மிருகத்தின் முத்திரையை வலதுகைகளிலாவது
நெற்றிகளிலாவது பெறுவது என்பதின் அர்த்தம் என்ன?
Rev 13:16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
Rev 13:17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
இந்த
வசனத்தை கொஞ்சம் கவனித்து பாருங்கள்
அந்த
மிருகத்திற்கு என்ன இருக்கிறது பாருங்கள்
1)
முத்திரை
2) நாமம்
3)
இலக்கம்
என்ற
மூன்று வகையான காரியங்கள் இருக்கிறது. ஆனால் இவ்வசனத்தை போதிக்கிறவர்கள் இந்த
மூன்றில் ஏதோ ஒன்றை மாத்திரம் எடுத்துக் கொள்ளுவர்கள். அதை வைத்து இன்றைய
விஞ்ஞானத்தோடு சம்பந்தப்படுத்தி தேவன் இதை தான் சொல்ல வந்தார் என்று மக்களை நம்ப
வைத்து ஜனங்களை பயமுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அநேக
நபர்கள் இப்படி தான் போதிக்கிறார்கள் அதாவது அந்த மிருகத்தின் நாமத்தை
நெற்றியிலும் வலது கையிலும் தரித்து கொள்ளுவது என்பது இன்றைக்கு மைக்ரோ சிப் ஒன்று
கண்டு பிடித்து இருக்கிறார்கள் அதை மனுஷனுடைய வலது கைகளிலும் அவனுடைய
நெற்றிகளிலும் உள்ளே வைத்து விட்டால். அவன் எங்கே இருக்கிறான் என்றும் என்ன
செய்கிறான் என்றும் அந்திகிறிஸ்து கண்டுபிடித்து விடுவான் என்றும் அது தான் இது
என்று சொல்லி மக்களை பயமுறுத்தி கொண்டு இருக்கிறார்கள்
பாருங்கள்
பழைய ஏற்பாட்டில் இதே போல் ஒரு வசனம் இருக்கிறது அந்த வசனத்திற்கு இவர்கள் என்ன
விளக்கம் கொடுக்க முடியும்?
Deu 6:7 நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,
Deu 6:8 அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.
தேவன் நியாயப்பிரமாண வார்த்தைகளை உன்
கையிலே அடையாளமாக கட்டிக் கொண்டு. அவைகளை உன் கண்களுக்கு நடுவே(நெற்றியில்)
ஞாபக்குறியாக இருக்கக்கடவது என்று சொல்லும் போது நியாயப்பிரமாண கட்டளைகள் உள்ள மைக்ரோ
சிப்பை உன் வலது கையிலும் உன் நெற்றியிலும்(கண்களுக்கு நடுவே) வைத்து கொள் என்று தேவன்
சொல்லுகிறாரா?
அல்லது ஒரு சிறிய அட்டையில் நியாயப்பிரமாணத்தின்
கட்டளைகளை எழுதி கைகளிலும் நெற்றிகளிலும் கட்ட சொல்லுகிறாரா?
நியாயப்பிரமாணத்தில் 613 கட்டளைகள்(பிரதான
கட்டளையோடு சேர்த்து) இருக்கிறது எல்லா கட்டளைகளையும் எழுதி நெற்றியிலும்
வலதுகையிலும் கட்ட முடியுமா? எத்தனை யூதர்கள் அப்படி நியாயப்பிரமாணத்தை எழுதி தங்கள்
நெற்றிகளிலும் கைகளிலும் அடையாளமாக கட்டிக் கொண்டார்கள்? அப்படி யாரும் கட்டிக்
கொள்ளவில்லை
613 கட்டளைகளையும் எழுதி நெற்றியில்
வைப்பதற்கும் எவ்வளவு பெரிய நெற்றி வேண்டும் என்று பாருங்கள்.
தேவன் இங்கே சொல்ல வந்ததின் நோக்கம்
நியாயப்பிரமாணத்தை ஞாபகத்தில் வைத்து சிந்திக்க(தலை-நெற்றி) வேண்டும், அதை
கைக்கொள்ள(வலது கை)வேண்டும் என்பது தான்
Deu 6:8 அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.
அதே போல் தான் வெளிப்படுத்தின விசேஷத்தில்
அந்த மிருகத்தின் கட்டளையை சிந்திக்காதவர்களும்(நெற்றி) அதின்படி
செய்யாதவர்களும் (வலதுகை) வாங்கவும்
முடியாது விற்கவும் முடியாது
Rev 13:16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
Rev 13:17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
இந்த மைக்ரோ சிப் என்று
பயமுறுத்தக்கூடியவர்களை குறித்து கொஞ்சமும் கவலைப்படாதீர்கள். ஏனெனில் இனி
வரக்கூடிய காலங்களில் இன்னும் அநேக விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வரப்போகிறது அப்போது
அது தான் இது என்று சொல்லி இன்னும் அநேக சத்தியங்களை நிச்சயம் புரட்டுவார்கள்
1Ti 6:20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
1Ti 6:21 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
Heb 12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
No comments:
Post a Comment