பகுதி:6 ஒய்வு நாள் பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?
இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏன் தேவன் ஒய்வுநாளை கட்டளையிட்டார்?
ஓய்வு நாள் வருகை சபையாருக்கு நீங்கள் எத்தனை வேத வாக்கியங்களை எடுத்து காண்பித்தாலும் அதற்கு எல்லாம் செவி கொடுக்க மாட்டார்கள்
அவர்கள் சொல்லுவது எல்லாம் பத்து கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும் ஓய்வு நாளில் தான் சபை கூடி வர வேண்டும் என்பதுதான்
தேவன் ஆறுநாளைக்குள்ளே தம்முடைய கிரியையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஒய்ந்திருந்தபடியால் தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதை பரிசுத்தமாக்கினார்
ஆதி 2:2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி,தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
ஆதி 2:3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
தேவன் ஒய்வுநாளை ஆசீர்வதித்து அதை பரிசுத்தமாக்கினாலும் தேவன் அந்த ஒய்வு நாளை யாருக்கு கொடுத்தார்?
1) ஆதாம்
2) நோவா
3) ஆபிரகாம்
4) ஈசாக்
5) யாக்கோபு
6) யோசேப்பு
7) யோபு
இங்கே இருக்கிற யாருக்காவது ஒய்வுநாள் பிரமாணத்தை ஆசாரிக்கும் படி கட்டளையிட்டார் என்கிற வேத வாக்கியங்கள் இருக்கிறதா?
இவர்களுக்கு ஏன் தேவன் ஓய்வு நாளை தெரியப்படுத்தவில்லை
தேவன் இவர்களுக்கு ஒய்வுநாளை கொடுத்தார் என்றும் அவர்கள் அதை ஆசாரித்தார்கள் ஒரு வேதவாக்கியங்கள் கூட போதிக்கவில்லை
ஏழாம் ஓய்வு நாள் சபையாரே இதை குறித்து நீங்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்
தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தான் ஓய்ந்திருந்த ஓய்வுநாளை அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களும் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்
யாத் 20:10
ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள் அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
யாத் 20:11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
தேவன் ஆதியாகம புஸ்தகத்திலுள்ள எந்த பரிசுத்தவான்களுக்கும் ஓய்வுநாளை தெரியப்படுத்தவில்லை அதை இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரம் தெரியப்படுத்தினார்
அந்த ஒய்வுநாளை தேவன் யாருக்கு தான் கட்டளையிட்டார்?
எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் அதை கட்டளையிட்டார்
உபா 5:15 நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.
யாத் 31:17 அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.
ஒய்வுநாளை கர்த்தர் யாருக்கு அருளினார்?
இஸ்ரவேல் ஜனங்களுக்கு அருளினார் அதிலே அவர்கள் ஒய்ந்திருந்தார்கள்
யாத் 16:29 பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்....
யாத் 16:30 அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
ஒய்வுநாளை தேவன் யாருக்கு தெரியப்படுத்தினார் என்று நெகேமியா சாட்சி கொடுத்தார்?
நெகே 9:13 நீர் சீனாய் மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
நெகே 9:14 உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி,உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
ஒய்வுநாட்களை இஸ்ரவேல் ஜனங்கள் ஏன் ஆசாரிக்க வேண்டும்?
இஸ்ரவேல் ஜனங்களை பரிசுத்தப்படுத்துகிறவர் கர்த்தர் என்பதை அவர்கள் அறியும்படி தலைமுறைதோறும் தேவனுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றார்
யாத் 31:13 நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
எசே 20:12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
யாத் 20:20 என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
ஒய்வுநாள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் தேவனுக்கும் பரிசுத்தமானது
யாத் 31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
யாத் 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
இஸ்ரவேல் ஜனங்கள் இதை எப்போது வரை ஆசரிக்க வேண்டும்?
யாத் 31:16 ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
இவ்வளவு வேத வாக்கிங்களும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தான் ஒய்வுநாள் பிரமாணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று சாட்சி கொடுக்கிறது
1யோவா 5:9 நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; ,,,,,
நாம் எப்போதும் தேவனுடைய சாட்சியை மாத்திரமே ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏனென்றால் அவர் கொடுக்கக்கூடிய சாட்சி மாத்திரமே சத்தியம் அவருடைய சாட்சி வேத வாக்கியத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது
இன்னும் வரக்கூடிய சத்தியங்களை கவனமாக வேத வாக்கியதோடு ஒப்பிட்டு பாருங்கள்
உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் பின்வரும் பாடங்களில் பதில் இருக்கிறது
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து இன்னும் கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment