பாடம் :12 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?
புருஷர்கள் தங்கள் மனைவிகளை எப்படி நேசிக்க வேண்டும்?
திருமணத்தின் நோக்கம் என்னவென்று தெரியாமலே அநேகர் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
நீங்கள் எதற்காக திருமணம் செய்து கொண்டீர்கள்?
1) பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக திருமணம் செய்து கொண்டீர்களா?
அல்லது
2) சமுதாயத்திற்காக திருமணம் செய்து கொண்டீர்களா?
அல்லது
3) பாலியல் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக திருமணம் செய்து கொண்டீர்களா?
அல்லது
4) உங்கள் பாலினத்தை நிரூபிப்பதற்காக திருமணம் செய்து கொண்டீர்களா?
மேலே சொல்லப்பட்டவைகளுக்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டு இருப்பீர்கள் என்றால் உங்கள் திருமண வாழ்க்கை தேவனுக்கு ஏற்றபிரகாரமாகவும் சந்தோஷமாகவும் ஒரு போதும் அமையாது
திருமணம் என்பது தேவனால் ஏற்படுத்தப்பட்ட உன்னதமான திட்டம் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அதற்கு ஒப்புக் கொடுக்கும் போது தான் அது மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கையை ஏற்படுத்தும்
தேவனுடைய திருமண திட்டத்தில் ஒரு பாகம் நாம் தேவபக்தியுள்ள சந்ததியைப் பெற வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்
மல் 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ,,,,
பாலியல் உறவுகள் மூலமாக தான் நாம் தேவ பக்தியுள்ள சந்தியை பெற முடியும்
விவாக மஞ்சத்தைப் பற்றி தேவனுடைய எச்சரிப்பு என்ன?
எபிரேயர் 13:4
விவாகம் யாவருக்கும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
விவாக மஞ்சத்தை அசுசிப்படுத்தக்கூடிய விபச்சாரகாரரையும் வேசி கள்ளரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்
மனைவியைப் பற்றி புருஷனுடைய பார்வை இப்படி இருக்கிறதா?
நீதி 5:18 உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
நீதி 5:19 அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.
இந்த வசனத்தில் சில வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள்,
உங்கள் மனைவியை நீங்கள் இப்படிபார்க்கிறீர்களா?
1) உன் இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு
2) அவள் நேசிக்கப்படத்தக்க பெண்மான்
3) அழகான வரை ஆடு
4) அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் திருப்தி செய்ய வேண்டும்
5) அவளுடைய நேசத்தால் எப்பொழுதும் மயங்கி இருக்க வேண்டும்
இப்படி செய்கின்ற போது தான் நம்முடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படும்
மேலே சொன்னது தேவனுடைய ஆலோசனையாக இருக்கிறது
மனைவியிடத்தில் பாலியல் உறவில் திருப்தி அடையாதவன் வேறு எங்கேயும் ஒருபோதும் திருப்தியடைய மாட்டான்
நீதி 5:15 உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.
கீழே உள்ள வசனத்தில் பாய்வதாக என்று இருக்கிறது ஆனால் எபிரெய வேதாமத்தில் பாயலாமா என்று கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது
நீதி 5:16 உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
நீதி 5:17 அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.
ஒரு போதும் நம்முடைய ஊற்றுகள் வெளியிலும் நம்முடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாயக் கூடாது
அநேக நேரங்களில் கிறிஸ்தவர்கள் பாலுறவென்பது அசுத்தமானது தீட்டானது அல்லது அசிங்கமானது என்ற எண்ணமுடையவர்களாய் இருக்கிறார்கள் ஆனால் அது தவறு
கணவனும் மனைவியும் பாலுறவில் சேருவது பாவம் என்று சில கள்ள போதகர்கள் போதித்து கொண்டு இருக்கிறார்கள்
அவர்களுக்கு எல்லாம் ஒரு போதும் செவி கொடுத்து உங்கள் குடும்பத்தை இழந்து போகதீர்கள்
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பாலுறவு இருக்கும் என்றால் அது சுத்தமானதும் தேவனுக்கு ஏற்றதாயிம் இருக்கிறது
நீதி 5:20 என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
புருஷன் தன் மனைவியின் நேசத்தால் மாத்திரம் மயங்கி இருக்க வேண்டும்
தேவனுக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment