Wednesday, 4 May 2022

இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் திருமண சட்டங்கள் எப்படி இருந்தன?

பாடம்:6 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?   
 
இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் திருமண சட்டங்கள் எப்படி இருந்தன?
 
இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் தேவன் பலதர மணத்தை அனுமதித்து இருந்தாலும் தேவன் அதை மனப்பூர்வமாக கொடுக்கவில்லை

தேவன் நியாயப்பிரமாண காலகட்டத்தில் ஏன் இஸ்ரவேலன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை விவாகம் செய்வதற்கு அனுமதி கொடுத்தார்?
மத் 19:7 அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.
மத் 19:8 அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.

அவர்களுடைய இருதய கடினத்தினிமித்தமே அப்படிப்பட்ட பிரமாணத்தை தேவன் அவர்களுக்கு கொடுத்தார்,

இஸ்ரவேலர்களுக்கு ஒரே மனைவியோடு வாழ்வதற்கு அவர்களுடைய இருதயம் இடம் கொடுக்கவில்லை

தேவன் ஒரு மனுஷனுக்கு ஒருத்தி என்ற திருமண பந்தத்தைத் தான் உருவாக்கினார்

இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் தேவன் பலதர திருமணத்தை அனுமதித்தாலும் அதில் ஒழுக்க முறையான சட்டத்திட்டங்களை கொடுத்து இருந்தார்

இஸ்ரவேலின் ராஜா அநேக ஸ்திரீகளை திருமணம் செய்ய வேண்டாம் என்று தேவன் பிரமாணத்தை கொடுத்து இருந்தார்
உபா 17:17 அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்.

இஸ்ரவேலர்கள் புறஜாதிகளோடு திருமண சம்பந்தம் கலக்கக்கூடாது என்று கட்டளையிட்டு இருந்தார்
உபா 7:1 நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,
உபா 7:2 உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.
உபா 7:3 அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக

ஏன் புறஜாதிகளோடு திருமண சம்பந்தம் கலந்தால் என்ன சம்பவிக்கும் என்பதை தேவன் அவர்களுக்கு தெளிவு படுத்தினார்
உபா 7:4 என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.
யோசு 23:12 நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தங் கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால்,
யோசு 23:13 உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.

ஆசாரியர்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்றும் தேவன் கட்டளையிட்டு இருந்தார்

ஆசாரியர்கள் யாரை திருமணம் செய்யக்கூடாது?
லேவி 21:7 அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக.

ஆசாரியர்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும்?
லேவி 21:13 கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.
லேவி 21:14 விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன்.
லேவி 21:15 அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து விவாகத்தை குறித்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

No comments:

Post a Comment