தேவன் இன்றைக்கு மனிதர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று கதறி கண்ணீர் விட்டு அழுகிறார் என்று ஒரு கூட்ட மக்கள் போதிக்கிறார்கள்
சமீபத்தில் ஒருவருடைய பதிவை படித்தேன் அதில் தேவன் ஒரு நபரிடம் நீ இந்த இடத்திற்கு ஊழியத்திற்கு போய் அவர்கள் மனந்திரும்பும் படி போதி என்றாராம் அதற்கு அந்த நபர் நான் போக மாட்டேன் என்று சொன்ன போது தேவன் கதறி அழுததாகவும் அவருடைய கண்ணீர் துளி
அந்த நபர் மேல் பட்டபோது உடனே
அவர் அந்த இடத்திற்கு ஊழியத்திற்கு போனாராம்
வேதத்தில்
எங்கேயாவது பரலோகத்தின் தேவன் அழுததை நான் பார்க்க முடியுமா?
Mat 22:29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
இன்றைக்கு
தேவன் ஜனங்களிடம் மனந்திரும்பும் படி
அழுது கொண்டு இருக்கிறாரா அல்லது கட்டளையிடுகிறாரா?
Act 17:30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
- மனந்திரும்புங்கள் என்பது பரலோகத்திலிருக்கிற ராஜாவின் கட்டளை
மனந்திரும்ப வேண்டும் என்று கட்டளையிட்டு
இருக்கிறார் ஏனென்றால்
நம்முடைய தேவன் பூமியனைத்திற்கும் ராஜா
Psa 47:7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
Psa 47:8 தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.
பூமியில் உள்ளவர்களில் ஒருவரும் கொட்டு
போகக்கூடாது என்றும் மனந்திரும்ப வேண்டும் என்று தேவன் நீடிய பொறுமையாக
இருக்கிறார்
2Pe 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
- தேவன் யாரிடத்தில் மனந்திரும்புங்கள் என்று கெஞ்சிக் கொண்டு இருக்கவில்லை
- மனிதன் சிருஷ்டிகராகிய தேவனை மறுதலித்து விட்டு பாவத்தை அன்பு கூறும் போது தேவன் அவனை அதற்கே ஒப்புக் கொடுக்கிறார்
தேவனை சிருஷ்டிகர் என்று அறிந்து அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும்,
ஸ்தோத்தரியாமலும் இருக்கும் இந்த மனிதர்களுக்கு தேவன் என்ன செய்கிறார்?
Rom 1:18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
- இந்த வசனத்தில் தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று எதிர்காலத்தில் சொல்லாமல் இந்த காலத்திலே அதாவது நிகழ்காலத்தில் சொல்லியிருப்பதை கவனியுங்கள்,
தேவனுடைய என்ன கோபம் வெளிப்பட்டு இருக்கிறது. கீழே உள்ள வசனங்களை பாருங்கள்.
தேவனை சிருஷ்டிகர் என்று ஏற்றுக் கொள்ளாத மனிதர்களை தேவன் அவர்களை
அசுத்தத்திற்கு ஒப்புக் கொடுத்து இருக்கிறார்.
Rom 1:22
அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
Rom 1:23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
Rom 1:24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத் தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
Rom 1:25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
- இவர்கள் விக்கிரகங்களை வணங்கும்படியாக அவர்களை தேவன் அசுத்தத்திற்கு ஒப்புக் கொடுத்து விடுகிறார்.
தேவனை சிருஷ்டிகர் என்று ஏற்றுக் கொள்ளாத மனிதர்களை தேவன் அவர்களை
இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக் கொடுத்து இருக்கிறார்
Rom 1:26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
Rom 1:27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
- இன்றைக்கு இருக்கக் கூடிய ஹோமோ செக்ஸ்(ஆண் புணர்ச்சி) உறவுகள் லெஸ்பியன்(பெண் புணர்ச்சி) உறவுகள் மிருக புணர்ச்சிக்காரர்கள் இப்படி இவர்கள் இதின்மேல் அன்பு வைக்கும் போது தேவன் அவர்களை அதற்கே ஒப்புக் கொடுத்துவிடுகிறார்
- தேவனை சிருஷ்டிகர் என்று ஏற்றுக் கொள்ளாத மனிதர்களை மேலே சொல்லப்பட்ட பாவங்களுக்கு தேவன் ஒப்புக் கொடுத்து விடுகிறார்.
தேவனை சிருஷ்டிகர் என்று ஏற்றுக் கொள்ளாத மனிதர்களை தேவன் அவர்களை
கேடான சிந்தைக்கு ஒப்புக் கொடுத்து இருக்கிறார்.
Rom 1:28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
Rom 1:29 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
Rom 1:30 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
Rom 1:31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை இவர்கள் அறிந்து இருக்கிறார்கள்
Rom 1:32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
- மேலே உள்ள பாவத்தின் பட்டியலில்(24 பாவங்கள்) நீங்கள் எந்தவொரு பாவத்தில் இருந்தாலும் சரி தேவன் தான் உங்களை அதற்கு ஒப்புக் கொடுத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்ளுங்கள்
- தேவன் மனந்திரும்புங்கள் என்று யாரிடமும் கெஞ்சிக் கொண்டு இருக்கவில்லை
- தேவனிடத்தில் மனந்திரும்பும் படி கட்டளையிட்டு இருக்கிறார்
No comments:
Post a Comment