Sunday, 8 May 2022

இயேசு கிறிஸ்து ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசரித்தாரா?

பாடம் :7 ஒய்வு நாள் பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?                                   

இயேசு கிறிஸ்து ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசரித்தாரா?

இயேசு கிறிஸ்து ஓய்வு நாளை ஆசரித்தார் ஆகையால் நாமும் ஆசரிக்க வேண்டும் என்று ஓய்வு நாள் வருகை ஆசரிப்பு சபையார் சொல்லுகிறார்கள் 

ஓய்வுநாள் சபையாருக்கு நீங்கள் எவ்வளவு வேத ஆதாரங்களை காண்பித்தாலும் அதை எல்லாம் அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசரித்தாரா என்பதை புரிந்து கொள்ளுவதற்கு முன்பு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

இயேசு கிறிஸ்து யூதன் என்பதையும் அவர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ் பிறந்தவர் என்பதையும்  நாம் உணர்த்து கொள்ள வேண்டும்
கலா 4:5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.

நியாயப்பிரமணத்திற்கு கீழ் பிறந்த எந்த இஸ்ரவேலனும்(யூதனும்) நியாயப்பிரமணத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்கிற அடிப்படை சத்தியங்கள் கூட இவர்களுக்கு தெரிவது இல்லை 

யூதர்கள் எப்படி நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமோ அதைப் போல இயேசு கிறிஸ்துவும் அதற்கு கீழ்ப்படிந்தார்
மத் 5:17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

இயேசு கிறிஸ்து சிலுவையின் மரணபரியந்தம் நியாயப்பிரமணத்திற்கு கீழ்ப்படிந்தார் 

இயேசு கிறிஸ்து  நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் அழிக்க வராமல் நியாயப்பிரமணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் சிலுவையில் நிறைவேற்றி முடித்தார் 

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசரித்தாரா?

ஆம் இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசரித்தார் ஏனென்றால் அவர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவராக வந்தார்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளுக்கும் கர்த்தராய் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தது கொள்ள வேண்டும்
மாற்  2:28 ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

தேவன் தம்முடைய கிரியை செய்வதை அவர் விட்டு ஓய்ந்து இருப்பதில்லை தொடர்ந்து எல்லா நாட்களிலும் அவர் நன்மை செய்யக் கூடியவராக இருக்கிறார் அதேபோல் இயேசு கிறிஸ்துவும் தொடர்ந்து எல்லா நாளும் நன்மை செய்யக் கூடியவராக இருந்தார் அதனால் தான் ஓய்வு நாளுக்கும் அவர் கர்த்தராக இருக்கிறார்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளிலும் நன்மை செய்த படியால் அவர் ஓய்வுநாளை ஆசரிக்கவில்லை என்று யூதர்கள் அவர்மேல் குற்றம் சாட்டினார்கள்
மாற்கு 3:2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
யோவான் 5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

ஓய்வுநாளை மீறினார்கள் என்று  இயேசு கிறிஸ்துவின் சீஷர்களை  பரிசேயர்கள் குற்றம் சாட்டினார்கள்
மத் 12:1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
மத் 12:2 பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.

இயேசு கிறிஸ்து அதற்கு என்ன பிரதியுத்திரம் கொடுத்தார்?

முதலாவது தாவீது பசியாயிருந்த போது ஆசாரியர்கள் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களை புசித்தது அது குற்றமில்லை என்றார்
மத் 12:3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
மத் 12:4 அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.

தாவீது ஓய்வு நாளில் ஆசாரியனிடத்தில் போய் தேவ சமுகத்து அப்பத்தை வாங்கி அவரும் அவரோடு இருந்தவர்களும் புசித்த போதும் அவர்கள் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் 

இரண்டாவது ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல் ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும் அவர்கள் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்றார்
மத் 12:5 அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

ஓய்வுநாளை எல்லா மனுஷர்களும் ஆசரிக்க வேண்டும் என்று வாதிடுகிறவர்களே இந்த ஆசாரியர்கள் தேவாலயத்தில்  ஓய்வுநாளில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்களே இவர்களை தேவன் எப்படி நியாயந்தீர்ப்பார் என்று சொல்லுங்கள்

1) ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் ஓய்ந்திருப்பது இல்லை
2) ஓய்வு நாளை வேலை நாளாக்கிருக்கிறார்கள்
3) ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் அவர்கள் குற்றமில்லாதிருக்கிறார்கள்

ஓய்வுநாள் மனுஷனுக்கு உண்டாக்கப்பட்டது என்றால் இவர்கள் மனுஷர்கள் இல்லையா? இவர்கள் ஏன் இந்த ஓய்வு நாள் பிரமாணத்திற்கு கீழ்ப்படியவில்லை

கேள்வி இதுதான் ஓய்வு நாளில் வேலை செய்த எல்லா ஆசாரியர்களும் நியாயத்தீர்ப்பு நாளில் குற்றவாளியாக நிறுத்தப்படுவார்களா?
(ஓய்வுநாள் எந்த மனிதர்களுக்கு உண்டாக்கப்பட்டது என்பதை பின்வரும் பாடங்களில் கற்றுக்கொள்வோம்)

ஆனால் இந்த ஓய்வுநாள் சபையார் ஆசாரியர்கள் ஓய்வு நாளில் வேலை செய்யலாம் அது தவறு இல்லை தேவன் அவர்கள் கட்டளை கொடுத்து இருக்கிறார் என்கிறார்கள்

மேலும் பரிசேயர்கள் ஓய்வுநாள் பிரமாணத்தை வைத்துக் கொண்டு சீஷர்களை இரக்கமில்லாமல் குற்றப்படுத்த முயற்சி செய்தார்கள் அதை இயேசு கிறிஸ்து கடிந்து கொண்டார்
மத் 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.

இன்றைக்கும் ஓய்வுநாள் பிரமாணத்தை வைத்துக்கொண்டு குற்றப்படுத்த கூடியவர்கள் இந்த பரிசேயர்களைப் போல் இருக்கிறார்கள்

இயேசு கிறிஸ்து தேவாலயத்திலும் பெரியவர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
மத் 12:6 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தேவாலயத்தை வைத்து தான் நியாயப்பிரமாணம் இருக்கிறது இயேசு கிறிஸ்து தேவாலயத்திலும் பெரியவராக இருக்கிறார்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளுக்கும் கர்த்தராக இருக்கிறார்
மத் 12:8 மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

இயேசு கிறிஸ்து  ஓய்வு நாள்  பிரமணத்திற்கு கீழ்ப்பட்டவராக   வந்தாலும் அவர் ஓய்வு நாளுக்கும் கர்த்தராக இருந்தார்

கர்த்தருக்கு சித்தமானல் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment