கிறிஸ்துவுக்குள் நிலைத்திருத்தல் என்பதின் அர்த்தம் என்ன?
1) நாம் கிறிஸ்துவின் சீஷர்களாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்து இருக்க வேண்டும்
Joh 8:31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
2Jo 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
2) நாம் கிறிஸ்துவுக்குள்ளாக நிலைத்து இருக்க வேண்டும் என்றால் என்ன
செய்ய வேண்டும்?
மிகுந்த ஆவிக்குரிய கனிகளை கொடுக்க வேண்டும்
Joh 15:4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
Joh 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
3) நாம் பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எப்போது கிடைக்கும்?
கிறிஸ்துவின் வார்த்தைகள் நிலைத்து இருந்தால் தான் நாம்
பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்ளுவது கிடைக்கும்
Joh 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
4) நாம் கிறிஸ்துவின் அன்பிலே எப்படி
நிலைத்து இருக்க முடியும்?
கிறிஸ்துவின் கட்டளைகளை கைக் கொள்ளும் போது
தான் கிறிஸ்துவின் அன்பிலே நிலைத்து இருக்க முடியும்
Joh 15:10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
1Jo 3:24 அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.
1Jo 4:16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
5) கிறிஸ்துவுக்குள் நிலைத்து இருக்கிறவன்
அவர் நடந்தபடியே தானும் நடக்கும் போது தான் அவருக்குள் நிலைத்து இருக்கிறான்
1Jo 2:6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
6) நாம் தேவனுக்குள் எப்படி நிலைத்து
இருக்க முடியும்?
1Jo 2:17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
7) நாம் ஏன் கிறிஸ்துவுக்குள் நிலைத்து
இருக்க வேண்டும்?
1Jo 2:28 இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
8) நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்து
இருக்கும் போது என்ன செய்ய மாட்டோம்?
1Jo 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
9) தேவன் நமக்குள் எப்படி நிலைத்து
இருக்கிறார்?
1Jo 4:12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
1Jo 4:15 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
10) கிறிஸ்து நமக்குள்ளாகவும் நாம்
அவருக்குள்ளாகவும் எப்படி நிலைத்து இருக்க முடியும்?
Joh 6:56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
11) கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நிலைத்து
இருக்க வேண்டும்
1Co 15:1 அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
12) நாம் விசுவாசத்தில் நிலைத்து இருக்க
வேண்டும்
1Co 16:13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
Col 1:22 நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
13) நாம் சகோதர சிநேகத்திலே நிலைத்து இருக்க வேண்டும்
Heb 13:1 சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.
14) நாம் சுயாதீனப்பிரமாணமாகிய பூரண பிரமாணத்திலே(கிறிஸ்துவின்
உபதேசம்) நிலைத்து இருக்க வேண்டும்
Jam 1:25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
15) முடிவுபரியந்தம் நிலைத்து இருப்பவனே
இரட்சிக்கப்படுவான்
Mat 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
No comments:
Post a Comment