Tuesday, 24 March 2015

நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஏன் குமாரனின்(இயேசு கிறிஸ்து) நாமத்தை பயன்படுத்த வேண்டும்?



பகுதி:4 தண்ணீருக்குள்ளான ஞானஸ்நானம்

நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் போது ஏன் குமாரனின்(இயேசு கிறிஸ்து) நாமத்தை பயன்படுத்த வேண்டும்?

இயேசு கிறிஸ்து கட்டளையிட்ட பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் (தண்ணீருக்குள்ளாக முழ்குதல்)
ஞானஸ்நானம் பெறும்(கொடுக்கும்) போது ஏன் பிதாவின் நாமத்தை (அதிகாரத்தை) பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து நாம் பார்த்து இருக்கிறோம்

இப்போது ஞானஸ்நானம் பெறும் போது ஏன் குமாரனின் நாமத்தை (அதிகாரத்தை) பயன்படுத்த வேண்டும் என்பதை வசன ஆதாரத்தோடு கவனிப்போம்

1) கிறிஸ்து பிதாவின் சித்தத்தின் படி இந்த பூமிக்கு வந்து நம்முடைய பாவங்களுக்காக தம்மை தாமே ஒப்புக் கொடுத்தார்
Phi 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
Phi 2:7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
Phi 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

2) கிறிஸ்து ஒரு வார்த்தையும் சுயமாய் பேசாமல் பிதாவினுடைய வார்த்தைகளை மாத்திரமே பேசினார்
Joh 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
Joh 12:50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

3) கிறிஸ்துவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார்
Joh 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

4) கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக தான் நாம் பிதாவினிடத்தில் ஜெபிக்க  முடியும்
Joh 16:23 ...... நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.
Joh 16:24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்.

5) கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே நமக்கு பாவ மன்னிப்பாகிய மீட்பு இருக்கிறது
Col 1:14 [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
Act 10:43 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
Gal 1:4 அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;
இன்னும் அநேக வசனங்கள் இதற்கு ஆதாரமாக  இருக்கிறது

6) நாம் ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவோடு தான் அடக்கம் பண்ணப்படுகிறோம்
Rom 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

7) நாம் ஞானஸ்நானம் பெறும் போது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில்  சாயலிலும் இணைக்கப்படுகிறோம்
Rom 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
Gal 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

8) கிறிஸ்து நாம் எப்படி தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று நமக்கு தம்முடைய அடிச்சுவடை வைத்து இருக்கிறார்
1Pe 2:21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

9) இயேசு கிறிஸ்து நியாயத்தீர்ப்பு நாளிலே நம்மை நியாயம் விசாரிக்க போகிறவராக இருக்கிறார்
Joh 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
2Co 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

10) கிறிஸ்து தம்முடைய வருகையில் வரும் போது அவருடைய சாயலுக்கு ஒப்பாக நம்மை மறுரூபப்படுத்துவார்
1Jo 3:2 ..... ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

11) கிறிஸ்து தம்முடைய சுய இரத்தத்தினாலே சபையை சம்பாதித்து இருக்கிறார்
Act 20:28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது ......

12) கிறிஸ்து தான் நித்திய ஜீவனையும் கிரியைகளுக்கேற்ற பலனையும் கொடுக்க போகிறவர்
Joh 6:47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Rev 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
2Ti 4:8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

இப்படிப்பட்ட காரணங்களுக்காக தான் நாம் ஞானஸ்நானம் பெறும் போது இயேசுவின் நாமத்தை (அதிகாரத்தை) பயன்படுத்துகிறோம்

இன்னும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அநேக சத்தியங்கள் உண்டு

நம்முடைய விசுவாசத்தை துவக்கிறவரும் இயேசு கிறிஸ்து தான் அதை முடிக்கிறவரும் இயேசு கிறிஸ்து தான்

நாம் இரட்சிக்கப்படுவது முதல் நித்திய ஜீவனை சுதந்தரிப்பது வரை எல்லாம் இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினால் தான் சகலமும் நடக்கிறது

தேவனுக்கு சித்தமானால் நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் போது (பெறும் போது) பரிசுத்த ஆவியானவரின் நாமத்தை ஏன் பயன்டுத்த வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்



















No comments:

Post a Comment