக்கிறது?
லூக் 16:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற இருதயத்தில் மறைந்திருக்கிறமே குணமே அலங்காரமாயிருக்க வேண்டும்

இந்த அலங்கரிப்பே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது
1பேது 3:4 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

மனைவிகளுக்கு சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி இருக்கும் என்றால் அவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கையாக இருப்பார்கள் மேலும் அவர்கள் தங்களுடைய புருஷர்களுக்கு கீழ்ப்படிந்து தங்களை அலங்கரிப்பார்கள்
1பேது 3:5 இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.

சாராள் தன்னுடைய புருஷனாகிய ஆபிரகாமை எப்படி சொல்லி அழைத்து தன்னை கீழ்ப்படித்தினாள்?

ஆபிரகாமை அவள் எஜமான் என்று சொல்லி தன்னை தாழ்த்தி தாழ்மையுள்ளவளாக இருந்தாள்
1பேது 3:6 அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

புருஷனுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள் மனைவி என்பதை புரிந்து கொள்ளுங்கள்
1கொரி 11:9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.

ஒவ்வொரு மனைவியும் உலகத்தில் எல்லா ஆண்மகனைக் காட்டிலும் முற்றிலும் அழகுள்ளவர் என்பதையும் அக்கரையுள்ளவர்  தன் புருஷன் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
 
சாலமோனை அவருடைய மனைவி எப்படி பார்த்தாள்?

புருஷனை தவிர மனைவியானவளுக்கு எந்த சிநேகிதரும் இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
உன் 5:16 அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

சாலமோன் தன்னுடைய நிழல் என்பதையும் அவரால் தான் போஷிக்கப்படுகிறேன் என்பதையும் அவள் அறிந்திருந்தாள்
உன் 2:3 காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.

தன்னை அவர் முழுவதுமாக நேசிக்கிறார் என்பதை அவள் அறிந்திருந்தாள் 
உன் 2:4 என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.

தன்னுடைய நேசரைப் பற்றி அவளுடைய பார்வை எப்படி இருந்தது?
உன் 5:9 ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?

பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் என்பதை அறிந்து இருந்தாள்
உன் 5:10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.

எல்லா ஆண்களைக் காட்டிலும் உங்கள் கணவர் சிறந்தவர் என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள் 

சாலமோனுடைய மனைவியைப் போல ஒவ்வொரு ஸ்திரீயும் தன் சொந்த புருஷர்களை மனப்பூர்வமாக அன்பு செலுத்த கற்றுக் கொள்ள வேண்டும் 
உன் 5:11 அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.
உன் 5:12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
உன் 5:13 அவர் கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
உன் 5:14 அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன் வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
உன் 5:15 அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.

உலகத்தால் மன்மதன் என்று அழைக்கப்பட்டவர்களை இந்த சமுதாயம் ஆச்சரியமாக பார்த்தாலும் அவர்கள் தேவனுடைய பார்வையில் அருவருப்பனவர்களும் விபசாரக்கரர்களுமாய் இருக்கிறார்கள் அவர்களில் பெரும்பாலனோர் தங்களுடைய இல்லற வாழ்க்கையில் தோற்றவர்கள் என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் எங்களோடு தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள அன்போடு அழைக்கிறோம்

ஆராதனை நேரம்
ஞாயிறு காலை 
9:30 to 11:30 AM
7:00 to 8:00 PM
வேத வகுப்பு 
வியாழன் மாலை 
7:00 to 8:00 PM

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment