Monday, 30 May 2022

மோசேயின் நியாயப்பிரமாணம் என்பது வேறு தேவனுடைய நியாயப்பிரமாணம் என்பது வேறு என்று போதிக்கிறார்களே அது தேவனுடைய சத்தியமா?

பாடம் :11 ஓய்வு நாள் பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?                               

மோசேயின் நியாயப்பிரமாணம் என்பது வேறு தேவனுடைய நியாயப்பிரமாணம் என்பது வேறு என்று போதிக்கிறார்களே அது தேவனுடைய சத்தியமா?

ஏழாம் ஓய்வுநாளை ஆசரிக்கக்கூடியவர்கள் நியாயப்பிரமாணத்தை இரண்டாக பிரித்து கொள்ளுகிறார்கள்
1) தேவனுடைய நியாயப்பிரமாணம் (அல்லது) கர்த்தருடைய நியாயப்பிரமாணம்
2) மோசேயின் நியாயப்பிரமாணம்

இவர்கள் சொல்லக்கூடியது என்னவென்றால் தேவனுடைய நியாயப்பிரமாணம்(கர்த்தருடைய நியாயப்பிரமாணம்) என்பது பத்து கட்டளைகள் மாத்திரம் என்கிறார்கள்

மோசேயின் பிரமாணம் என்பது மற்ற எல்லா கட்டளைகளும்(603) அதாவது பலிகள், காணிக்கைகள், பண்டிகைகள் போன்ற மற்ற பிரமாணங்கள் எல்லாம் சேர்த்து மோசேயின் பிரமாணம் என்கிறார்கள்

இவர்களுடைய போதனைகள் என்னவென்றால் இயேசு கிறிஸ்து தேவனுடைய நியாயப்பிரமாணமாகிய பத்து கட்டளைகளை சிலுவையில் குலைத்து போடவில்லை மோசேயின் பிரமாணத்தை மட்டுமே குலைத்து போட்டார் என்கிறார்கள்

கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்றாலும் மோசேயின் நியாயப்பிரமாணம் என்றாலும் இரண்டும் ஒன்று தான் என்பதற்கு அநேக வசன ஆதாரங்கள் இருக்கிறது

மோசேயின் நியாயப்பிரமாணம் என்றாலும் அது கர்த்தரிடத்தில் வந்தது என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்
யோவா 1:17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, ,,,,
கலா 3:19 அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? ,,,, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

மோசேயின் நியாயப்பிரமாணமாக இருந்தாலும் அது தேவனாகிய கர்த்தருடைய எழுதிக் கொடுத்த கட்டளைகளும் கற்பனைகளும் நியாயங்களும் சாட்சிகளுமாய் இருக்கிறது
1இராஜா 2:4 மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக.
மல் 4:4 ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.
2இராஜா 17:36 உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு,
2இராஜா 17:37 அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்த வேண்டிய சர்வாங்க தகனபலிகளும் என்பது இந்த வசனத்தில் மோசேயின் பிரமாணம் என்று சொல்லப்படாமலும் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்று சொல்லப்பட்டு இருப்பதை என்பதை கவனியுங்கள்
2நாளா 31:3 ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.

எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாக இருந்தார்
எஸ்றா 7:6 இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; ,,,

எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவராக இருந்தாலும் அவர் எப்படி அழைக்கப்பட்டு இருக்கிறார்
எஸ்றா 7:12 ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா,,
எஸ்றா 7:26 உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.

ஜனங்களுக்கு எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணத்தை வாசித்தார்
நேகே 8:1 ,,,, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.

ஆனால் அது என்ன புஸ்தகம் என்று அழைக்கப்படுகிறது?

தேவனுடைய நியாயப்பிரமாணம் என்று அழைக்கப்பட்டது
நேகே 8:8 அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
நேகே 8:18 முதலாம் நாள் தொடங்கிக் கடைசி நாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது,,,,

அது பத்துக்கட்டளை மாத்திரம் என்றால் எதற்காக அதை வாசித்து அர்த்தம் சொல்லி வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ண வேண்டும்?

மோசேயின் நியாயப்பிரமாணம் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் என்று அழைக்கப்பட்டது
நெகே 9:3 ,,, அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ,,,
நேகே 10:29 தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் ,,,

குழந்தையை பெற்றுக் கொண்டவர்கள் ஆட்டுக்குட்டியை கொண்டுவர சக்தில்லாதவர்களாக இருந்தால் புறாக்குஞ்சுகளை பலி செலுத்துவது தேவனுடைய நியாயப்பிரமாணத்தில்(கர்த்தருடைய நியாயப்பிரமாணம்) இருக்கிறதா அல்லது மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இருக்கிறதா?

அது மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இருக்கிறது
லேவி 12:8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.

ஆனால் இயேசு கிறிஸ்து பிறந்தபோது அவருடைய பெற்றோர்கள் எந்த பிரமாணத்தின்படி புறாக்குஞ்சுகளை பலி செலுத்தினார்கள்?
லூக் 2:23 முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
லூக் 2:24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
லூக் 2:39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.

இந்த வசனமே மோசேயின் பிரமாணம் என்றாலும் கர்த்தருடைய பிரமாணம்(தேவனுடைய பிரமாணம்) என்றாலும் இரண்டு ஒன்று தான் என்று போதிக்கிறது

கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Sunday, 29 May 2022

புருஷர்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதற்கு தேவன் அனுமதி கொடுத்து இருக்கிறாரா?

பாடம்:15  விவாகம் யாவருக்குள்ளும்  கனம் உள்ளதா?
 
புருஷர்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதற்கு தேவன் அனுமதி கொடுத்து இருக்கிறாரா?

கணவன் மனைவிக்குள்ளே குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் போது அநேக புருஷர்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்

நம்முடைய தேசத்தில் மனைவியை அடிப்பதை ஒரு கலாச்சாரமாக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் 

புருஷன் மனைவியை அடிப்பதினால் அவள் தனக்கு கீழ்ப்படிந்து இருப்பாள் என்றும்  அப்படி செய்கின்ற போது தான் ஒரு ஆண்மகன் என்பதை நிரூபிக்க முடியும் என்று  அநேகர் நம்புகிறார்கள்,ஆனால் அப்படி புருஷர்கள் நடந்து கொள்ளும் போது புருஷன் மீது அன்புக்கு பதிலாக மனைவிக்கு வெறுப்பும் கோபமும் அதிமாகும் என்பதை அநேகர் அறிந்து கொள்ளுவதில்லை

புருஷன் தன் மனைவியை அடிக்கக் கூடியவனாக இருப்பான் என்றால் அப்படிப்பட்ட குடும்பத்தில் ஒரு போதும் சமாதானம் இருக்க வாய்ப்பில்லை

கிறிஸ்தவ புருஷர்கள் தங்களை மனைவிகளை அடிப்பதற்கு தேவன் அனுமதி கொடுத்து இருக்கிறாரா?

புருஷன் தன் பிள்ளைகளை தவிர தன் மனைவியை அடிப்பதற்கு தேவன் அனுமதி கொடுக்கவில்லை
நீதி 23:13 பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
நீதி 23:14 நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

மனைவியின் சரீரத்திற்கு புருஷன் அதிகாரியாக இருந்தாலும் மனைவியின் சரீரத்தை அடிப்பதற்கு அதிகாரியல்ல என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவ புருஷர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்
1கொரி 7:4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்ளே ஏன் சண்டை ஏற்படுகிறது?

கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையில் கடுஞ் சொற்களை பயன்படுத்தும் போது தான் அங்கே கோபம் எழும்புகிறது
நீதி 15:1 ,,,, கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

புருஷன் கோபக்காரனாக இருந்தால் அங்கே என்ன எழும்பும்?

அங்கே சண்டை எழும்புகிறது
நீதி 15:18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்....
நீதி 30:33 பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

புருஷன் கோபக்காரனாகவே அல்லது மனைவி கோபக்காரியாக இருப்பார்கள் என்றால் அங்கே சண்டை என்பது ஓயாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
நீதி 19:13 ,,,,,,, மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.

குடும்பத்தில் பிரச்சனைகள் எழும்பும் போது கணவனோ அல்லது மனைவியோ சாந்தமான பிரத்தியுத்திரம் கொடுக்கும் போது அங்கே சமாதானம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது
நீதி 15:1 மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
நீதி 15:18 ,,,, நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

நாம் குற்றம் செய்து இருப்போம் என்றால் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
பிர 10:4 அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.

நாம் விவேகமுள்ளவர்களாக இருக்கும் போது நாம் கோபத்தை அடக்க முடியும் அதோடு மாத்திரம் அல்ல கணவன் மனைவிக்குள்ளே யார் குற்றம் செய்து இருந்தாலும் அதை மன்னிப்பது அவர்களுக்கு அது மகிமையாக இருக்கிறது
நீதி 19:11 மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

புருஷர்கள் கோபமும் தர்க்கமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்
1தீமோ 2:8 அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.

குடும்பத்தில் பிரச்சனைகளுக்கு காரணமாயிருக்கிற தூஷணமும் வம்பு வார்த்தைகளை கணவனும் மனைவியும் விட்டு விட வேண்டும்
கொலோ 3:8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
எபே 4:31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.
கலா 5:26 வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

நாம் கோபப்படுவதற்கு எப்போதும் தாமதமாக இருக்க வேண்டும்
யாக் 1:19 ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
யாக் 1:20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

கோபங்கொண்டாலும் நாம் பாவம் செய்யக்கூடாது என்பதை ஒவ்வொரு புருஷர்களும் மனதிலே வைத்துக் கொள்ள வேண்டும்
எபே 4:26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

புருஷர்கள் தங்கள் மனைவிகளை அடிக்கும் போது அவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்

கணவனுக்கோ அல்லது மனைவிக்கே எரிச்சல் இருக்கும் என்றால் சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக எரிச்சல் தணிய வேண்டும்

கோபத்தை துக்கிக் கொண்டு சுமக்காதீர்கள் அது மிகவும் பாரமானது
நீதி 27:3 கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

புருஷர்களே உங்கள் மனைவிகளுக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்யுங்கள் அப்படி செய்கின்ற போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நித்திய ஜீவனை பெற முடியும்
1பேது 3:7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்

மனைவி புருஷனுடைய சொந்த சரீரமாக இருக்கிறாள்
எபே 5:28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும் தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.

புருஷன் தன் மாம்சத்தைப் போஷித்து காப்பற்ற வேண்டும்
எபே 5:29 தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.

மனைவி புருஷனுடைய எலும்பும் மாம்சமுமாய் இருக்கிறாள்
எபே 5:30 நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
ஆதி 2:23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

புருஷன் தன் மனைவியை அடிக்கும் போது என்ன சம்பவிக்கிறது?
மனைவி புருஷனுடைய எலும்பும் மாம்சமுமாய் இருக்கிற படியால் புருஷன் தன் மனைவியை அடிக்கும் அவன் தன்னை தானே அடித்துக் கொள்ளுகிறான்

மனைவி புருஷனை அடிக்கலாமா?

புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாய் இருக்கிறான்
1கொரி 11:7 புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால்,தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷனை சபிக்கக்கூடாது என்றால் அவனை அடித்தால் என்ன சம்பவிக்கும்?
யாக் 3:9 அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.

ஸ்திரீயானவள் புருஷனை அடிக்கும் போது அவள் யாரை அவமானப்படுத்துகிறாள்?
தேவனை அவமானப்படுத்துகிறாள்
அப் 5:39 … தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.

கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Friday, 27 May 2022

மனைவிகள் தங்கள் புருஷர்களை எப்படி பார்க்க வேண்டும்?

பாடம்:14  விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?                                         

மனைவிகள் தங்கள் புருஷர்களை எப்படி பார்க்க வேண்டும்?

புருஷர்கள் தங்களுடைய மனைவிகளை எப்படி நேசித்து அன்பு செலுத்தி அவர்களை பார்க்க  வேண்டும் என்பதை குறித்து கற்றுக் கொண்டு இருக்கிறோம் 

மனைவி தன் கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற கட்டளையை எத்தனை மனைவிகள் உணர்ந்து இருக்கிறார்கள்

கணவன் தன் மனைவி தனக்கு  கீழ்ப்படியக்கூடிய அளவுக்கு அவள் மீது அக்கறையும் அன்பும் காண்பிக்க  வேண்டும்

மனைவி தன் புருஷன் தன் மீது அன்பும் அக்கறையும் காண்பிக்கிற அளவுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்

நிறைய குடும்பங்களின் பிரச்சனைகளுக்கு கணவன் மனைவியினிடத்தில் அன்பும் கீழ்ப்படிதலும் குறைந்து போவதுதான் காரணமாய் இருக்கிறது 

நிறைய மனைவிகள் தங்கள் புருஷர்களை வாட போட என்றும் வா  போ என்று மரியாதை குறைவாக  அழைப்பதும் பேசுவதும் இன்றைக்கு நாகரீகமாக இருக்கிறது 

இப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் தேவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது 

மனைவிகள் தங்கள் புருஷர்களை எப்படி அழைக்கிறாள்?

சாலமோனை அவள் என் நேசர் என்றும் என் ஆத்தும நேசர் என்றும்  அழைத்து இருக்கிறாள் 

மனைவியானவள் தங்கள் புருஷர்களை எப்படி அழைக்கிறார்கள்?

அநேகர் தங்களுடைய புருஷர்களை மரியாதையோடு எல்லாம் அழைப்பது இல்லை, இன்றைக்கு புருஷர்களுக்கு செலுத்த வேண்டிய கனத்தை அநேக மனைவிகள் செலுத்துவதில்லை

மனைவிகள் தங்கள் புருஷர்களிடத்தில் எப்போதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
1பேது 3:1 அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
1பேது 3:2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.

மனைவியானவள் புறம்பான அலங்கரிப்பு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது
1பேது 3:3 மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

இந்த புறம்பான அலங்கரிப்பு தேவனுடைய பார்வையில் எப்படி இருக்கிறது?
லூக் 16:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற இருதயத்தில் மறைந்திருக்கிறமே குணமே அலங்காரமாயிருக்க வேண்டும்

இந்த அலங்கரிப்பே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது
1பேது 3:4 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

மனைவிகளுக்கு சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி இருக்கும் என்றால் அவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கையாக இருப்பார்கள் மேலும் அவர்கள் தங்களுடைய புருஷர்களுக்கு கீழ்ப்படிந்து தங்களை அலங்கரிப்பார்கள்
1பேது 3:5 இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.

சாராள் தன்னுடைய புருஷனாகிய ஆபிரகாமை எப்படி சொல்லி அழைத்து தன்னை கீழ்ப்படித்தினாள்?

ஆபிரகாமை அவள் எஜமான் என்று சொல்லி தன்னை தாழ்த்தி தாழ்மையுள்ளவளாக இருந்தாள்
1பேது 3:6 அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

புருஷனுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள் மனைவி என்பதை புரிந்து கொள்ளுங்கள்
1கொரி 11:9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்.

ஒவ்வொரு மனைவியும் உலகத்தில் எல்லா ஆண்மகனைக் காட்டிலும் முற்றிலும் அழகுள்ளவர் என்பதையும் அக்கரையுள்ளவர்  தன் புருஷன் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
 
சாலமோனை அவருடைய மனைவி எப்படி பார்த்தாள்?

புருஷனை தவிர மனைவியானவளுக்கு எந்த சிநேகிதரும் இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
உன் 5:16 அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

சாலமோன் தன்னுடைய நிழல் என்பதையும் அவரால் தான் போஷிக்கப்படுகிறேன் என்பதையும் அவள் அறிந்திருந்தாள்
உன் 2:3 காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.

தன்னை அவர் முழுவதுமாக நேசிக்கிறார் என்பதை அவள் அறிந்திருந்தாள் 
உன் 2:4 என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.

தன்னுடைய நேசரைப் பற்றி அவளுடைய பார்வை எப்படி இருந்தது?
உன் 5:9 ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?

பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் என்பதை அறிந்து இருந்தாள்
உன் 5:10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.

எல்லா ஆண்களைக் காட்டிலும் உங்கள் கணவர் சிறந்தவர் என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள் 

சாலமோனுடைய மனைவியைப் போல ஒவ்வொரு ஸ்திரீயும் தன் சொந்த புருஷர்களை மனப்பூர்வமாக அன்பு செலுத்த கற்றுக் கொள்ள வேண்டும் 
உன் 5:11 அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.
உன் 5:12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.
உன் 5:13 அவர் கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.
உன் 5:14 அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன் வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
உன் 5:15 அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.

உலகத்தால் மன்மதன் என்று அழைக்கப்பட்டவர்களை இந்த சமுதாயம் ஆச்சரியமாக பார்த்தாலும் அவர்கள் தேவனுடைய பார்வையில் அருவருப்பனவர்களும் விபசாரக்கரர்களுமாய் இருக்கிறார்கள் அவர்களில் பெரும்பாலனோர் தங்களுடைய இல்லற வாழ்க்கையில் தோற்றவர்கள் என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் எங்களோடு தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள அன்போடு அழைக்கிறோம்

ஆராதனை நேரம்
ஞாயிறு காலை 
9:30 to 11:30 AM
7:00 to 8:00 PM
வேத வகுப்பு 
வியாழன் மாலை 
7:00 to 8:00 PM

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Monday, 23 May 2022

புருஷர்கள் தங்கள் மனைவிகளை எப்படி பார்க்க வேண்டும்?

பாடம்:13 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?                                       

புருஷர்கள் தங்கள் மனைவிகளை எப்படி பார்க்க வேண்டும்?

எத்தனை புருஷர்கள் தங்கள் மனைவிகளின் மீது உண்மையான அக்கறையும் அன்பும் வைத்து இருக்கிறார்கள்?

இன்றைக்கு மனைவியை கிண்டல் செய்தும் கேலி பண்ணுவதுமான மீம்ஸ்கள் அதிகமாக வருகிறது 

அதை எல்லாம் புருஷர்கள் மகிழ்ச்சியோடு ஷேர் செய்கிறார்கள்

தேவன் நமக்கு துணையாக கொடுக்கப்பட்ட மனைவியை தரக்குறைவாக நடத்துவதோ அல்லது கேலி பண்ணுவதோ அல்லது கிண்டல் பண்ணுவதோ செய்தால் நிச்சயம் தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் நாம் தப்பிக்க முடியாது 

புருஷர்கள் தங்களுடைய மனைவியின் தோற்றத்தை எப்படி பார்க்கிறார்கள்?

புருஷன் தன் மனைவியை உண்மையாய் நேசிப்பான் என்றால் எந்த ஸ்திரீயைக் காட்டிலும் அழகுள்ளவளாக பார்க்க வேண்டும்
 
இன்றைக்கு அநேக புருஷர்கள் தங்களுடைய மனைவியை தவிர எல்லா ஸ்திரீகளையும் அழகுள்ளவளாக பார்க்கிறார்கள், இது ஆபத்தானதும் தேவனுக்கு விரோதமானதுமாக இருக்கிறது

அழகு என்பது வீண் என்பதை தேவன் சொன்னதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது
நீதி 31:30 சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண் கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

ஒரு ஸ்திரீ மதிகேடாய் நடக்கிறாள் என்றாள் அவளுடைய அழகு எதற்கு சமானமாய் இருக்கிறது?
நீதி 11:22 மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.

புருஷனுக்கு மனைவியின் ஸ்தனங்களே திருப்தி செய்ய வேண்டும்

மனைவியின் நேசத்தால் மாத்திரம் மயங்கி இருக்க வேண்டும்
நீதி 5:19 அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

இதை எல்லாம் தேவன் நமக்கு ஏன் சொல்லுகிறார்?

நாம் வேசித்தனத்தில் விழுந்து போகாத நம்மை எச்சரிக்கிறார்

மனைவியை எப்படி நேசிக்க வேண்டும் என்று உன்னத பாட்டு தெளிவாக போதிக்கிறது

புருஷன் தன் மனைவியை இப்படி தான் எப்போது பார்க்க வேண்டும்?

புருஷனானவன் தன் மனைவியை தவிர எந்த ஸ்திரீயும் அழகுள்ளவளாக பார்க்க கூடாது
உன் 6:10 சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம் போல் உதிக்கிற இவள் யார்?

சாலமோன் தன் மனைவியை எப்படி வர்ணித்து இருக்கிறார் என்பதை நாம் கவனித்து பார்க்க வேண்டும்

சாலமோன் தன் மனைவியை ரூபவதி புறா பிரியம் என் உத்தமி மணவாளி சகோதரி(ஆவிக்குரிய வகையில்) இப்படித்தான் அழைக்கிறார் 

புருஷனும் தன் மனைவியை அன்போடு அழைக்க கற்றுக் கொள்ள வேண்டும் 

சாலமோன் தன் மனைவியை எப்படி பார்த்தார்?
உன் 1:10 ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.
உன் 1:15 என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.
உன் 2:14 கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.

சாலமோன் அவளை சரீரபிரகாரமாக அதிகமாக நேசித்தார்
உன் 4:1 நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது.
உன் 4:2 உன்பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
உன் 4:3 உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது.
உன் 4:4 உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுத சாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.
உன் 4:5 உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
உன் 4:6 பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்து போகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்.

சாலமோன் தன் மனைவியின் நேசம் இன்பமாயிம் மதுரமாயிம் இருக்கிறது என்பதை அறிந்து இருந்தார்
உன் 4:10 உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
உன் 4:11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
உன் 4:12 என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.
உன் 4:13 உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,
உன் 4:14 நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்கார வனமாயிருக்கிறது.
உன் 4:15 தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.

சாலமோனைப் போல புருஷன் தன் மனைவியை உண்மையாக நேசித்து அன்பு வேண்டும்
உன் 7:1 ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.
உன் 7:2 உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது.
உன் 7:3 உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.
உன் 7:4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
உன் 7:5 உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது ராஜா நடைக்காவணங்களில் மயங்கி நிற்கிறார்.
உன் 7:6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.
உன் 7:7 உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது.
உன் 7:8 நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
உன் 7:9 உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.

உலகில் எல்லா ஸ்திரீகளைக் காட்டிலும் ஒழுக்கத்தில் மிக சிறந்தவளும் மிகுந்த அழகுள்ளவளும் அதிக அன்பும் அக்கரையும் கொண்டவள் என் மனைவி மாத்திரமே என்கிற பார்வையும் எண்ணமும் ஒவ்வொரு புருஷனுக்கும் இருக்கும் என்றால் அவனே மிகச் சிறந்த புருஷனும் தன் மனைவியால் நேசிக்கப்படத்தக்கவனாகவும் இருப்பான்
உன் 1:8 ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Friday, 20 May 2022

ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசரித்தார்களா?

பாடம் :10 ஓய்வு நாள் ஆசரிப்பு பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?                                   

ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசரித்தார்களா?

ஓய்வுநாளை இஸ்ரவேலர்கள்(யூதர்கள்) ஆசரித்தார்கள் என்று தான் வேத வாக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது  

ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசாரித்தார்கள் என்று எந்தவொரு வேத வாக்கியங்களும் இல்லை 

இவர்கள் தங்கள் சபையாருக்கென்று நிறைய ஓய்வு நாள் சம்பந்தமான புஸ்தகங்களை எழுதி அவர்கள் கையில் கொடுக்கிறார்கள் அதை தான் அவர்கள் வாசித்து கொண்டு இருப்பார்கள் 

இவர்களுக்கு எத்தனை வேத வாக்கியங்களை காண்பித்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் 

ஓய்வு நாளை எப்படி ஆசரிக்க வேண்டும் என்று இவர்களே புஸ்தகம் எழுதி வைத்து இருப்பார்கள் அதை தான் அந்த  சபையாரும் பின்பற்றுவார்கள் 

இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் ஓய்வுநாளை ஒருவன் மீறினால் என்ன தண்டனை கிடைக்கும்?

ஒய்வுநாளில் வேலை செய்தால் அவனை கொலை செய்து விடுங்கள் என்று தேவன் கட்டளையிட்டு இருந்தார்
யாத் 31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
யாத் 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
யாத் 35:2 நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.

இந்த வசனத்தில் ஓய்வு நாளை ஆசாரிக்க வேண்டும் என்பதை எடுத்து கொள்ளுவார்கள் அதில் வேலை செய்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்று கொள்ள மாட்டார்கள் அதை பற்றி கேட்டால் அது மோசேயின் பிரமாணம் அது சிலுவையில் முடிக்கப்பட்டது என்பார்கள்

ஓய்வுநாளில் விறகுபொறுக்கின மனிதனை சபையார் எல்லாரும் சேர்ந்து கல்லெறிந்து கொன்று போட்டார்கள்
எண் 15:32 இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
எண் 15:35 கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.
எண் 15:36 அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

அப்படியானால் இன்றைக்கு ஓய்வுநாள் பிரமாணத்தை பின்பற்றிக் கொண்டு இருப்பவர்கள் இந்த சட்டத்திட்டங்களை பின்பற்றுகிறார்களா?

 இதை நீங்கள் அவர்களிடத்தில் கேட்டால் இது மோசேயின் பிரமாணம் என்பார்கள்

தேவனுடைய பிரமாணமும் மோசேயின் பிரமாணமும் இரண்டும் ஒன்றுதான் என்பதை வசன ஆதாரத்தோடு பின்வரும் பாடங்களில் படிப்போம்

புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்தில் பாவ அட்டவணையில் ஒய்வுநாளை மீறுதல் பாவம் என்றே தண்டனைக்குரிய குற்றம் என்றே எந்தவொரு வசனமும் சொல்லவில்லை

இயேசு கிறிஸ்து மனிதனுடைய இருதயத்தை தீட்டுப்படுத்தும் 13 பாவங்களை குறிப்பிடுகிறார்
மாற் 7:20 மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
மாற் 7:21 எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
மாற் 7:22 களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
மாற் 7:23 பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை

பவுல் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்கிறவர்கள் மரணத்திற்கு பாத்திரராயிருக்கிறார்கலொன்று 23 பாவங்களை குறிப்பிடுகிறார்
ரோம 1:28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
ரோம 1:29 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
ரோம 1:30 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
ரோம 1:31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
ரோம 1:32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை

பவுல் இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை என்று 17 பாவங்களை குறிப்பிடுகிறார்
கலா 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்
கலா 5:20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்
கலா 5:21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை

பவுல் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியற்றவர்கள் என்று 7 பாவங்களை குறிப்பிடுகிறார்
எபே 5:3 மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.
எபே 5:4 அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
எபே 5:5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
எபே 5:6 இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
எபே 5:7 அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்.

இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை

பவுல் கடைசி கால கொடிய பாவங்கள் என்று 19 பாவங்களை குறிப்பிடுகிறார்
2தீமோ 3:1 மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
2தீமோ 3:2 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
2தீமோ 3:3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
2தீமோ 3:4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
2தீமோ 3:5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.

இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை

அப்போஸ்தலனகிய யோவான் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் இன்று 8 பாவங்களை குறிப்பிடுகிறார்
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை

யோவான் தேவ ராஜ்யத்துக்கும் அவர் சமூகத்துக்கும் புறம்பே இருப்பார்கள் 6வித பாவங்களை குறிப்பிடுகிறார்
வெளி 22:15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

இந்தப் பாவத்தின் பட்டியலில் ஓய்வு நாளை மீறுவது பாவம் என்று சொல்லப்படவில்லை

கிறிஸ்துவின் பிரமாணத்தில் இல்லாத ஒன்றை இவர்கள் விசுவாசித்து போதித்துக் கொண்டிருக்கிறார்கள்

கிறிஸ்துவின் பிரமாணத்தில் ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் ஆசரித்தார்கள் என்று  எந்த ஒரு ஆதாரத்தையும் இவர்களால் காண்பிக்க முடியாது

கிறிஸ்துவின் பிரமாணத்தில் கற்பனை என்று வந்தால் இவர்கள் 10 கற்பனை என்று யூகித்து கொள்வார்கள்

பத்து கட்டளையையும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள்
(பத்து கற்பனைகளைக் காட்டிலும் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பிரமாணத்தில் மேன்மையான கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது அதையும் நாம் வரும் பாடங்களில் கற்றுக் கொள்வோம்)

ஓய்வு நாள் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்குமானால் அது மீறப்படுவது மிக பெரிய பாவம் என்றால் புதிய ஏற்பாட்டின் பாவத்தின் பட்டியலில் ஒரு வசனத்தில் கூட   ஏன் பரிசுத்த ஆவியானவர் சொல்லவில்லை?

கிறிஸ்துவின் சபைகளுக்கு எழுதப்பட்ட 21  நிருபங்களில் எந்த ஒரு நிருபத்திலும் ஓய்வு நாளை ஆசரியுங்கள் என்று  பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பேசின அப்போஸ்தலர்களால் எந்த ஒரு கட்டளையும் கொடுக்கப்படவில்லை

கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த பிரமாணத்தில் ஓய்வுநாளை மீறுவது பாவத்தின் பட்டியலில் வரவில்லை ஏனென்றால் அது கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படவில்லை
யாக் 2:12 சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

Thursday, 19 May 2022

புருஷர்கள் தங்கள் மனைவிகளை எப்படி நேசிக்க வேண்டும்?

பாடம் :12 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?                                   

புருஷர்கள் தங்கள் மனைவிகளை எப்படி நேசிக்க வேண்டும்?

திருமணத்தின் நோக்கம் என்னவென்று தெரியாமலே அநேகர் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்

நீங்கள்  எதற்காக திருமணம் செய்து கொண்டீர்கள்?

1) பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக திருமணம் செய்து கொண்டீர்களா?

அல்லது

2) சமுதாயத்திற்காக திருமணம் செய்து கொண்டீர்களா?

அல்லது

3) பாலியல் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக திருமணம் செய்து கொண்டீர்களா?

 அல்லது 

4) உங்கள் பாலினத்தை நிரூபிப்பதற்காக திருமணம் செய்து கொண்டீர்களா?

மேலே சொல்லப்பட்டவைகளுக்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டு இருப்பீர்கள் என்றால் உங்கள் திருமண வாழ்க்கை தேவனுக்கு ஏற்றபிரகாரமாகவும் சந்தோஷமாகவும் ஒரு போதும் அமையாது

திருமணம் என்பது தேவனால் ஏற்படுத்தப்பட்ட உன்னதமான திட்டம் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அதற்கு ஒப்புக் கொடுக்கும் போது தான் அது மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கையை ஏற்படுத்தும் 

தேவனுடைய திருமண திட்டத்தில் ஒரு பாகம் நாம் தேவபக்தியுள்ள சந்ததியைப் பெற வேண்டும் என்பதையும்  உணர்ந்து கொள்ள வேண்டும்
மல் 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ,,,,

பாலியல் உறவுகள் மூலமாக தான் நாம் தேவ பக்தியுள்ள சந்தியை பெற முடியும் 

விவாக மஞ்சத்தைப் பற்றி தேவனுடைய எச்சரிப்பு என்ன?
எபிரேயர் 13:4
விவாகம் யாவருக்கும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

விவாக மஞ்சத்தை  அசுசிப்படுத்தக்கூடிய விபச்சாரகாரரையும் வேசி கள்ளரையும்  தேவன் நியாயந்தீர்ப்பார்

மனைவியைப் பற்றி புருஷனுடைய பார்வை இப்படி இருக்கிறதா?
நீதி 5:18 உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
நீதி 5:19 அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

இந்த வசனத்தில் சில வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள், 
உங்கள் மனைவியை நீங்கள் இப்படிபார்க்கிறீர்களா?

1) உன் இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு
2) அவள் நேசிக்கப்படத்தக்க பெண்மான்
3) அழகான வரை ஆடு
4) அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் திருப்தி செய்ய வேண்டும்
5) அவளுடைய நேசத்தால் எப்பொழுதும் மயங்கி இருக்க வேண்டும்

இப்படி செய்கின்ற போது தான் நம்முடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படும்

மேலே சொன்னது தேவனுடைய ஆலோசனையாக இருக்கிறது 

மனைவியிடத்தில் பாலியல் உறவில் திருப்தி அடையாதவன் வேறு எங்கேயும் ஒருபோதும் திருப்தியடைய மாட்டான்
நீதி 5:15 உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.

கீழே உள்ள வசனத்தில் பாய்வதாக என்று இருக்கிறது ஆனால் எபிரெய வேதாமத்தில் பாயலாமா என்று கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது
நீதி 5:16 உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
நீதி 5:17 அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.

ஒரு போதும் நம்முடைய ஊற்றுகள் வெளியிலும் நம்முடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாயக் கூடாது

அநேக நேரங்களில் கிறிஸ்தவர்கள் பாலுறவென்பது அசுத்தமானது தீட்டானது அல்லது அசிங்கமானது என்ற எண்ணமுடையவர்களாய் இருக்கிறார்கள் ஆனால் அது தவறு

கணவனும் மனைவியும் பாலுறவில் சேருவது பாவம் என்று சில கள்ள போதகர்கள் போதித்து கொண்டு இருக்கிறார்கள்

அவர்களுக்கு எல்லாம் ஒரு போதும் செவி கொடுத்து உங்கள் குடும்பத்தை இழந்து போகதீர்கள்

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பாலுறவு இருக்கும் என்றால் அது சுத்தமானதும் தேவனுக்கு ஏற்றதாயிம் இருக்கிறது
நீதி 5:20 என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?

புருஷன் தன் மனைவியின் நேசத்தால் மாத்திரம் மயங்கி இருக்க வேண்டும்

தேவனுக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Tuesday, 17 May 2022

விவாகத்திற்கு பின்பு ஏற்படும் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன?

பாடம்:11 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?                                    

விவாகத்திற்கு பின்பு ஏற்படும் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன?

திருமணத்திற்கு பின்பு தங்கள் துணையை புரிந்து கொள்ளாத தம்பதிகளிடம் நிறைய குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விடுகிறது

திருமணம் என்பது அநேகருடைய முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

உங்கள் திருமணத்திற்கு யாருடைய தயவும் யாருடைய முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது?
1) தேவன்
2) உங்களுடைய பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும்
3)தேவனுடைய பிள்ளைகள் (சபையின் விசுவாசிகள்)
4) உங்களுடைய சொந்தங்களும் பந்தங்களும்

தேவன் விவாக உடன்படிக்கையில் மணமக்களை இணைத்தாலும் கூட இப்படி அநேகருடைய முயற்சிகளும் அதில் இருக்கிறது

உங்களுடைய திருமணம் தேவனுடைய ஆசீர்வாதத்தினாலும் அவருடைய திட்டத்தினாலும் உருவானது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது 

இப்படி சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் தேவனுடைய ஆசீர்வாதத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட திருமண வாழ்க்கையை சிறிய பிரச்சனைகளுக்காக ஒருபோதும் முறித்து போட்டு விடாதீர்கள்

கணவன் மனைவிக்குள்ளும் இருக்கக்கூடிய எந்தவொரு பிரச்சனைகளின் நிமித்தம் அவர்கள் ஒரு போதும் சண்டையிட்டுக் கொள்ளுவதோ அல்லது பிரிந்து போவதோ கூடாது

திருமண வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா பிரச்சனைகளும் நம்முடைய வேதாகத்தில் தீர்வு இருக்கிறது
2தீமோ 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2தீமோ 3:17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

திருமணத்தைப் பற்றி தேவனுடைய திட்டங்களை நாம் சரியாக புரிந்து வைத்து இருக்க வேண்டும் 

திருமணத்திற்கு முன்பு தனியாக இருந்த நீங்கள் திருமணத்திற்கு பின்பு உங்கள் வாழ்நாள் முழுவதும் இன்னொருவருக்கு கடமைப்பட்டு வாழ வேண்டி இருக்கிறது, உங்களுக்கென்று விவாக கடமைகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் 

திருமணம் என்பது உங்கள் தேவைகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொள்ளுவதற்காக அல்ல உங்கள் துணையின் தேவைகளையும் நிறைவேற்ற கடமைப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

வேத வாக்கியம் சொல்லுகிறபடி நீங்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் அன்பு செலுத்துவீர்கள் என்றால் உங்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமானதாகவும் இருக்கும்

கணவன் மனைவிக்குள்ளே சுயநலம் இருக்கும் என்றால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்காது

கணவன் மனைவிக்குள்ளே என்னென்ன பிரச்சனைகள் வருகிறது?

1) கணவன் மனைவிக்குள்ளே பாலியல் உறவுகளில் பிரச்சனைகள் வருகிறது
2) கணவன் தன் பெற்றோர்களுடைய வீட்டை மனைவி மதிக்க வேண்டும் என்று விரும்புகிறான் ஆனால் அப்படி மனைவி மதிக்காத போது அவர்களுக்குள்ளே வெகு சீக்கிரத்திலே பிரச்சனைகளும் உண்டாகின்றன
3)மனைவிமார்கள் தங்களுடைய பெற்றோர்களுடைய வீட்டை கணவன் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் ஆனால் அவர்கள் புருஷனுடைய வீட்டைக் குறித்து அவர்கள் அதிக அக்கரைப்படுவதில்லை,இதின் நிமித்தமே குடும்பத்தில் பிரச்சனைகள் எழும்புகிறது
4) கணவனுக்கு மனைவி கீழ்ப்படியாத போதும் கணவன் மனைவியினிடத்தில் அன்பு செலுத்த போதும் அங்கே பிரச்சனைகள் வருகிறது
5) கணவனின் வீட்டாரோ அல்லது மனைவியின் வீட்டாரே குடும்ப விசயங்களில் அடிக்கடி தலையிடும் போது இருவருக்கும் இடையே பிரச்சனைகள் எழும்புகிறது
6) கலாச்சார ரீதியாகவும் கணவன் மனைவிக்குள்ளே பிரச்சனைகள் எழும்புகிறது

இப்படி அநேக பிரச்சனைகள் எழும்பினாலும் இதையெல்லாம் மேற்கொண்டு கடந்து தான் நம்முடைய குடும்ப வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும், இதை கடக்க முடியாதவர்கள் தான் தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியை தழுவி விடுகிறார்கள்

ஒரு விசுவாசமுள்ள கணவன் தன் வீட்டாரை அவன் சரியாக விசாரிக்க வேண்டும்
1தீமோ 5:8 ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.

புருஷர்கள் தங்கள் மனைவியின் மீதும் தங்கள் பிள்ளைகள் மீதும் உங்களுக்கு எந்தஅளவுக்கு அன்பும் அக்கரையும் இருக்கிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் 

ஒரு விசுவாமுள்ள மனைவி பிள்ளைகளை பெறவும் வீட்டை நடத்தவும் அவளுக்கு பொறுப்பு கொடுக்கப்படுகிறது
1தீமோ 5:14 ,,, விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.
தீத்து2 :4 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,
தீத்து 2:5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.

மனைவிகள் எத்தனை பேர் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படுகிறார்கள் ?

கணவனும் மனைவியும் தங்களுக்குள் இருக்கக்கூடிய பாலியல் தேவைகளை ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்
1கொரி 7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
1கொரி 7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.
1கொரி 7:4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
1கொரி 7:5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்

புருஷர்களே மனைவிகளே நீங்கள் உங்களுடைய துணையாளியின் பாலியல் தேவைகளை சரியாக பூர்த்தி செய்கிறீர்களா?

கணவனும் மனைவியும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்வோம் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Monday, 16 May 2022

ஓய்வுநாளை அப்போஸ்தலர்கள் ஆசரித்தார்களா?

பாடம் :9 ஓய்வு நாள் பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?                                   

ஓய்வுநாளை அப்போஸ்தலர்கள் ஆசரித்தார்களா?

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளிலே என்ன செய்தார் என்பதைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம் 

ஓய்வுநாள் சபையார் புதிய ஏற்பாட்டில் சில வசனங்களை எடுத்துக் கொண்டு பாருங்கள் இவர்கள் ஓய்வுநாளை ஆசரித்தார்கள் என்று மேற்கோள் காண்பிக்கிறார்கள் 

அந்த வசனங்களைக் குறித்து நாம் கவனித்து பார்ப்போம்

மத்தேயு மாற்கு லூக்கா யோவான் போன்ற சுவிசேஷ புஸ்தகங்களின் சம்பவங்கள் எல்லாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கிற இஸ்ரவேல்     (யூதர்கள்) தேசத்தில் நடக்கிற சம்பவங்கள் என்பதை மனதிலே வைத்து கொள்ளுங்கள் 

இஸ்ரவேலர்கள் நியாயப்பிரமாணத்தின் சகல சட்ட திட்டங்களுக்கும் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும்

ஓய்வுநாள் சபையார் இந்த வசனங்களை மேற்காண்பிக்கிறார்கள்
லூக் 23:54 அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
லூக் 23:55 கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
லூக் 23:56 திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

இயேசுகிறிஸ்து பிறந்ததும் வளர்ந்ததும் மரித்ததும் அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்ததும் எல்லாம் இஸ்ரவேல் தேசம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்

இங்கே ஓய்வு நாளை ஆசரித்த ஸ்திரீகள் எல்லாம் யார்?

இங்கே ஓய்வுநாளை ஆசரித்த ஸ்திரீகள் எல்லாம் யூத ஸ்திரீகள் என்பதையும் அது இஸ்ரவேல் தேசம் என்பதையும்  அவர்கள் நியாயப்பிரமாணத்தின்படியும் தேச சட்டத்தின்படியும் அவர்கள் ஓய்வுநாளை ஆசாரிக்க வேண்டும் அதனால் தான் அவர்கள் நியாயப்பிரமாணத்தின் கற்பனைகளின்படி ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்

அப்போஸ்தலர்கள் ஓய்வுநாளை ஆசாரித்தார்களா?

இயேசு கிறிஸ்து முதலில் இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டார்
மத் 15:24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.
லூக் 2:34 பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அப்போஸ்தலர்களுக்கு இயேசு கிறிஸ்து முதலில் இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் என்று கட்டளை கொடுத்தார்
மத் 10:6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

இயேசு கிறிஸ்து உலகமெங்கும் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்று கட்டளையிட்டாலும் அப்போஸ்தலர்கள் எந்த தேசத்திற்கும் போனாலும் முதலில் யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்கு போய்  சுவிசேஷத்தை பிரசங்கிப்பார்கள் அதற்கு பின்பு தான் புறஜாதிகளிடத்தில் போவார்கள் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்  

இயேசுவை தேவன் இஸ்ரவேலர்களுக்கு தான்  வெளிப்படுத்தினார்
அப் 2:22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

இயேசுவை முதலாவது இஸ்ரவேலர்களுக்கு அனுப்பினார் என்று பேதுருவும் பிரசங்கித்தார்
அப் 3:26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
அப் 10:36 எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.

பவுலும் பர்னபாவும் முதலில் சுவிசேஷத்தை இஸ்ரவேலர்களுக்கு தான் முதலில் அறிவித்தார்கள்
அப் 13:45 யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.

முதலாவது தேவ வசனத்தை யூதர்களுக்கு தான் சொல்ல வேண்டும் என்பதை பவுல் பிரசங்கித்தார்
அப் 13:46 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.

உலகத்தில் வாழக்கூடிய எல்லா யூதர்களுக்கும் ஓய்வுநாளிலே அவர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் ஜெப ஆலயத்தில் தான் கூடி இருப்பார்கள் என்பதை அப்போஸ்தலர்கள் அறிந்து இருந்தார்கள் அதனால் தான் அவர்கள் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்தில் போய் யூதர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள்
அப் 13:14 அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வு நாளிலே ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.

பவுல் ஓய்வுநாளில் ஜெப ஆலயங்களில் வழக்கமாய் கூடி வருகிற  யூதர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்
அப் 13:27 எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.
அப் 13:30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
அப் 13:39 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.

தேவனுடைய சுவிசேஷத்தை மறுபடியும் தங்களுக்கு ஓய்வுநாளில் கூடிவரும் போது போதிக்க வேண்டும் என்று கேட்டார்கள்
அப் 13:42 அவர்கள் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.
அப் 13:44 அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.

புறஜாதியார் இங்கே ஓய்வுநாளை ஆசாரிக்கவில்லை யூதர்கள்  கூடி வருகிற ஓய்வு நாளில் தாங்களுக்கும் சுவிசேஷத்தை   சொல்லும்படி வேண்டிக் கொண்டார்கள்

பவுல் ஓய்வுநாளில் பட்டணத்துக்கு வெளியே போய் ஆற்றின் அருகே கூடி வந்த ஸ்திரீகளுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள்
அப் 16:13 ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.

பவுல் ஓய்வுநாளில் தெசலோனிக்கேய பட்டணத்தில் உள்ள யூதர்களுடைய ஜெப ஆலயத்தில் யூதர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்
அப் 17:1 அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது.
அப் 17:2 பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
அப் 17:3 கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.

கொரிந்து பட்டணத்தில் உள்ள ஜெப ஆலயத்தில் வழக்கமாய் கூடி வருகிற யூதர்களுக்கும் கிரேக்கருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்
அப் 18:4 ஓய்வு நாள்தோறும் அவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.
அப் 18:5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.

உலகமெங்கும் இருக்கக்கூடிய யூதர்கள் ஓய்வுநாளில் ஜெப ஆலயங்களில் கூடி வருவார்கள்

பவுல் ஓய்வுநாள் தோறும் ஜெப ஆலயத்திற்கு போனது ஓய்வுநாளை ஆசரிக்க அல்ல அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்க என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

கர்த்தருக்கு சித்தமானால் தொடரும் 

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு சபைகள் பற்றிய சத்தியங்கள்

The Eternal Gospel - நித்திய சுவிசேஷம்








Subscribe Like Share

Sunday, 15 May 2022

திருமண உடன்படிக்கை என்பது என்ன?

பாடம் :10 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?

திருமண உடன்படிக்கை என்பது என்ன?

கணவனும் மனைவியும் திருமணத்தில் செய்யும் உடன்படிக்கையில் தான் தேவன் இணைக்கிறார்

இந்த திருமண உடன்படிக்கையை எத்தனை பேர் கவனித்து கேட்கிறார்கள்?

கிறிஸ்தவ திருமணத்தில் திருமண உடன்படிக்கையை ஊழியர் சொல்ல சொல்ல மணமகனும் மணமகளும் சொல்லுகிறார்களே தவிர அதை உணர்ந்து ஏற்று கொண்டு தங்கள் இருதயத்திலிருந்து எத்தனை பேர் அறிக்கையிடுகிறார்கள்?

அந்த திருமண உடன்படிக்கை என்ன?

மணமகன் மணமகளிடத்தில் செய்யும் உடன்படிக்கை என்ன?

________________(மணமகன் பெயர்)____________ ஆகிய நான் தேவ பிரமாணத்தின் படி பரிசுத்த திருமண நி̈லைமையில் ஒருமித்து வாழ __________(மணமகள் பெயர்)______ ஐ எனக்கு வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு, சுகத்திலும், துக்கத்திலும் நேசித்து, ஆதரித்துக் கனப்படுத்தி, காப்பாற்றி இருவரும் உயிரோடிருக்குமளவும் பிறர் முகம் பாராமல் இவளுக்கே கணவனாய் இருப்பேன்.

திருமணம் ஆனா பின்பு கணவன் இந்த உடன்படிக்கையின் படி சரியாய் இருக்கிறாரா? 

மணமகள் மணமகனிடத்தில் செய்ய வேண்டிய உடன்படிக்கை என்ன?

__________________(மணமகள்)___________ ஆகிய நான் தேவ பிரமாணத்தின்படி பரிசுத்த திருமண நிலைமையில் ஒருமித்து வாழ ____________(மணமகன்)_________ ஐ எனது வாழ்க்கை துணைவராக ஏற்றுக் கொண்டு, இவருக்கு கீழ்படிந்து பணிவிடை செய்து, சுகத்திலும், துக்கத்திலும் இவரை நேசித்து, கனப்படுத்தி, காப்பாற்றி இருவரும் உயிரோடிருக்கு மளவும் பிறர் முகம் பாராமல் இவருக்கே மனைவியாக இருப்பேன்.

மனைவி இந்த உடன்படிக்கையின் படி சரியாய் இருக்கிறார்களா? 

இருவரும் சேர்ந்து கையை பிடித்து செய்ய வேண்டிய உடன்படிக்கை என்ன? 

மணமகன் சபையார்க்கும் மற்ற எல்லாருக்கும் முன்பாக செய்யும் உடன்படிக்கை என்ன?

தேவனுடைய சமூகத்தில் இங்கு கூடி வந்திருக்கும் யாவரும் சாட்சியாக ___________(மணமகன்)____________ ஆகிய நான் _________(மணமகள்)____________ ஆகிய உன்னை, இன்று முதல் எனக்கு வாழ்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டு, எனக்கு உண்டான யாவற்றையும் உனக்கு கொடுத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின்படி நன்மையிலும், தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் நாம் உயிரோடிருக்குமளவும் கிறிஸ்து சபைக்கு தலையாயிருந்து, அதில் அன்பு கூர்ந்து அதை தேவனுக்கு முன் மகிமையாக நிறுத்தும்படிக்கு தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தது போல நானும் எல்லா நிலையிலும் நமது குடும்பத்திற்கு தலையாய் இருந்து, உன்னில் அன்புகூறவும், உன்னை போஷித்து காப்பாற்றவும் ஆவிக்குரிய வாழ்க்கையில் நீ வளர உதவியாய் இருக்கவும் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்று தேவனுக்கு முன்பாகவும், ஊழியர்களுக்கு முன்பாகவும், சமுதாயத்திற்கு முன்பாகவும் உனக்கு வாக்குக் கொடுக்கிறேன்

கணவன் உண்மையிலே மனைவிக்கு தலையாக இருந்து அவளிடத்தில் அன்பு செலுத்தி தங்களுடைய கடமையை சரியாய் செய்கிறார்களா? அல்லது தேவனுடைய சத்தியத்தை மாற்றி மனைவி தலையாக இருக்கட்டும் என்று கீழ் அடங்கி போகிறார்களா?

மணமகள் சபையார்க்கும் மற்ற எல்லாருக்கும் முன்பதாக செய்யும் உடன்படிக்கை என்ன?

தேவனுடைய சமூகத்தில் இங்கு கூடி வந்திருக்கும் யாவரும் சாட்சியாக __________(மணமகள்)___________ ஆகிய நான், ____________(மணமகன்)____________ ஆகிய உம்மை, 
இன்று முதல் எனக்கு வாழ்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டு, எனக்கு உண்டான யாவற்றையும் உமக்கு கொடுத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின்படி நன்மையிலும், தீமையிலும், வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் மரணம் நம்மை பிரிக்குமளவும் எல்லா நிலையிலும் உம்மை நேசிக்கவும் பயபக்தியோடு ̧கீழ்ப்படியவும் தேவனுக்கு முன்பாகவும், ஊழியர்களுக்கு முன்பாகவும், சமுதாயத்திற்கு முன்பாகவும் உமக்கு வாக்குக் கொடுக்கிறேன்.

மனைவி உண்மையிலே கணவனை தலையாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு கீழ்ப்படிகிறார்களா அல்லது கணவனுக்கே தலையாக இருக்கிறார்களா?

இன்றைக்கு நமக்கு இந்த உடன்படிக்கை ஞாபகத்தில் இருக்கிறதா என்பதே கேள்வி குறிதான் 

புதிதாய் திருமணத்தில் இணைய போகிறவர்கள் இந்த உடன்படிக்கையை மனதில் வைத்து கொள்ளுங்கள் 
மல்கியா 2:14......... கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார். உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே. 

மோதிரமோ அல்லது மாலையோ அல்லது மாங்கல்யமோ அணிந்து கொண்டால்
திருமணம் முடிந்தது என்று முடிவு செய்து விடுகிறார்கள் 

மேலே சொன்ன உடன்படிக்கைக்கு அடையாளம் தான் மோதிரமோ அல்லது மாங்கல்யமோ அல்லது மற்ற காரியங்களோ ஆகும்

கணவனும் மனைவியும் தாங்கள் செய்த திருமண உடன்படிக்கையை மீறாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

உடன்படிக்கையை மீறுகிறவர்களை தேவன் ஏற்றுக் கொள்ளுவதில்லை 

இந்த உடன்படிக்கையின் படி மரணம் தான் இருவரையும் பிரிக்க வேண்டும்

திருமண உடன்படிக்கையில் ஆணையிட்டு அதில் நஷ்டம் வந்தாலும் நாம் தவறாமல் இருக்க வேண்டும்
சங்கீதம் 15:4 ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன், கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான், ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக்கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்

Wednesday, 11 May 2022

ஒரு புருஷனையும் ஒரு ஸ்திரீயையும் விவாகத்தில் தேவன் எப்படி இணைக்கிறார்?

பாடம் :09 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?

ஒரு புருஷனையும் ஒரு ஸ்திரீயையும் விவாகத்தில் தேவன் எப்படி  இணைக்கிறார்?

உலகத்தில் இன்றைக்கு திருமணங்கள் ஒவ்வொரு கலாச்சாரத்தின் அடிப்படையில் நடக்கின்றன.

உலகத்தில் இன்றைக்கு எப்படி திருமண பந்தங்கள் இணைக்கப்படுகின்றன?

1) புருஷனும் ஸ்திரீயும் மூன்று முறை அக்கினையை சுற்றி வருவதின் மூலமாக திருமணம் செய்து கொள்ளுகிறார்கள் 
2) மஞ்சள் கயிறை புருஷன் ஸ்திரீக்கு கட்டுவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
3) சில இடங்களில் கால் விரலில் வளையத்தை இருவரும் அணிவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
4) மண மாலைகளை மாற்றிக் கொள்ளுவதின் மூலம் திருமணம் செய்கிறார்கள்
5) ஒருவிதமான கருப்பு கயிறை புருஷனானவன் ஸ்திரீக்கு அணிவிப்பதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்

இப்படி பலவிதமான திருமண சடங்குகள் மூலம் உலகத்தார் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்

கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்?

1) புருஷனும் ஸ்திரீயும் மோதிரங்களை மாற்றிக் கொள்ளுவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
2) புருஷனும் ஸ்திரீயும் வேதாகமத்தை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளுவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
3) புருஷன் ஸ்திரீக்கு மாங்கல்யத்தை கட்டுவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
4) மாலை மாற்றிக் கொள்ளுவதின் மூலம் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்
5) புருஷன் ஸ்திரீக்கு பொன்னினால் செய்யப்பட்ட செயினை அணிவிப்பதின் மூலமாக திருமணம் செய்து கொள்ளுகிறார்கள்

இப்படிப்பட்ட முறையில் தான் கிறிஸ்தவ திருமணங்கள் நடைபெறுகிறது 

ஆனால் தேவன் ஒரு புருஷனையும் ஸ்திரீயையும் விவாகத்தில் இணைக்கிறார் என்றால் எப்படி இணைக்கிறார்?

தேவன் புருஷனையும் ஸ்திரீயையும் திருமண உடன்படிக்கையின் மூலமாக தான் இணைக்கிறார்
மல் 2:14 ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.

புருஷனும் ஸ்திரீயும் அவர்கள் செய்யக்கூடிய திருமண உடன்படிக்கையின் மூலமாக தான் இணைக்கிறார்

உலகத்தில் வாழக்கூடியவர்கள் எல்லாரும் எந்த திருமண முறையிலும் திருமணம் செய்யலாம் ஆனால் அவர்கள் திருமண உடன்படிக்கை செய்யும் போது தான் அதில் தான் தேவன் அவர்களை இணைக்கிறார் அதற்கு தேவன் தான்  சாட்சியாக இருக்கிறார்
மல் 2:14 ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்;

திருமண உடன்படிக்கை இல்லையென்றால் அது திருமணமும் இல்லை அதை தேவன் இணைப்பதும் இல்லை

அந்த திருமண உடன்படிக்கை என்ன என்பதை வரும் இனி வரும் பாடங்களில் கற்றுக்கொள்வோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Tuesday, 10 May 2022

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் என்ன செய்தார்?

பாடம் :8 ஓய்வு நாள் பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?                                   

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் என்ன செய்தார்?

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஏன் ஆசரித்தார் என்பதை கற்றுக் கொண்டிருக்கிறோம்

ஆசாரியர்கள் ஓய்வுநாளில் வேலை செய்தாலும் குற்றம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்ன உபதேசத்தையும் நாம் கவனித்து இருக்கிறோம்

உலகமெங்கும் இருக்கக்கூடிய யூதர்கள் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் கூடி இருப்பார்கள்

அதேபோல இஸ்ரவேல் தேசத்தில் இருக்கக்கூடிய யூதர்கள் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்தில் கூடி இருப்பார்கள் என்பதையும் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள் 

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் என்ன செய்தார் என்பதை நாம் கற்றுக்கொள்ள போகிறோம்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணினார்
மாற் 1:21 பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார்.
மாற் 6:2 ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத் தொடங்கினார். ,,,,

இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணுவதை தம்முடைய வழக்கமாக வைத்து இருந்தார்
லூக் 4:16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
லூக் 4:31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.
லூக் 13:10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.

ஒரு முறை இயேசு கிறிஸ்து ஒரு ஓய்வுநாளில் பரிசேயனுடைய வீட்டிலே போஜனம் பண்ணுவதற்காக போய் இருந்தார்
லூக் 14:1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.

இயேசு கிறிஸ்துவை குற்றம் சாட்டும்படிக்கு யூதர்கள் ஒரு கேள்வியை கேட்டார்கள்
மத் 12:10 அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் எது நியாயம் என்ற கேள்வியை கேட்ட போது பரிசேயர்கள் அமைதலாயிருந்தார்கள்
மாற் 3:4 அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.

பரிசேயர்கள் ஓய்வுநாளில் நன்மை செய்வதை விரும்பாமல் இருந்தால் இயேசு கிறிஸ்து அவர்களை கடிந்து கொண்டார்
மாற் 3:5 அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

இயேசு கிறிஸ்து அதற்கு ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயம் தான் என்றார்
மத் 12:11 அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
மத் 12:12 ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான் என்று சொன்னார்.

ஓய்வுநாளில் சூம்பின கையையுடைய மனுஷனை அவர் சொஸ்தப்படுத்தினார்
மத் 12:13 பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.

ஓய்வுநாளில் அவர் நன்மை செய்தபடியால் அவரை கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை பண்ணினார்கள்
மத் 12:14 அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.
மாற் 3:6 உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.
லூக் 6:11 அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் நன்மை செய்வதை யூதர்கள் தடை செய்தார்கள்
லூக் 13:10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
லூக் 13:11 அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
லூக் 13:12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
லூக் 13:13 அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து,தேவனை மகிமைப்படுத்தினாள்.
லூக் 13:14 இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
லூக் 13:15 கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
லூக் 13:16 இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
லூக் 13:17 அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் தொடர்ந்து நன்மை செய்து கொண்டிருந்தார்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் நீர்க்கோவை வியாதியுள்ள மனுஷனை சொஸ்தமாக்கினார்
லூக் 14:1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
லூக் 14:2 அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
லூக் 14:3 இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
லூக் 14:4 அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
லூக் 14:5 அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
லூக் 14:6 அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.

ஓய்வுநாளில் படுக்கையை எடுத்து கொண்டு நடப்பதை கூட யூதர்கள் நியாயமல்ல என்று சொன்னார்கள்
யோவா 5:8 இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடஎன்றார்.
யோவா 5:9 உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.
யோவா 5:10 ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.
யோவா 5:11 அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
யோவா 5:12 அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.

இயேசு கிறிஸ்து இந்த நன்மையை ஓய்வுநாளில் செய்தபடியால் அவரை துன்பப்படுத்தி கொலை செய்ய யூதர்கள் வகை தேடினார்கள்
யோவா 5:16 இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
யோவா 5:17 இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்.

இயேசு ஓய்வுநாளை மீறினார் என்று குற்றம் சாட்டி அவரை கொலை செய்ய அதிகமாய் வகை தேடினார்கள்
யோவா 5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

ஓய்வுநாளில் இயேசு கிறிஸ்து நன்மை செய்தபடியால் அவர் மேல் யூதர்கள் எரிச்சலாய் இருந்தார்கள்
யோவா 7:22 விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள்.
யோவா 7:23 மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?

நாம் இங்கே பார்த்தது எல்லாம் இஸ்ரவேல் தேசத்தில் நடந்த சம்பவங்கள் என்பதையும் அவர்கள் அந்த பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் என்பதையும் மனதிலே வைத்துக் கொள்ளுங்கள்
 
இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் இதை தவிர வேறொன்றும் செய்ததாக எந்த வேதவாக்கியங்களும் இல்லை

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் ஜனங்களுக்கு போதித்தும் நன்மை செய்தும்  கொண்டும் வந்தார் ஏனென்றால் அவர் ஓய்வுநாளுக்கு கர்த்தர் என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள்

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Monday, 9 May 2022

விவாகத்தைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் பிரமாணம் என்ன போதிக்கிறது?

பாடம் : 08 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?                                        

விவாகத்தைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் பிரமாணம் என்ன போதிக்கிறது?

புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் உபதேசம் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உபதேசத்தை தான் கட்டளையிடுகிறது 

கணவனே அல்லது மனைவியோ மரித்து போன பிற்பாடுதான் வேறொரு திருமணம் செய்ய முடியும் என்பதையும் புதிய ஏற்பாடு போதிக்கிறது 

இதை குறித்து பின் வரும் நாட்களில் கற்றுக் கொள்ளுவோம் 

இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் இஸ்ரவேலர்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும் யாரை திருமணம் செய்யக்கூடாது என்று தேவன் தெளிவாகவே சத்தியத்தை வெளிப்படுத்தி இருந்தார்

அதோடு மாத்திரம் அல்ல திருமண ஒழுக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கட்டளையிட்டு இருந்தார்

புதிய ஏற்பாட்டில் தேவன் திருமணத்தை எப்படிப்பட்ட சட்டத்திட்டங்களை கொடுக்கிறார் என்று கற்றுக் கொள்ளுவோம் 

தேவன் கிறிஸ்தவர்களுக்கு திருமண காரியங்களில் கொடுக்கக்கூடிய கட்டளை என்ன?

கிறிஸ்தவர்கள் அந்நிய நுகத்துடன் பிணைக்கப்படக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்

நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமில்லை என்றும் ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் இல்லை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
2கொரி 6:14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவில்லை என்பதையும் அவிசுவாசியுடனே விசுவாசிக்கு பங்கில்லை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்
2கொரி 6:15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?

தேவனுடைய ஆலயமாயிருக்கிற நமக்கும் விக்கிரகங்களை சேவிக்கிறவர்களுடனே சம்பந்தமில்லை என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்
2கொரி 6:16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

இன்றைக்கு நிறைய கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அந்நிய நுகத்தில் பிணைக்கப்படுவதை குறித்து கொஞ்சமும் கவலைப்படுவதில்லை

இப்படி பிள்ளைகள் அந்நிய நுகத்தில்  பிள்ளைகள் பிணைக்கப் படும் போது அவர்கள் எப்படி பக்தியுள்ள சந்ததியை பெறுவார்கள்? என்பதை சிந்திப்பது இல்லை

நாம் தேவனுடைய பிள்ளைகளோடு மாத்திரம் விவாக சம்பந்தம் வைக்கும் போது மாத்திரமே தேவன் நம்மை ஏற்றுக் கொள்ளுவார் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்
2கொரி 6:17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2கொரி 6:18 அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் புறஜாதிகளை(கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்) திருமணம் செய்து,  பின்பு கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்தலாம் என்றும் அதன் மூலமாக ஒரு ஆத்துமாவை இரட்சிக்கிறோம் என்று சொல்லுகிறார்கள் 

அவர்கள் அப்படி சொன்னாலும் அவர்கள் உண்மையில் ஆத்துமா பாரத்தினாலும் அப்படி சொல்லுவதில்லை ஏனென்றால் அவர்கள் ஒன்று காதல் வயப்பட்டு இருக்க வேண்டும்   அல்லது  பொருளாசை உடையவர்களாக இருக்க  வேண்டும் அல்லது ஜாதி பார்க்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்

அப்படி விவாகம் செய்து ஒரு ஆத்துமாவை கொண்டு வர முடியுமா?

நாம் அந்நிய நுகத்தில் பிணைக்கப்படும் போது அவர்கள் தேவனை விட்டு விலக செய்து விடுவார்கள்
யாத் 34:16 அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.
உபா 7:3 அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.
உபா 7:4 என்னைப் பின்பற்றாமல் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.

அந்நிய ஸ்திரீகளை விவாகம் செய்த சாலமோன் ஞானியையே அவர்கள் தேவனை விட்டு விலக செய்து அந்நிய தேவர்களை சேவிக்க வைத்தார்கள் என்றால் நம்முடைய நிலைமை எம்மாத்திரம்?
1ராஜா 11:1 ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
1ராஜா 11:2 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.
1ராஜா 11:4 சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.

இஸ்ரவேலர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகம் செய்யலாம் ஆனால் அவர்கள் தங்களுக்குள்ளே (இஸ்ரவேலர்கள்) தான்  விவாகம் பண்ண வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருந்தார்
எண் 36:6 கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்.
எண் 36:8 இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.

புதிய ஏற்பாட்டில் விவாகத்தைப் பற்றி தேவனுடைய கட்டளை என்ன?

தேவனுடைய பிள்ளைகள் கர்த்தருக்குள் இருக்கக்கூடியவர்களை விவாகம் பண்ண வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார்
1கொரி 7:39 ,,,, தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்.

கிறிஸ்தவர்கள் திருமணம் செய்யும் போது அவர்கள் கர்த்தருக்குட்பட்டவர்களை மாத்திரமே திருமணம் செய்ய வேண்டும், ஒருபோதும் அந்நிய நுகத்திலே பிணைக்கப்படக்கூடாது

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து விவாக சம்பந்தமான சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Sunday, 8 May 2022

பிசாசுகளின் விசுவாசத்தினாலே என்ன பிரயோஜனம் இருக்கிறது?

Tamil Bible Question & Answer

பிசாசுகளின் விசுவாசத்தினாலே என்ன பிரயோஜனம் இருக்கிறது?

ஆபிரகாமின் விசுவாசம் எப்போது பூரணப்பட்டது?


Subscribe Like Share

இயேசு கிறிஸ்து ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசரித்தாரா?

பாடம் :7 ஒய்வு நாள் பிரமாணம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?                                   

இயேசு கிறிஸ்து ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசரித்தாரா?

இயேசு கிறிஸ்து ஓய்வு நாளை ஆசரித்தார் ஆகையால் நாமும் ஆசரிக்க வேண்டும் என்று ஓய்வு நாள் வருகை ஆசரிப்பு சபையார் சொல்லுகிறார்கள் 

ஓய்வுநாள் சபையாருக்கு நீங்கள் எவ்வளவு வேத ஆதாரங்களை காண்பித்தாலும் அதை எல்லாம் அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசரித்தாரா என்பதை புரிந்து கொள்ளுவதற்கு முன்பு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

இயேசு கிறிஸ்து யூதன் என்பதையும் அவர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ் பிறந்தவர் என்பதையும்  நாம் உணர்த்து கொள்ள வேண்டும்
கலா 4:5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.

நியாயப்பிரமணத்திற்கு கீழ் பிறந்த எந்த இஸ்ரவேலனும்(யூதனும்) நியாயப்பிரமணத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்கிற அடிப்படை சத்தியங்கள் கூட இவர்களுக்கு தெரிவது இல்லை 

யூதர்கள் எப்படி நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமோ அதைப் போல இயேசு கிறிஸ்துவும் அதற்கு கீழ்ப்படிந்தார்
மத் 5:17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

இயேசு கிறிஸ்து சிலுவையின் மரணபரியந்தம் நியாயப்பிரமணத்திற்கு கீழ்ப்படிந்தார் 

இயேசு கிறிஸ்து  நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் அழிக்க வராமல் நியாயப்பிரமணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் சிலுவையில் நிறைவேற்றி முடித்தார் 

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசரித்தாரா?

ஆம் இயேசு கிறிஸ்து ஓய்வுநாளை ஆசரித்தார் ஏனென்றால் அவர் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவராக வந்தார்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளுக்கும் கர்த்தராய் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தது கொள்ள வேண்டும்
மாற்  2:28 ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

தேவன் தம்முடைய கிரியை செய்வதை அவர் விட்டு ஓய்ந்து இருப்பதில்லை தொடர்ந்து எல்லா நாட்களிலும் அவர் நன்மை செய்யக் கூடியவராக இருக்கிறார் அதேபோல் இயேசு கிறிஸ்துவும் தொடர்ந்து எல்லா நாளும் நன்மை செய்யக் கூடியவராக இருந்தார் அதனால் தான் ஓய்வு நாளுக்கும் அவர் கர்த்தராக இருக்கிறார்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளிலும் நன்மை செய்த படியால் அவர் ஓய்வுநாளை ஆசரிக்கவில்லை என்று யூதர்கள் அவர்மேல் குற்றம் சாட்டினார்கள்
மாற்கு 3:2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
யோவான் 5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

ஓய்வுநாளை மீறினார்கள் என்று  இயேசு கிறிஸ்துவின் சீஷர்களை  பரிசேயர்கள் குற்றம் சாட்டினார்கள்
மத் 12:1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
மத் 12:2 பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.

இயேசு கிறிஸ்து அதற்கு என்ன பிரதியுத்திரம் கொடுத்தார்?

முதலாவது தாவீது பசியாயிருந்த போது ஆசாரியர்கள் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களை புசித்தது அது குற்றமில்லை என்றார்
மத் 12:3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
மத் 12:4 அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.

தாவீது ஓய்வு நாளில் ஆசாரியனிடத்தில் போய் தேவ சமுகத்து அப்பத்தை வாங்கி அவரும் அவரோடு இருந்தவர்களும் புசித்த போதும் அவர்கள் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் 

இரண்டாவது ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல் ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும் அவர்கள் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்றார்
மத் 12:5 அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

ஓய்வுநாளை எல்லா மனுஷர்களும் ஆசரிக்க வேண்டும் என்று வாதிடுகிறவர்களே இந்த ஆசாரியர்கள் தேவாலயத்தில்  ஓய்வுநாளில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்களே இவர்களை தேவன் எப்படி நியாயந்தீர்ப்பார் என்று சொல்லுங்கள்

1) ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் ஓய்ந்திருப்பது இல்லை
2) ஓய்வு நாளை வேலை நாளாக்கிருக்கிறார்கள்
3) ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் அவர்கள் குற்றமில்லாதிருக்கிறார்கள்

ஓய்வுநாள் மனுஷனுக்கு உண்டாக்கப்பட்டது என்றால் இவர்கள் மனுஷர்கள் இல்லையா? இவர்கள் ஏன் இந்த ஓய்வு நாள் பிரமாணத்திற்கு கீழ்ப்படியவில்லை

கேள்வி இதுதான் ஓய்வு நாளில் வேலை செய்த எல்லா ஆசாரியர்களும் நியாயத்தீர்ப்பு நாளில் குற்றவாளியாக நிறுத்தப்படுவார்களா?
(ஓய்வுநாள் எந்த மனிதர்களுக்கு உண்டாக்கப்பட்டது என்பதை பின்வரும் பாடங்களில் கற்றுக்கொள்வோம்)

ஆனால் இந்த ஓய்வுநாள் சபையார் ஆசாரியர்கள் ஓய்வு நாளில் வேலை செய்யலாம் அது தவறு இல்லை தேவன் அவர்கள் கட்டளை கொடுத்து இருக்கிறார் என்கிறார்கள்

மேலும் பரிசேயர்கள் ஓய்வுநாள் பிரமாணத்தை வைத்துக் கொண்டு சீஷர்களை இரக்கமில்லாமல் குற்றப்படுத்த முயற்சி செய்தார்கள் அதை இயேசு கிறிஸ்து கடிந்து கொண்டார்
மத் 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.

இன்றைக்கும் ஓய்வுநாள் பிரமாணத்தை வைத்துக்கொண்டு குற்றப்படுத்த கூடியவர்கள் இந்த பரிசேயர்களைப் போல் இருக்கிறார்கள்

இயேசு கிறிஸ்து தேவாலயத்திலும் பெரியவர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
மத் 12:6 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தேவாலயத்தை வைத்து தான் நியாயப்பிரமாணம் இருக்கிறது இயேசு கிறிஸ்து தேவாலயத்திலும் பெரியவராக இருக்கிறார்

இயேசு கிறிஸ்து ஓய்வுநாளுக்கும் கர்த்தராக இருக்கிறார்
மத் 12:8 மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

இயேசு கிறிஸ்து  ஓய்வு நாள்  பிரமணத்திற்கு கீழ்ப்பட்டவராக   வந்தாலும் அவர் ஓய்வு நாளுக்கும் கர்த்தராக இருந்தார்

கர்த்தருக்கு சித்தமானல் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும்  தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும்  உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்

Friday, 6 May 2022

இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் திருமண ஒழுங்குகள் எப்படி இருந்தன?

பாடம் : 07 விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதா?                                      

இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் திருமண ஒழுங்குகள் எப்படி இருந்தன?

நியாயப்பிரமாண காலகட்டத்தில் தேவன் விவாக விசயத்தில் என்ன சட்டத்திட்டங்களை கொடுத்து இருந்தார் என்பதைக் குறித்து நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்
 
நியாயப்பிரமாண காலகட்டத்தில் புறஜாதிகள் முறைகேடான திருமண உறவுகளையும் அருவருக்கத்தக்க பாலியல் உறவுகளையும் வைத்து இருந்தார்கள்.

தம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்று தேவன் நியாயப்பிரமாணத்தில் திருமணம் சம்பந்தமாகவும் பாலியல் உறவுகள் சம்பந்தமாகவும் பல சட்டங்களையும் ஒழுக்க முறைகளையும் கொண்டு வந்தார்

நியாயப்பிரமாணத்தில் இஸ்ரவேலர்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்கிற சட்டத்தை தேவன் கொடுத்து இருந்தார்

இப்போது திருமண காரியங்களில் இஸ்ரவேலர்களுக்கு தேவன் கொடுத்த ஒழுக்க முறைகளை நாம் கற்றுக் கொள்ள போகிறோம் 

இஸ்ரவேலன் ஒருவன் நியாயப்பிரமாணத்தின் சட்டத்தின்படி திருமணம் செய்வான் என்று சொன்னால் அவனை எப்படி நடத்த வேண்டும் என்று தேவன் ஒழுக்க முறைகளை கொடுத்து இருந்தார்

ஒரு பெண்ணை விவாகத்திற்கு என்று தனக்கு நியமித்துக் இருக்கிறவன் யுத்தம் செய்யக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டு இருந்தார்
உபா 20:7 ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.

இஸ்ரவேலன் புதிதாய் ஒரு பெண்ணை விவாகம் பண்ணினால் அவன் என்ன செய்ய வேண்டும்?
உபா 24:5 ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.

இஸ்ரவேலன் சிறையிருப்பில் வந்த ஒரு ஸ்திரீயை விவாகம் பண்ணினால் என்ன செய்ய வேண்டும்?
உபா 21:11 சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,
உபா 21:12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து,
உபா 21:13 தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
உபா 21:14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.

ஒரு இஸ்ரவேலனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தால் அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
உபா 21:15 இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,
உபா 21:16 தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.
உபா 21:17 வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.

ஒரு இஸ்ரவேலன் ஒரு ஸ்திரீயை திருமணம் செய்த கொண்ட பின்பு அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?
உபா 24:1 ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.
உபா 24:2 அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.
உபா 24:3 அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும்,
உபா 24:4 அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.

ஒரு இஸ்ரவேலன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால் அவனுடைய மனைவி என்ன செய்ய வேண்டும்?
உபா 25:5 சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திரசந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
உபா 25:6 மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன் பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும்.
உபா 25:7 அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப் போய்: என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
உபா 25:8 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடே பேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,
உபா 25:9 அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.
உபா 25:10 இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.

இஸ்ரவேலர்களுக்கு இப்படிப்பட்ட சட்டத்திட்டங்களையெல்லாம் தேவன் நியாயப்பிரமாணத்தில் கொடுத்து இருந்தார்

கர்த்தருக்கு சித்தமானால் விவாகத்தை இன்னும் கற்றுக் கொள்ளுவோம்

நீங்கள் ஈரோட்டில் இருந்தால் ஜெபிக்கவும் தேவனுடைய சத்தியங்களை இலவசமாகவும் உங்கள் வீடுகளில் கற்றுக்கொள்ள எங்களை அழைக்கவும்

Preacher: Bro Ariyel Barnabas
Church Of Christ
Erode
Call-9025776966

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற இந்த எண்ணுக்கு குறுந் தகவல் அனுப்பவும்