Friday, 13 March 2015

வானமும் பூமியும் எப்போது உண்டாக்கப்பட்டது?

வானமும் பூமியும் எப்போது உண்டாக்கப்பட்டது? 

அநேகர் என்ன போதிக்கிறார்கள் என்றால் வானமும் பூமியும் உண்டாக்கப்பட்டு பல ஆயிரக்காணக்கான ஆண்டுகளுக்கு பிற்பாடு தான் தேவன் ஆறு நாட்களில் உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்தார் என்கிறார்கள்,

அநேக மனிதர்கள் இதைக் குறித்து இன்றைக்கும் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு தான்  இருக்கிறார்கள் ஆனால் தேவன் தம்முடைய வேத வசனத்தில் என்ன சொல்லுகிறார் என்பதை நாம் ஆராய்ந்து பார்த்து கற்றுக் கொள்ளுவோம்
Gen 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று வசனம் சொல்லுகிறது அதற்கு பிற்பாடு முதல் நாளில் வெளிச்சத்தை உண்டாக்கின படியால் வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தான் தேவன் முதல் நாளில் வெளிச்சத்தை உண்டாக்கினார் என்று நம்பி அநேகர் போதிக்கிறார்கள்.
தேவன் என்ன சொல்லுகிறார் பாருங்கள்
Exo 20:11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
Exo 31:17 அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.

இந்த வசனங்களை பாருங்கள் தேவன்  ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்து இருக்கிறார் என்று தேவனே சாட்சி கொடுக்கிறார்,

அப்படியானல் தேவன் முதல் நாளில் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்து அதே நாளில் வெளிச்சத்தையும் சிருஷ்டித்து இருக்கிறார் என்று மேற் சொன்ன வேத வசனங்களே நமக்கு சாட்சி கொடுக்கின்றன.
நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு போதிக்கும் போது தேவன் இப்படித்தான் உலகத்தை சிருஷ்டித்தார் என்று போதிக்க வேண்டும்
முதல் நாள்               :  வானம்,பூமி மற்றும் வெளிச்சம்
இரண்டாம் நாள்          :  ஆகாய விரிவு
மூன்றாம் நாள்           :  புல், பூண்டு வெட்டாந்தரை
நான்காம் நாள்           :  சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்
ஐந்தாம் நாள்               :ஆகாயத்துபறவைகள்,சமுத்திரத்தின்மச்சங்கள்
ஆறாம் நாள்                  ;  சகல காட்டு மிருகங்கள், சகல நாட்டு மிருகங்கள்,             ஊரும் பிராணிகள், மற்றும் ஆதாம் ஏவாள்
ஏழாம் நாள்                  ; தேவன் ஓய்திருந்தார்

இந்த சத்தியம் தேவனுடைய வார்த்தையின் படி இருக்கிறது என்றால் இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்கள்




No comments:

Post a Comment