பாடம்:5 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?
இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேவன் விவாகத்தைப் பற்றி என்ன சட்டத்திட்டங்களை கொடுத்தார்?
முற்பிதாக்களின் காலகட்டத்தில் (ஆதியாகமம்) யாரை திருமணம் செய்யக் கூடாது என்கிற பிரமாணத்தை தேவன் கொடுக்கவில்லை
நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் கொடுக்கும் போது யாரை விவாகம் பண்ண வேண்டும் என்றும் யாரை விவாகம் பண்ணக்கூடாது என்ற சட்டத்திட்டங்களை கொடுத்தார்
கீழே உள்ள திருமண உறவுகள் எல்லாம் தேவனுடைய பார்வையில் அருவருப்பானது
நெருங்கின இனமாகிய ஒருத்தியை விவாகம் பண்ணவோ அவளோடு பாலுறவை வைக்கக் கூடாது என்று தேவன் கட்டளையிட்டார்
லேவி 18:6 ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.
தகப்பனையோ அல்லது தாயையோ விவாகம் பண்ணவோ அல்லது அவர்களோடு பாலுறவு வைக்க கூடாது என்று தேவன் கட்டளையிட்டார்
லேவி 18:7 உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.
லேவி 20:11 தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
சித்தியை திருமணம் செய்யவோ அல்லது பாலுறவு வைக்கவோ கூடாது
லேவி 18:8 உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
உபா 27:20 தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
சகோதரியை விவாகம் செய்யவோ அல்லது பாலுறவு வைக்கவோ கூடாது
லேவி 18:9 உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
லேவி 18:11 உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.
லேவி 20:17 ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
உபா 27:22 தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
பேத்தியை திருமணம் செய்யவோ அல்லது பாலுறவு வைக்கவோ கூடாது
லேவி 18:10 உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம்.
அத்தையை திருமணம் செய்யவோ அல்லது பாலுறவு வைக்கவோ கூடாது
லேவி 18:12 உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.
உபா 27:23 தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
பெரியம்மாவையோ அல்லது சித்தியையோ திருமணம் செய்யவோ அல்லது பாலுறவு வைக்கவோ கூடாது
லேவி 18:13 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.
பெரியப்பாவையோ அல்லது சித்தாப்பாவையோ அல்லது அவர்களுடைய மனைவியையோ திருமணம் செய்யவோ அல்லது பாலுறவு வைக்கவோ கூடாது
லேவி 18:14 உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
லேவி 20:20 ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள்.
மருமகளை திருமணம் செய்யவோ அல்லது அவளோடு பாலுறவு வைக்கவோ கூடாது
லேவி 18:15 உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது;அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.
லேவி 20:12 ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள் அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
சகோதரனுடைய மனைவியாகிய அண்ணியையோ அல்லது கொழுந்தியாளையோ திருமணம் செய்யவோ அல்லது பாலுறவு வைக்காவோ கூடாது
லேவி 18:16 உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
லேவி 20:21 ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.
ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் அல்லது அவளுடைய பேத்தியையோ திருமணம் செய்யாவோ அல்லது பாலுறவு வைக்கவோ கூடாது
லேவி 18:17 ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.
லேவி 20:14 ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
மனைவி உயிரோடு இருக்கும் போது அவளுடைய சகோதரியை திருமணம் செய்யாவோ அல்லது பாலுறவு வைக்கவோ கூடாது
லேவி 18:18 உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம் பண்ணலாகாது.
இப்படிப்பட்ட முறைகேடான திருமண உறவுகளையும் பாலியல் உறவுகளையும் இஸ்ரவேலர்கள் அடிமையாக இருந்த எகிப்து தேசத்தாரும் இஸ்ரவேலர்கள் வாசம் பண்ணின கானான் தேசத்தாரும் செய்து கொண்டு இருந்தார்கள்
லேவி 18:3 நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும் நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,
லேவி 20:23 நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.
தேவன் தம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கக் கூடாது என்று தேவன் கட்டளையிட்டார்
லேவி 18:4 என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள் நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவி 18:5 ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
லேவி 20:22 ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.
லேவி 20:24 நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே
திருமணத்தை பற்றிய சட்ட ஒழுங்கு முறைகளை தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசேயின் மூலமாக எழுதி கொடுத்தார் இஸ்ரவேலர்கள் இந்த பிரமாணங்களை அவர்கள் மீறும் போது தான் அது பாவமாகிறது
இன்றைக்கும் தேவன் அருவருக்க கூடிய இப்படிப்பட்ட காரியங்களை அநேகர் செய்து கொண்டு வருகிறார்கள்
கர்த்தருக்கு சித்தமானால் விவாகத்தை குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment