இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் திருமண ஒழுங்குகள் எப்படி இருந்தன?
நியாயப்பிரமாண காலகட்டத்தில் தேவன் விவாக விசயத்தில் என்ன சட்டத்திட்டங்களை கொடுத்து இருந்தார் என்பதைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்
நியாயப்பிரமாண காலகட்டத்தில் புறஜாதிகள் முறைகேடான திருமண உறவுகளையும் அருவருக்கத்தக்க பாலியல் உறவுகளையும் வைத்து இருந்தார்கள்.
தம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்று தேவன் நியாயப்பிரமாணத்தில் திருமணம் சம்பந்தமாகவும் பாலியல் உறவுகள் சம்பந்தமாகவும் பல சட்டங்களையும் ஒழுக்க முறைகளையும் கொண்டு வந்தார்
நியாயப்பிரமாணத்தில் இஸ்ரவேலர்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்கிற சட்டத்தை தேவன் கொடுத்து இருந்தார்
இப்போது திருமண காரியங்களில் இஸ்ரவேலர்களுக்கு தேவன் கொடுத்த ஒழுக்க முறைகளை நாம் கற்றுக் கொள்ள போகிறோம்
இஸ்ரவேலன் ஒருவன் நியாயப்பிரமாணத்தின் சட்டத்தின்படி திருமணம் செய்வான் என்று சொன்னால் அவனை எப்படி நடத்த வேண்டும் என்று தேவன் ஒழுக்க முறைகளை கொடுத்து இருந்தார்
ஒரு பெண்ணை விவாகத்திற்கு என்று தனக்கு நியமித்துக் இருக்கிறவன் யுத்தம் செய்யக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டு இருந்தார்
உபா 20:7 ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.
இஸ்ரவேலன் புதிதாய் ஒரு பெண்ணை விவாகம் பண்ணினால் அவன் என்ன செய்ய வேண்டும்?
உபா 24:5 ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.
இஸ்ரவேலன் சிறையிருப்பில் வந்த ஒரு ஸ்திரீயை விவாகம் பண்ணினால் என்ன செய்ய வேண்டும்?
உபா 21:11 சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,
உபா 21:12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து,
உபா 21:13 தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
உபா 21:14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
ஒரு இஸ்ரவேலனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தால் அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
உபா 21:15 இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,
உபா 21:16 தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.
உபா 21:17 வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.
ஒரு இஸ்ரவேலன் ஒரு ஸ்திரீயை திருமணம் செய்த கொண்ட பின்பு அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?
உபா 24:1 ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.
உபா 24:2 அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.
உபா 24:3 அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும்,
உபா 24:4 அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.
ஒரு இஸ்ரவேலன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால் அவனுடைய மனைவி என்ன செய்ய வேண்டும்?
உபா 25:5 சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திரசந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
உபா 25:6 மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன் பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும்.
உபா 25:7 அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப் போய்: என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
உபா 25:8 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடே பேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,
உபா 25:9 அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.
உபா 25:10 இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.
இஸ்ரவேலர்களுக்கு இப்படிப்பட்ட சட்டத்திட்டங்களையெல்லாம் தேவன் நியாயப்பிரமாணத்தில் கொடுத்து இருந்தார்
கர்த்தருக்கு சித்தமானால் விவாகத்தை இன்னும் கற்றுக் கொள்ளுவோம்
நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்
Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966
தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்
No comments:
Post a Comment