Sunday, 15 May 2022

திருமண உடன்படிக்கை என்பது என்ன?

பாடம் :10 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?

திருமண உடன்படிக்கை என்பது என்ன?

கணவனும் மனைவியும் திருமணத்தில் செய்யும் உடன்படிக்கையில் தான் தேவன் இணைக்கிறார்

இந்த திருமண உடன்படிக்கையை எத்தனை பேர் கவனித்து கேட்கிறார்கள்?

கிறிஸ்தவ திருமணத்தில் திருமண உடன்படிக்கையை ஊழியர் சொல்ல சொல்ல மணமகனும் மணமகளும் சொல்லுகிறார்களே தவிர அதை உணர்ந்து ஏற்று கொண்டு தங்கள் இருதயத்திலிருந்து எத்தனை பேர் அறிக்கையிடுகிறார்கள்?

அந்த திருமண உடன்படிக்கை என்ன?

மணமகன் மணமகளிடத்தில் செய்யும் உடன்படிக்கை என்ன?

________________(மணமகன் பெயர்)____________ ஆகிய நான் தேவ பிரமாணத்தின் படி பரிசுத்த திருமண நி̈லைமையில் ஒருமித்து வாழ __________(மணமகள் பெயர்)______ ஐ எனக்கு வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு, சுகத்திலும், துக்கத்திலும் நேசித்து, ஆதரித்துக் கனப்படுத்தி, காப்பாற்றி இருவரும் உயிரோடிருக்குமளவும் பிறர் முகம் பாராமல் இவளுக்கே கணவனாய் இருப்பேன்.

திருமணம் ஆனா பின்பு கணவன் இந்த உடன்படிக்கையின் படி சரியாய் இருக்கிறாரா? 

மணமகள் மணமகனிடத்தில் செய்ய வேண்டிய உடன்படிக்கை என்ன?

__________________(மணமகள்)___________ ஆகிய நான் தேவ பிரமாணத்தின்படி பரிசுத்த திருமண நிலைமையில் ஒருமித்து வாழ ____________(மணமகன்)_________ ஐ எனது வாழ்க்கை துணைவராக ஏற்றுக் கொண்டு, இவருக்கு கீழ்படிந்து பணிவிடை செய்து, சுகத்திலும், துக்கத்திலும் இவரை நேசித்து, கனப்படுத்தி, காப்பாற்றி இருவரும் உயிரோடிருக்கு மளவும் பிறர் முகம் பாராமல் இவருக்கே மனைவியாக இருப்பேன்.

மனைவி இந்த உடன்படிக்கையின் படி சரியாய் இருக்கிறார்களா? 

இருவரும் சேர்ந்து கையை பிடித்து செய்ய வேண்டிய உடன்படிக்கை என்ன? 

மணமகன் சபையார்க்கும் மற்ற எல்லாருக்கும் முன்பாக செய்யும் உடன்படிக்கை என்ன?

தேவனுடைய சமூகத்தில் இங்கு கூடி வந்திருக்கும் யாவரும் சாட்சியாக ___________(மணமகன்)____________ ஆகிய நான் _________(மணமகள்)____________ ஆகிய உன்னை, இன்று முதல் எனக்கு வாழ்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டு, எனக்கு உண்டான யாவற்றையும் உனக்கு கொடுத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின்படி நன்மையிலும், தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் நாம் உயிரோடிருக்குமளவும் கிறிஸ்து சபைக்கு தலையாயிருந்து, அதில் அன்பு கூர்ந்து அதை தேவனுக்கு முன் மகிமையாக நிறுத்தும்படிக்கு தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தது போல நானும் எல்லா நிலையிலும் நமது குடும்பத்திற்கு தலையாய் இருந்து, உன்னில் அன்புகூறவும், உன்னை போஷித்து காப்பாற்றவும் ஆவிக்குரிய வாழ்க்கையில் நீ வளர உதவியாய் இருக்கவும் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்று தேவனுக்கு முன்பாகவும், ஊழியர்களுக்கு முன்பாகவும், சமுதாயத்திற்கு முன்பாகவும் உனக்கு வாக்குக் கொடுக்கிறேன்

கணவன் உண்மையிலே மனைவிக்கு தலையாக இருந்து அவளிடத்தில் அன்பு செலுத்தி தங்களுடைய கடமையை சரியாய் செய்கிறார்களா? அல்லது தேவனுடைய சத்தியத்தை மாற்றி மனைவி தலையாக இருக்கட்டும் என்று கீழ் அடங்கி போகிறார்களா?

மணமகள் சபையார்க்கும் மற்ற எல்லாருக்கும் முன்பதாக செய்யும் உடன்படிக்கை என்ன?

தேவனுடைய சமூகத்தில் இங்கு கூடி வந்திருக்கும் யாவரும் சாட்சியாக __________(மணமகள்)___________ ஆகிய நான், ____________(மணமகன்)____________ ஆகிய உம்மை, 
இன்று முதல் எனக்கு வாழ்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டு, எனக்கு உண்டான யாவற்றையும் உமக்கு கொடுத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின்படி நன்மையிலும், தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் மரணம் நம்மை பிரிக்குமளவும் எல்லா நிலையிலும் உம்மை நேசிக்கவும் பயபக்தியோடு ̧கீழ்ப்படியவும் தேவனுக்கு முன்பாகவும், ஊழியர்களுக்கு முன்பாகவும், சமுதாயத்திற்கு முன்பாகவும் உமக்கு வாக்குக் கொடுக்கிறேன்.

மனைவி உண்மையிலே கணவனை தலையாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு கீழ்ப்படிகிறார்களா அல்லது கணவனுக்கே தலையாக இருக்கிறார்களா?

இன்றைக்கு நமக்கு இந்த உடன்படிக்கை ஞாபகத்தில் இருக்கிறதா என்பதே கேள்வி குறிதான் 

புதிதாய் திருமணத்தில் இணைய போகிறவர்கள் இந்த உடன்படிக்கையை மனதில் வைத்து கொள்ளுங்கள் 
மல்கியா 2:14......... கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார். உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே. 

மோதிரமோ அல்லது மாலையோ அல்லது மாங்கல்யமோ அணிந்து கொண்டால்
திருமணம் முடிந்தது என்று முடிவு செய்து விடுகிறார்கள் 

மேலே சொன்ன உடன்படிக்கைக்கு அடையாளம் தான் மோதிரமோ அல்லது மாங்கல்யமோ அல்லது மற்ற காரியங்களோ ஆகும்

கணவனும் மனைவியும் தாங்கள் செய்த திருமண உடன்படிக்கையை மீறாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

உடன்படிக்கையை மீறுகிறவர்களை தேவன் ஏற்றுக் கொள்ளுவதில்லை 

இந்த உடன்படிக்கையின் படி மரணம் தான் இருவரையும் பிரிக்க வேண்டும்

திருமண உடன்படிக்கையில் ஆணையிட்டு அதில் நஷ்டம் வந்தாலும் நாம் தவறாமல் இருக்க வேண்டும்
சங்கீதம் 15:4 ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன், கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான், ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக்கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment