Friday, 13 March 2015

ஸ்தேவான் தேவனை பார்த்தாரா?



ஸ்தேவான் தேவனை பார்த்தாரா?

இதைப்படிப்பதற்கு முன்பு மோசே தேவனை பார்த்தாரா? என்பதை முதலில் பார்ப்போம்

1) தேவனிடத்தில் மோசே உம்முடைய மகிமையை காண்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டார்
Exo 33:18 அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
அதற்கு தேவன் என்ன சொன்னார் என்று பாருங்கள்
Exo 33:20 நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.

தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராக இருந்த மோசேயினிடத்தில் தேவன் சொன்ன வார்த்தைகள் இவைகள்
ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடு இருக்கக்கூடாது என்கிறார்
அப்படியானால் இன்றைக்கு தேவனை பார்த்தேன் என்று சொல்லக்கூடியவர்கள் உண்மையை சொல்லுகிறார்களா அல்லது பொய் சொல்லுகிறார்களா?

தேவன் பொய் சொல்லமாட்டார் என்பது நமக்கு தெரியும் அப்படியானால் பொய் சொல்லக்கூடியவர்கள் யார்? பொய் போதகர்கள் மற்றும் கள்ளத்தீர்க்கதரிசிகள்

2) மோசே தேவனிடத்தில் பேசி முடித்து விட்டு மலையில் இருந்து கீழே இற்ங்கிய போது அவருடைய முகம் எப்படி இருந்தது பாருங்கள
Exo 34:29 மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.
Exo 34:30 ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.

ஆனால் இன்றைக்கு தேவனைப் பார்த்தோம் அவரிடத்தில் பேசினோம் என்று சொல்லக்கூடிய கள்ளப் போதகர்களின் முகங்கள் எப்படி இருக்கிறது?
Exo 34:33 மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.
Exo 34:35 இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.
மோசே தன் முகத்தில் போட்டு பேசும் அளவுக்கு அவர் முகம் பிரகாசமாக இருந்தது. ஜனங்களால் அவர் முகத்தை பார்க்க முடியவில்லை.

3) ஆனால் தேவனிடத்தில் மோசேக்கு தயவு இருந்தபடியால் தன்னை காண்பிப்பேன் என்றார்
Exo 33:21 பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
Exo 33:22 என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்;
Exo 33:23 பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.

பாருங்கள் மோசே தேவனுடைய பின்புறத்தை மாத்திரம் தான் பார்த்தார். அவருடைய முகத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் அவருடைய முகத்தை பார்த்திருந்தால் மோசே அன்றைக்கு மரித்து போய் இருப்பார்
4) ஸ்தேவானுடைய சம்பவத்திற்கு வருவோம்
Act 7:55 அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:
Act 7:56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

பாருங்கள் இந்த வசனப்பகுதியில் ஸ்தேவான் இயேசு கிறிஸ்துவைப் பார்த்தார் ஆனால் தேவனை பார்க்கவில்லை மாறாக அவருடைய மகிமையைத் தான் பார்த்தார்

5) தேவனுடைய மகிமையை பார்த்த ஸ்தேவானுக்கு என்ன சம்பவித்தது?
Act 7:59 அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
Act 7:60 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

6) தேவனுடைய மகிமையை பார்த்த ஸ்தேவான் மரித்து போனார்
Exo 33:20 நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.

7) கீழே சொல்லப்பட்ட இந்த தேவனுடைய வார்த்தை  எப்போது சம்பவிக்கும்?
Mat 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

8) கிறிஸ்து இந்த பூமியை நியாயந்தீர்த்த பின்பு அவருடைய உண்மையான பிள்ளைகள் பரலோகத்தில் போகும் போது தான் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்
Heb 12:14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.




No comments:

Post a Comment