Tuesday, 24 March 2015

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை யார் கொடுத்து இருக்கிறார்கள்?





பகுதி:3 ஞானஸ்நானம் பற்றிய சத்தியங்கள்


பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை யார் கொடுத்து இருக்கிறார்கள்?

இன்றைக்கு ஒரு குழுவை சேர்ந்த மக்கள் மேலே சொல்லப்பட்ட வாக்கியத்தை கேட்கிறார்கள்
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே
ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்பதற்கு வசன ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்

திரித்துவ உபதேசத்தை போதிக்கிறார்கள் தங்கள் சபை மக்களிடத்தில் இயேசுவின் நாமத்தினால் தான் அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானம் கொடுத்து இருக்கிறார்கள் அதனால் தான் மூன்று பேரும்(பிதா குமாரன் பரிசுத்த ஆவி) ஒன்று  என்பதால் தான் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து இருக்கிறார்கள் என்று போதித்துக் கொண்டு இருக்கிறார்கள்

வேதாகமத்தில் எந்தவொரு வேத வாக்கியம் மூன்று பேரும் ஒன்று என்று ஒருபோதும் போதிப்பதில்லை.

இந்த வேத வாக்கியத்தை தயவு செய்து கவனியுங்கள்

1) இன்றைக்கும் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் உடையவர் யார்?
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2) இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கும் சீஷர்களுக்கும் என்ன ஞானஸ்நானத்தை கொடுக்கும்படி கட்டளையிட்டு இருக்கிறார்?
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

3) இந்த ஞானஸ்நானம் நம்மை என்ன செய்கிறது?
நம்மை பாவங்களை கழுவி நம்மை இரட்சிக்கிறது
Act 22:16 இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

நாம் ஏன் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற வேண்டும்?

நாம் இரட்சிக்கப்படுதற்கும் பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று பேருடைய நாமங்களும்(அதிகாரங்களும்) அவசியமாய் இருக்கிறது

நம்முடைய இரட்சிப்புக்கான காரியத்தில் பிதாவின் நாமம் (அதிகாரம்) ஏன் அவசியமாக இருக்கிறது?

1) பிதாவாகிய தேவன் நம்முடைய பாவங்களுக்காக தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஒப்புக் கொடுத்தார்
Joh 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
Joh 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

2) பாவம் அறியாத அவரை நமக்காக தேவன் பாவமாக்கினார்
2Co 5:21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

3) கிறிஸ்துவை சிலுவையில் ஒப்புக் கொடுத்தவர் பிதாவாகிய தேவன்
Rom 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

4) இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழும்பியவர் பிதாவாகிய தேவன்
Rom 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

5) பாவத்தில் மரித்த நம்மை கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தவர் பிதாவாகிய தேவன்
Eph 2:4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
Eph 2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

6) பிதா ஒருவனை இழுக்காவிட்டால் அவன் கிறிஸ்துவினிடத்தில் வர மாட்டான்
Joh 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்;.....

7) சபையிலே சகலத்தையும் ஏற்படுத்தினவர் பிதாவாகிய தேவன்
1Co 12:28 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.

8) நமக்கு கிடைக்கக் கூடிய எந்த ஈவும் பிதாவினிடத்திலிருந்து தான் வருகிறது
Jam 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
Jam 1:18 அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.

9) தேவன் நியாயத்தீர்ப்பு நாளிலே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தான் உலகத்தை நியாயந்தீர்ப்பார்
Act 17:30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
Act 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

நாம் இரட்சிக்கப்படுவது முதல் நித்திய ஜீவனை பெறுவது வரை நாம் பிதா தம்முடைய நாமத்தினால்(அதிகாரத்தினால்) தான் செய்கிறார்

பிதாவின் நாமத்தை ஞானஸ்நானம் பெறும் போது பயன்படுத்தும் போது பிதாவின் நாமத்தை(அதிகாரத்தை) நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டு அதற்கு கீழ்ப்படிகிறோம்

இன்னும் பிதாவின் நாமத்தைக்(அதிகாரத்தை) குறித்து அநேக காரியங்கள் இருக்கிறது

நாம் ஞானஸ்நானம் பெறும் போது ஏன் பிதாவின் நாமத்தை பயன்படுத்தப்படுத்த  வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

தேவனுக்கு சித்தமானால் நாம் ஞானஸ்நானம் பெறும் போது ஏன் கிறிஸ்துவின் நாமமும் பரிசுத்த ஆவியின் நாமும் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்தும் தனித்தனியாக கற்றுக் கொள்ளுவோம்



No comments:

Post a Comment