Tuesday, 17 May 2022

விவாகத்திற்கு பின்பு ஏற்படும் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன?

பாடம்:11 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?                                    

விவாகத்திற்கு பின்பு ஏற்படும் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன?

திருமணத்திற்கு பின்பு தங்கள் துணையை புரிந்து கொள்ளாத தம்பதிகளிடம் நிறைய குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விடுகிறது

திருமணம் என்பது அநேகருடைய முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

உங்கள் திருமணத்திற்கு யாருடைய தயவும் யாருடைய முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது?
1) தேவன்
2) உங்களுடைய பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும்
3)தேவனுடைய பிள்ளைகள் (சபையின் விசுவாசிகள்)
4) உங்களுடைய சொந்தங்களும் பந்தங்களும்

தேவன் விவாக உடன்படிக்கையில் மணமக்களை இணைத்தாலும் கூட இப்படி அநேகருடைய முயற்சிகளும் அதில் இருக்கிறது

உங்களுடைய திருமணம் தேவனுடைய ஆசீர்வாதத்தினாலும் அவருடைய திட்டத்தினாலும் உருவானது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது 

இப்படி சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் தேவனுடைய ஆசீர்வாதத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட திருமண வாழ்க்கையை சிறிய பிரச்சனைகளுக்காக ஒருபோதும் முறித்து போட்டு விடாதீர்கள்

கணவன் மனைவிக்குள்ளும் இருக்கக்கூடிய எந்தவொரு பிரச்சனைகளின் நிமித்தம் அவர்கள் ஒரு போதும் சண்டையிட்டுக் கொள்ளுவதோ அல்லது பிரிந்து போவதோ கூடாது

திருமண வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா பிரச்சனைகளும் நம்முடைய வேதாகத்தில் தீர்வு இருக்கிறது
2தீமோ 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2தீமோ 3:17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

திருமணத்தைப் பற்றி தேவனுடைய திட்டங்களை நாம் சரியாக புரிந்து வைத்து இருக்க வேண்டும் 

திருமணத்திற்கு முன்பு தனியாக இருந்த நீங்கள் திருமணத்திற்கு பின்பு உங்கள் வாழ்நாள் முழுவதும் இன்னொருவருக்கு கடமைப்பட்டு வாழ வேண்டி இருக்கிறது, உங்களுக்கென்று விவாக கடமைகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் 

திருமணம் என்பது உங்கள் தேவைகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொள்ளுவதற்காக அல்ல உங்கள் துணையின் தேவைகளையும் நிறைவேற்ற கடமைப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

வேத வாக்கியம் சொல்லுகிறபடி நீங்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் அன்பு செலுத்துவீர்கள் என்றால் உங்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமானதாகவும் இருக்கும்

கணவன் மனைவிக்குள்ளே சுயநலம் இருக்கும் என்றால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்காது

கணவன் மனைவிக்குள்ளே என்னென்ன பிரச்சனைகள் வருகிறது?

1) கணவன் மனைவிக்குள்ளே பாலியல் உறவுகளில் பிரச்சனைகள் வருகிறது
2) கணவன் தன் பெற்றோர்களுடைய வீட்டை மனைவி மதிக்க வேண்டும் என்று விரும்புகிறான் ஆனால் அப்படி மனைவி மதிக்காத போது அவர்களுக்குள்ளே வெகு சீக்கிரத்திலே பிரச்சனைகளும் உண்டாகின்றன
3)மனைவிமார்கள் தங்களுடைய பெற்றோர்களுடைய வீட்டை கணவன் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் ஆனால் அவர்கள் புருஷனுடைய வீட்டைக் குறித்து அவர்கள் அதிக அக்கரைப்படுவதில்லை,இதின் நிமித்தமே குடும்பத்தில் பிரச்சனைகள் எழும்புகிறது
4) கணவனுக்கு மனைவி கீழ்ப்படியாத போதும் கணவன் மனைவியினிடத்தில் அன்பு செலுத்த போதும் அங்கே பிரச்சனைகள் வருகிறது
5) கணவனின் வீட்டாரோ அல்லது மனைவியின் வீட்டாரே குடும்ப விசயங்களில் அடிக்கடி தலையிடும் போது இருவருக்கும் இடையே பிரச்சனைகள் எழும்புகிறது
6) கலாச்சார ரீதியாகவும் கணவன் மனைவிக்குள்ளே பிரச்சனைகள் எழும்புகிறது

இப்படி அநேக பிரச்சனைகள் எழும்பினாலும் இதையெல்லாம் மேற்கொண்டு கடந்து தான் நம்முடைய குடும்ப வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும், இதை கடக்க முடியாதவர்கள் தான் தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியை தழுவி விடுகிறார்கள்

ஒரு விசுவாசமுள்ள கணவன் தன் வீட்டாரை அவன் சரியாக விசாரிக்க வேண்டும்
1தீமோ 5:8 ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.

புருஷர்கள் தங்கள் மனைவியின் மீதும் தங்கள் பிள்ளைகள் மீதும் உங்களுக்கு எந்தஅளவுக்கு அன்பும் அக்கரையும் இருக்கிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் 

ஒரு விசுவாமுள்ள மனைவி பிள்ளைகளை பெறவும் வீட்டை நடத்தவும் அவளுக்கு பொறுப்பு கொடுக்கப்படுகிறது
1தீமோ 5:14 ,,, விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.
தீத்து2 :4 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
தீத்து 2:5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.

மனைவிகள் எத்தனை பேர் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படுகிறார்கள் ?

கணவனும் மனைவியும் தங்களுக்குள் இருக்கக்கூடிய பாலியல் தேவைகளை ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்
1கொரி 7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
1கொரி 7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.
1கொரி 7:4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
1கொரி 7:5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்

புருஷர்களே மனைவிகளே நீங்கள் உங்களுடைய துணையாளியின் பாலியல் தேவைகளை சரியாக பூர்த்தி செய்கிறீர்களா?

கணவனும் மனைவியும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்வோம் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment