இயேசு கிறிஸ்து நல்ல சமாரியனா?
அநேகர் இன்றைக்கு இயேசு கிறிஸ்துவை
நல்ல சமாரியன் என்று சொல்லுகிறார்கள். இதைக் குறித்து வேத வசனம் நமக்கு என்ன
சொல்லுகிறது?
முதலில் தேவனுடைய வார்த்தையைக்குறித்து
பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பேதுருவைக் கொண்டு என்ன சொல்லுகிறார் என்று
பார்ப்போம்
2Pe 1:20 வேதத்திலுள்ள எந்தத்
தீர்க்கதரிசனமும்
சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
2Pe 1:21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
இந்த வேத வாக்கியத்தில் தேவனுடைய வார்த்தைகளைக்
குறித்த சத்தியங்களை கற்றுக் கொள்ளுகிறோம்
1) எந்த ஒரு தீர்க்கதரிசனமும் சுயதோற்றம்(சொந்தமாக விளக்கம் கொடுப்பது)
பொருளை உடையது அல்ல
2) தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே(தீர்மானத்தினாலே)
உண்டாகவில்லை
3) பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியானாலே ஏவப்பட்டு(சுமக்கப்பட்டு)
பேசினார்கள்
அப்படியானல் நாம் தேவனுடைய எந்த ஒரு
வசனத்திற்கும் சுயமாக விளக்கம் கொடுக்கக்கூடாது. சுயமாக விளக்கம் கொடுப்பதற்கு
தேவன் நம்மை ஒருபோதும் அனுமதிப்பது இல்லை
Pro 30:5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை
அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர்
கேடகமானவர்.
Pro 30:6 அவருடைய
வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ
பொய்யனாவாய்.
1) இப்போது நல்ல
சமாரியன் சம்பவத்தைக் குறித்து பார்ப்போம்
இதில்
நியாயசாஸ்தரி தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் எனக்கு பிறன் யார் என்று ஒரு
கேள்வியை இயேசுவிடத்தில் கேட்டான்.
Luk 10:29 அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன்
யார் என்று கேட்டான்.
பாருங்கள் அந்த
நியாயசாஸ்திரி கேட்டது எனக்கு பிறன் யார்?
இயேசு
அவனிடத்திலே அந்த சமாரியன் சம்பவத்தைக் குறித்து பேசினார்
பாருங்கள் இந்த சம்பவத்தில் குற்றுயுராக அடிப்பட்டு கிடந்த
ஒரு யூதன் ஒருவன் இருக்கிறான் அந்த வழியே ஒரு ஆசாரியன் வருகிறான் ஒரு லேவியன்
வருகிறான் ஒரு சமாரியன் வருகிறான் இதில் அந்த சமாரியன் நன்மை செய்தான்
2) இந்த நல்ல
சமாரியன் சம்பவத்தை சொல்லி முடித்த பின்பு இயேசு அவனிடத்திலே ஒரு கேள்வி கேட்டார்
Luk 10:36 இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த
மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
3) அந்த
நியாயசாஸ்திரி என்ன பதில் சொன்னான் என்று பாருங்கள்
Luk 10:37 அதற்கு
அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்
போய் அந்தப்படியே செய் என்றார்.
இந்த சம்பவத்தில் இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுக்கக்கூடிய
பாடம் என்னவென்றால் பிறன் யார் என்று தான். அந்த நியாயசாஸ்தரிக்கு பிறன் யார்
என்று பார்க்கும் நன்மை செய்த சமாரியன், இயேசு கிறிஸ்து இதை தான் கேள்வி கேட்ட அந்த
நியாயசாஸ்திரி பதிலாக சொன்னார்.
4) ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அநேகர் இந்த வேத
வாக்கியங்களை புரட்டி போட்டு எப்படி போதிக்கிறார்கள் என்று பாருங்கள்
·
அடிப்பட்டு கிடக்கிற அந்த சமாரியன் – பாவிகள்
·
கள்ளர்- சாத்தான்
·
பிரதான ஆசாரியன்,லேவியன் – நியாயப்பிரமாணம்
·
சமாரியன்- இயேசு கிறிஸ்து
·
எண்ணெய், திராட்ச ரசம் – அபிஷேகம் மற்றும் இரத்தம்
·
சத்திரம்- சபை
·
சத்திரகாரன் – ஊழியக்காரன்( அப்போஸ்தலர்கள்,சபை போதகர்)
·
இரண்டு காசு – பழைய ஏற்பாடு. புதிய ஏற்பாடு
·
திரும்பி வருவேன்- கிறிஸ்து மறுபடியும் வருவார்
எப்படி தேவனுடைய வார்த்தையோடு கூட்டி குறைத்து
போதிக்கிறார்கள் என்று பாருங்கள், இதெல்லாம் அவர்களுடைய சுய விளக்கங்கள்.
அப்படியென்றால் இதெல்லாம் தேவனுடைய வார்த்தையா? நிச்சயமாக இல்லை
Pro 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர்
உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
இப்படி கூட்டி குறைத்து போதிக்கிற எல்லாரும் பொய்யராய்
இருக்கிறார்கள்
5) பாருங்கள்
இதெல்லாம் மனுஷருடைய நினைவுகள். அவர்களுடைய நினைவுகளுக்கும் கற்பனை வளங்களுக்கும் நாம் செவி கொடுக்க வேண்டிய
அவசியம் இல்லை
Isa 55:8 என்
நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isa 55:9 பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள்
நினைவுகளைப்பார்க்கிலும் என்
நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
6) இன்னென்றையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் இயேசு
கிறிஸ்து யூத கோத்திரத்தில் வந்த ஒரு யூதன் என்று தான் தேவன் அவரை நமக்கு
வெளிப்படுத்தி இருக்கிறார்
Heb 7:14 நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக்
கோத்திரத்தாரைக்குறித்து மோசே
ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும்
சொல்லவில்லையே.
Rev 5:5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன்
என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
இன்னும் அநேக வேத வாக்கியங்கள் இருக்கிறது
7) தேவன் இயேசு கிறிஸ்துவை ஒரு போதும் சமாரியன் என்று
சொல்லவில்லை அப்படியிருக்க நாம் அவரை நல்ல சமாரியன் என்று சொல்லும் போது அப்படி
பாடலை இயற்றி பாடும் போதும் அது வீணான ஆராதனையாக தான் இருக்கும் என்பதை உணர்ந்து
கொள்ள வேண்டும்
Mat 15:8 இந்த
ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள்
இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா
தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
8) பிதா
(தேவன்) இயேசு கிறிஸ்துவை (நல்ல) சமாரியன் என்று சொல்லவில்லை நாம் சொல்லலாமா?
Deu 29:29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
No comments:
Post a Comment