Thursday, 12 March 2015

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்



ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்

Gen 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞானிகள் இந்த வசனத்தை பொய்யாக்குவதற்கு தான் அவர்களுடைய எல்லா நேரங்களையும் செலவழிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

தேவன் (சிருஷ்டிகர்) என்பவர் ஒருவர் இல்லை என்பதை உலகத்திலுள்ள ஜனங்களுக்கு நிரூபிப்பதற்கு தான் அதிக கோடிக்காணக்கான டாலர்களையும் பணத்தையும் அவர்கள் செலவு செய்கிறார்கள்.
Psa 14:1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

அவர்களுடைய திட்டம் இந்த உலகத்தை தேவன் உருவாக்கவில்லை பரிணாம வளர்ச்சியினால் உண்டானது என்பதை நிரூபிப்பதற்கு தான் இன்றைக்கு அவர்கள் அதிக பிரயாசப்படுகிறார்கள்
Psa 115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.

பூமியில் மாத்திரமே மனிதர்களுக்கு குடியிருப்பதற்கு தேவன் அனுமதி கொடுத்து இருக்கிறார்
Act 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

  • இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞானமும் விஞ்ஞானிகளும் இந்த வசனத்தை பொய்யாக்குவதற்கு தான் விண்கலங்களை சந்திரனுக்கும். வியாழன் கிரகத்திற்கும். செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் மனிதன் அங்கே குடியிருக்க முடியும் என்று ஜனங்களுக்கு நிரூபித்தால் தேவனுடைய இந்த வசனத்தை பொய்யாக்கி அநேகர் தேவன் மேல்  வைத்து இருக்கிற விசுவாசத்தை அழித்து போட முடியும் என்று  முயற்சிக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் தங்களுடைய அறிவியல் ஞானத்தினால் நட்சத்திரங்களில் போய் கூடு கட்டினாலும் அங்கேயிருந்து தேவன் தள்ளிவிடுவார் என்று இந்த மதிகேடர்களுக்கு யார் சொல்லுவது?
Oba 1:4 நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவன் இவர்களை துன்மார்க்கார் என்கிறார். இவர்களுடைய நினைவுகள் எல்லாம் தேவன் இல்லை என்பது தான்
Psa 10:4 துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.

  • இந்த விஞ்ஞானிகள் எல்லாம் உலகத்தின் பார்வையில் மிகச்சிறந்த அறிவாளிகள் ஆனால் தேவன் இவர்களை துன்மார்கர்கள் மதிகெட்டவர்கள் என்று தான் அழைக்கிறார் 
  • இன்றைக்கு நம்முடைய பிள்ளைகளை பாடம் படிக்க ஸ்கூலுக்கு அனுப்புகிறோம். அவர்களுக்கு அங்கு என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? பரிணாம கொள்கைதான்(தேவன் இல்லை) நம்முடைய பிள்ளைகளின் பாட புத்தகங்களில் இந்த பாடங்கள் அச்சிடப்பட்டு கற்றுக் கொடுக்கப்படுகிறது. நம்முடைய பிள்ளைகளில் படிப்புகளின் மூலமாக இந்த மதிகெட்டவர்கள் உள்ளே நுழைந்து விட்டார்கள்.  
  • மனித தத்துவ கொள்கையாளர்கள் மதங்களை அழித்து போட்டால்தான் உலக ஜனங்களை ஒன்று இணைக்க முடியும் என்று அறிக்கை செய்து இருக்கிறார்கள். இவர்கள் இன்றைக்கு எல்லா கல்வி நிறுவனங்களிலும் நுழைந்து தேவன் மேல் இருக்கக்கூடிய விசுவாசத்தை அழித்து போடுவதற்கு நிறைய வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எச்சரிக்கையாக இருந்து உங்கள் விசுவாசத்தை காத்து கொள்ளுங்கள்

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தேவன் சிருஷ்டிகர் என்பதையும் அவருடைய சத்தியங்களையும் அவர்களுக்கு சிறுவயது முதல் நீங்கள் சொல்லி கொடுக்கவில்லையென்றால் உங்கள் பிள்ளைகள் நாளைக்கு பரிணாம கொள்கைகளை(தேவன் என்பவர் ஒருவர் இல்லை)  போதிக்கக் கூடிய ஆசிரியர்கள் ஆகிவிடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
Deu 6:4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
Deu 6:5 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.
Deu 6:6 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.
Deu 6:7 நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,
Deu 6:8 அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.
Deu 6:9 அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.

  • நீங்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள் நம்முடைய பிள்ளைகள் பாடம் படிப்பதற்கு இன்றைக்கு இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் எட்டு மணி நேரம் அவர்கள் ஸ்கூலில் போதிக்கிறார்கள். பிள்ளைகள் வீட்டுக்கு வந்தவுடன் மாலையிலும் காலையிலும் வீட்டுபாடங்கள் கொடுத்து அதை செய்து வரும் படி அவர்களை நிர்பந்திக்கிறார்கள். இதனால் அநேகம் பிள்ளைகள் வேதாகமத்தை படிப்பதே விட்டு விட்டார்கள்  

பிள்ளைகளின் கவனம் தேவன் பக்கம் திரும்பாதபடிக்கு அவர்கள் நேரம் முழுவதையும் அவர்கள் எடுத்து கொள்ளுகிறார்கள்.
Deu 4:10 உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்

இந்த உலகத்தின் கல்வியைக் காட்டிலும் அவர்கள் மறுமையில் நித்திய ஜீவனை பெற வேண்டும் அதற்காக நீங்கள் அதிக பிரயாசப்படுங்கள்.
Eph 6:4 பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
Col 3:21 பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.

தேவனை நாம் முதல் முதலில் அவரை தேவன்(சிருஷ்டிகர்) என்று விசுவாசித்து என்று மகிமைப்படுத்தி அவரை நாம் ஸ்தோத்தரிக்க வேண்டும்.
Heb 11:3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
Heb 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.










No comments:

Post a Comment