பாடம் : 08 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?
விவாகத்தைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் பிரமாணம் என்ன போதிக்கிறது?
புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் உபதேசம் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உபதேசத்தை தான் கட்டளையிடுகிறது
கணவனே அல்லது மனைவியோ மரித்து போன பிற்பாடுதான் வேறொரு திருமணம் செய்ய முடியும் என்பதையும் புதிய ஏற்பாடு போதிக்கிறது
இதை குறித்து பின் வரும் நாட்களில் கற்றுக் கொள்ளுவோம்
இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் இஸ்ரவேலர்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும் யாரை திருமணம் செய்யக்கூடாது என்று தேவன் தெளிவாகவே சத்தியத்தை வெளிப்படுத்தி இருந்தார்
அதோடு மாத்திரம் அல்ல திருமண ஒழுக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கட்டளையிட்டு இருந்தார்
புதிய ஏற்பாட்டில் தேவன் திருமணத்தை எப்படிப்பட்ட சட்டத்திட்டங்களை கொடுக்கிறார் என்று கற்றுக் கொள்ளுவோம்
தேவன் கிறிஸ்தவர்களுக்கு திருமண காரியங்களில் கொடுக்கக்கூடிய கட்டளை என்ன?
கிறிஸ்தவர்கள் அந்நிய நுகத்துடன் பிணைக்கப்படக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்
நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமில்லை என்றும் ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் இல்லை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
2கொரி 6:14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவில்லை என்பதையும் அவிசுவாசியுடனே விசுவாசிக்கு பங்கில்லை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்
2கொரி 6:15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
தேவனுடைய ஆலயமாயிருக்கிற நமக்கும் விக்கிரகங்களை சேவிக்கிறவர்களுடனே சம்பந்தமில்லை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்
2கொரி 6:16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
இன்றைக்கு நிறைய கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அந்நிய நுகத்தில் பிணைக்கப்படுவதை குறித்து கொஞ்சமும் கவலைப்படுவதில்லை
இப்படி பிள்ளைகள் அந்நிய நுகத்தில் பிள்ளைகள் பிணைக்கப் படும் போது அவர்கள் எப்படி பக்தியுள்ள சந்ததியை பெறுவார்கள்? என்பதை சிந்திப்பது இல்லை
நாம் தேவனுடைய பிள்ளைகளோடு மாத்திரம் விவாக சம்பந்தம் வைக்கும் போது மாத்திரமே தேவன் நம்மை ஏற்றுக் கொள்ளுவார் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்
2கொரி 6:17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2கொரி 6:18 அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் புறஜாதிகளை(கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்) திருமணம் செய்து, பின்பு கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்தலாம் என்றும் அதன் மூலமாக ஒரு ஆத்துமாவை இரட்சிக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்
அவர்கள் அப்படி சொன்னாலும் அவர்கள் உண்மையில் ஆத்துமா பாரத்தினாலும் அப்படி சொல்லுவதில்லை ஏனென்றால் அவர்கள் ஒன்று காதல் வயப்பட்டு இருக்க வேண்டும் அல்லது பொருளாசை உடையவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஜாதி பார்க்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்
அப்படி விவாகம் செய்து ஒரு ஆத்துமாவை கொண்டு வர முடியுமா?
நாம் அந்நிய நுகத்தில் பிணைக்கப்படும் போது அவர்கள் தேவனை விட்டு விலக செய்து விடுவார்கள்
யாத் 34:16 அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.
உபா 7:3 அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.
உபா 7:4 என்னைப் பின்பற்றாமல் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.
அந்நிய ஸ்திரீகளை விவாகம் செய்த சாலமோன் ஞானியையே அவர்கள் தேவனை விட்டு விலக செய்து அந்நிய தேவர்களை சேவிக்க வைத்தார்கள் என்றால் நம்முடைய நிலைமை எம்மாத்திரம்?
1ராஜா 11:1 ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
1ராஜா 11:2 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.
1ராஜா 11:4 சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.
இஸ்ரவேலர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகம் செய்யலாம் ஆனால் அவர்கள் தங்களுக்குள்ளே (இஸ்ரவேலர்கள்) தான் விவாகம் பண்ண வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருந்தார்
எண் 36:6 கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்.
எண் 36:8 இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.
புதிய ஏற்பாட்டில் விவாகத்தைப் பற்றி தேவனுடைய கட்டளை என்ன?
தேவனுடைய பிள்ளைகள் கர்த்தருக்குள் இருக்கக்கூடியவர்களை விவாகம் பண்ண வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார்
1கொரி 7:39 ,,,, தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்.
கிறிஸ்தவர்கள் திருமணம் செய்யும் போது அவர்கள் கர்த்தருக்குட்பட்டவர்களை மாத்திரமே திருமணம் செய்ய வேண்டும், ஒருபோதும் அந்நிய நுகத்திலே பிணைக்கப்படக்கூடாது
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து விவாக சம்பந்தமான சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment