பாடம் :9 ஓய்வு நாள் பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?
ஓய்வுநாளை அப்போஸ்தலர்கள் ஆசரித்தார்களா?
இயேசு கிறிஸ்து ஓய்வுநாளிலே என்ன செய்தார் என்பதைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்
ஓய்வுநாள் சபையார் புதிய ஏற்பாட்டில் சில வசனங்களை எடுத்துக் கொண்டு பாருங்கள் இவர்கள் ஓய்வுநாளை ஆசரித்தார்கள் என்று மேற்கோள் காண்பிக்கிறார்கள்
அந்த வசனங்களைக் குறித்து நாம் கவனித்து பார்ப்போம்
மத்தேயு மாற்கு லூக்கா யோவான் போன்ற சுவிசேஷ புஸ்தகங்களின் சம்பவங்கள் எல்லாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கிற இஸ்ரவேல் (யூதர்கள்) தேசத்தில் நடக்கிற சம்பவங்கள் என்பதை மனதிலே வைத்து கொள்ளுங்கள்
இஸ்ரவேலர்கள் நியாயப்பிரமாணத்தின் சகல சட்ட திட்டங்களுக்கும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும்
ஓய்வுநாள் சபையார் இந்த வசனங்களை மேற்காண்பிக்கிறார்கள்
லூக் 23:54 அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
லூக் 23:55 கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
லூக் 23:56 திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
இயேசுகிறிஸ்து பிறந்ததும் வளர்ந்ததும் மரித்ததும் அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்ததும் எல்லாம் இஸ்ரவேல் தேசம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்
இங்கே ஓய்வு நாளை ஆசரித்த ஸ்திரீகள் எல்லாம் யார்?
இங்கே ஓய்வுநாளை ஆசரித்த ஸ்திரீகள் எல்லாம் யூத ஸ்திரீகள் என்பதையும் அது இஸ்ரவேல் தேசம் என்பதையும் அவர்கள் நியாயப்பிரமாணத்தின்படியும் தேச சட்டத்தின்படியும் அவர்கள் ஓய்வுநாளை ஆசாரிக்க வேண்டும் அதனால் தான் அவர்கள் நியாயப்பிரமாணத்தின் கற்பனைகளின்படி ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்
அப்போஸ்தலர்கள் ஓய்வுநாளை ஆசாரித்தார்களா?
இயேசு கிறிஸ்து முதலில் இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டார்
மத் 15:24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.
லூக் 2:34 பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அப்போஸ்தலர்களுக்கு இயேசு கிறிஸ்து முதலில் இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் என்று கட்டளை கொடுத்தார்
மத் 10:6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
இயேசு கிறிஸ்து உலகமெங்கும் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்று கட்டளையிட்டாலும் அப்போஸ்தலர்கள் எந்த தேசத்திற்கும் போனாலும் முதலில் யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்கு போய் சுவிசேஷத்தை பிரசங்கிப்பார்கள் அதற்கு பின்பு தான் புறஜாதிகளிடத்தில் போவார்கள் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
இயேசுவை தேவன் இஸ்ரவேலர்களுக்கு தான் வெளிப்படுத்தினார்
அப் 2:22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
இயேசுவை முதலாவது இஸ்ரவேலர்களுக்கு அனுப்பினார் என்று பேதுருவும் பிரசங்கித்தார்
அப் 3:26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
அப் 10:36 எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.
பவுலும் பர்னபாவும் முதலில் சுவிசேஷத்தை இஸ்ரவேலர்களுக்கு தான் முதலில் அறிவித்தார்கள்
அப் 13:45 யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.
முதலாவது தேவ வசனத்தை யூதர்களுக்கு தான் சொல்ல வேண்டும் என்பதை பவுல் பிரசங்கித்தார்
அப் 13:46 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
உலகத்தில் வாழக்கூடிய எல்லா யூதர்களுக்கும் ஓய்வுநாளிலே அவர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் ஜெப ஆலயத்தில் தான் கூடி இருப்பார்கள் என்பதை அப்போஸ்தலர்கள் அறிந்து இருந்தார்கள் அதனால் தான் அவர்கள் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்தில் போய் யூதர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள்
அப் 13:14 அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வு நாளிலே ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.
பவுல் ஓய்வுநாளில் ஜெப ஆலயங்களில் வழக்கமாய் கூடி வருகிற யூதர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்
அப் 13:27 எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.
அப் 13:30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
அப் 13:39 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.
தேவனுடைய சுவிசேஷத்தை மறுபடியும் தங்களுக்கு ஓய்வுநாளில் கூடிவரும் போது போதிக்க வேண்டும் என்று கேட்டார்கள்
அப் 13:42 அவர்கள் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.
அப் 13:44 அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.
புறஜாதியார் இங்கே ஓய்வுநாளை ஆசாரிக்கவில்லை யூதர்கள் கூடி வருகிற ஓய்வு நாளில் தாங்களுக்கும் சுவிசேஷத்தை சொல்லும்படி வேண்டிக் கொண்டார்கள்
பவுல் ஓய்வுநாளில் பட்டணத்துக்கு வெளியே போய் ஆற்றின் அருகே கூடி வந்த ஸ்திரீகளுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள்
அப் 16:13 ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
பவுல் ஓய்வுநாளில் தெசலோனிக்கேய பட்டணத்தில் உள்ள யூதர்களுடைய ஜெப ஆலயத்தில் யூதர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்
அப் 17:1 அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது.
அப் 17:2 பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
அப் 17:3 கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
கொரிந்து பட்டணத்தில் உள்ள ஜெப ஆலயத்தில் வழக்கமாய் கூடி வருகிற யூதர்களுக்கும் கிரேக்கருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்
அப் 18:4 ஓய்வு நாள்தோறும் அவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.
அப் 18:5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.
உலகமெங்கும் இருக்கக்கூடிய யூதர்கள் ஓய்வுநாளில் ஜெப ஆலயங்களில் கூடி வருவார்கள்
பவுல் ஓய்வுநாள் தோறும் ஜெப ஆலயத்திற்கு போனது ஓய்வுநாளை ஆசரிக்க அல்ல அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்க என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment