Tuesday, 24 March 2015

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டு இருக்கிற ஏழு ஞானஸ்நானங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?



பகுதி;7 ஞானஸ்நானம் பற்றிய சத்தியங்கள்

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டு இருக்கிற ஏழு ஞானஸ்நானங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நம்முடைய புதிய ஏற்பாட்டில் ஏழு ஞானஸ்நானங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது அது என்ன என்பதையும் எந்த ஞானஸ்நானம் நமக்கு இன்றைக்கு கட்டளையிடப்பட்டு இருக்கிறது என்பதையும் வேத வாக்கியத்தைக் கொண்டு அறிந்து கொள்வோம்

1. நோவா தன் குடும்பத்தோடு பேழைக்குள்ளாக பெற்றுக் கொண்ட     ஞானஸ்நானம்
நோவாவின் காலத்தில் தேவன் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி உலகத்தை தேவன் அழித்தார், பேழை முழுவதும் ஜலத்தினால் மூடப்பட்டு இருந்தது. அதைக் குறித்து தேவன் சொல்லும் போது அவர்கள் பேழைக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றார்கள் என்கிறார்
1Pe 3:20 ..... அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
1Pe 3:21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
இந்த ஞானஸ்நானத்தை இன்றைக்கு நாம் பெற முடியுமா என்றால் நாம் பெற முடியாது

2. இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்குள்ளாக ஜலத்தினாலும் மேகத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள்
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து மோசேயின் மூலமாக விடுதலையாகி வரும் போது செங்கடலை கடந்த போது இரண்டு பக்கமும் தண்ணீர் மதிலாக நின்றது மேலே அக்கினி ஸ்தம்பமும் மேக ஸ்தம்பமும் மூடி இருந்தது, அதற்குள்ளாக அவர்கள் கடந்து போனார்கள். இதைக் குறித்து தேவன் சொல்லும் போது அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்கிறார்
1Co 10:1 இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.
1Co 10:2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
இந்த ஞானஸ்நானத்தை நாம் இன்றைக்கு பெற முடியாது

3. யோவான் ஸ்நானகனும் இயேசுகிறிஸ்துவும் கொடுத்த மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம்
இந்த ஞானஸ்நானம் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானமாக இருந்தது.
Mar 1:4 யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
Mar 1:5 அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

இந்த ஞானஸ்நானம் தேவனுடைய ஆலோசனையாக இருந்தது
Luk 7:30 பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

Joh 3:22 இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.
கிறிஸ்துவின் சிலுவைக்கு பின்பு இந்த ஞானஸ்நானம் முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு இந்த ஞானஸ்நானத்தினால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை
Act 19:4 அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
Act 19:5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இந்த ஞானஸ்நானத்தையும் இன்றைக்கும் நாம் பெற முடியாது

4. இயேசு கிறிஸ்து மூழ்கின பாடுகளின் ஞானஸ்நானம்
 இது கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளின் மூலம் இந்த ஞானஸ்நானத்தை பெற்றார், இந்த பாடுகளின் மூலம் முழ்குவதை கிறிஸ்து ஸ்நானத்தோடு ஒப்பிட்டு பேசினார். இதை அவருடைய அப்போஸ்தலர்களும் பெறுவார்கள் என்று சொன்னார்
Mat 20:22 இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
இன்றைக்கு இந்த ஞானஸ்நானத்தையும் நாம் பெற முடியாது

5. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்
இந்த ஞானஸ்நானம் விசேஷமாக அவருடைய அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே வாக்குத்தத்தம் செய்யப்பட்டது, பாருங்கள் இந்த ஞானஸ்நானம் கட்டளை அல்ல. பிதாவின் வாக்குத்தத்தம் இது அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் நிறைவேறியது

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பிதாவின் வாக்குத்தத்தம்

Luk 24:49 என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
Act 1:4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
Act 1:5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
பிதாவின் வாக்குத்தத்தம் சில நாளைக்குள்ளே நிறைவேறும் என்று அப்போஸ்தலர்களுக்குத் தான் கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்தார்
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட பிற்பாடு அப்போஸ்தலர்கள் என்ன  செய்ய வேண்டும் என்று கிறிஸ்து அவர்களுக்கு கட்டளையிட்டார்
Act 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
இந்த ஞானஸ்நானத்தையும் இன்றைக்கு நாம் பெற முடியாது

6. அக்கினி ஞானஸ்நானம்
இந்த அக்கினி ஞானஸ்நானம் என்பது பதரை(கீழ்ப்படியாத, கனிகொடாதா மரம்) அக்கினியால் சுட்டொரிப்பதாகும். இதை நியாயத்தீர்ப்பு நாளிலே கிறிஸ்து தேவனுக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு செய்வார்

Luk 3:16 ..... அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
Luk 3:17 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
Mat 7:19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
ஆனால் இன்றைக்கு அநேகர் இந்த சத்தியங்களை உணராமல் அக்கினி ஞானஸ்நானம் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்


7. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம்

கிறிஸ்து உயிர்த்தெழுந்து நாற்பது நாள் அப்போஸ்தலர்களுக்கு தரிசனமாகி பரமேறி போகும் போது உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும்  கட்டளையிட்டது இந்த ஒரே ஞானஸ்நானம் தான் பாவமன்னிப்புக்கென்றும் கிறிஸ்துவின் மரணத்தின் சாயலுக்கு ஒப்பாய் இணைக்கிறது
Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Mat 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

இந்த ஞானஸ்நானம் கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிறிஸ்துவின் நாமம் என்று பார்க்கும் போது அவருடைய அதிகாரத்தை குறிக்கிறது. அவருடைய அதிகாரம் தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதாகும்
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

இன்றைக்கு இந்த ஒரே ஞானஸ்நானம் தான் உலகமெங்கும் கிறிஸ்துவினால் கட்டளையிடப்பட்டு இருக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் சுமார் கி.பி 60-65ல் எழுதும் போது இந்த ஒரே ஞானஸ்நானம் மாத்திரம் இருக்கிறது என்று எழுதுகிறார்
Eph 4:5 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஒரே ஞானஸ்நானமும்,
Mar 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் கிறிஸ்து கட்டளையிட்ட  ஞானஸ்நானத்தை எடுத்து வீட்டீர்களா?
















No comments:

Post a Comment