மனப்பூர்வமான பாவங்களுக்கு தேவனிடத்தில் மன்னிப்பு
இருக்கிறதா?
இன்றைக்கு அநேகர் பாவம் என்று தெரிந்தே அதை செய்து விட்டு
தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டால் தேவன் மன்னித்து விடுவார் என்று சொல்லுகிறார்கள்
Jon 4:2 ,,,,,,,,,,,,,,,,, நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.
தேவன் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்
மிகுந்த கிருபையுள்ள தேவன் என்பதால் நாம் செய்யக்கூடிய எல்லா பாவங்களையும்
(துணிகரமாக செய்த பாவங்கள் கூட) நாம் தேவனிடத்தில் அறிக்கையிட்டால் அவர் நிச்சயம்
மன்னிப்பார் என்று போதிக்கிறார்கள்
1) நியாயப்பிரமாணத்தில் துணிகரமான பாவங்களுக்கு
மன்னிப்பும் இல்லை அதற்கு பலியும் என்பதை தேவன் தெளிவாகவே கட்டளையிட்டு
இருக்கிறார்
Num 15:30 அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
Num 15:31 அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.
2) தேவன் துன்மார்கனை துன்மார்கன் என்றும்
நீதிமானை நீதிமான் என்றுதான் நியாயந்தீர்க்கிறார்
Exo 23:7 .......... நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.
3) நியாயப்பிரமாணத்தில் அறியாமையினாலே பாவம்
செய்தால் அதற்கு மன்னிப்பு இருக்கிறது
Num 15:27 ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.
Num 15:28 அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.
4) புதிய ஏற்பாட்டிலும் துணிகரமான பாவங்களுக்கு
மன்னிப்பு கிடையாது என்று பரிசுத்த ஆவியானவர் திட்டவட்டமாக போதிக்கிறார்
Heb 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
Heb 10:27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
5) இயேசு கிறிஸ்துவை கொலை செய்த யூதர்கள்
அறியாமையினாலே தான் அப்படி செய்தார்கள்
Act 3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்........
Act 3:17 சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.
இயேசு கிறிஸ்து தான் மேசியா(கிறிஸ்து) என்பதை
அவர்கள் அறிந்து இருக்கவில்லை. அதனால் தான் அவர்கள் இரக்கம் பெற்றார்கள்
6) இயேசு கிறிஸ்து சிலுவையில் இருக்கும் போது
கீழே இருந்த யூதர்கள் அவர் மேசியா என்று அறியாமல் தான் அவரை பரியாசம் பண்ணினார்கள்
அதனால் தான் அவர்களை மன்னிக்கும்படி இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் ஜெபித்தார்
Luk 23:34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்......
7) அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்து தான்
மேசியா(கிறிஸ்து) என்பதை அறியாமல் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தி கொலை செய்தார்
அவர் அறியாமையினாலே அப்படி செய்தபடியால் அவருக்கு மன்னிக்கப்பட்டது
1Ti 1:13 முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.
8) பழைய ஏற்பாட்டில் பாவம் என்று தெரிந்து பாவம்
செய்த இஸ்ரவேலர்களுக்கு பலியும் இல்லை மன்னிப்பும் அவர்களுக்கு தண்டனை தான்
இருந்தது
Num 15:30 அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
Num 15:31 அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.
9) புதிய ஏற்பாட்டில் பாவம் என்று தெரிந்து
பாவம் செய்கிற கிறிஸ்தவர்களுக்கு செலுத்தத்தக்க வேறொரு பலியும் இல்லை மன்னிப்பும்
இல்லை விரோதிகளை பட்சிக்கும் கோபாக்கினை தான்
இருக்கிறது
Heb 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
Heb 10:27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
10) அதனால் தான் தாவீது தேவனிடத்தில் துணிகரமான
பாவங்களுக்கு அடியேனை விலக்கி காத்தருளும் என்று ஜெபிக்கிறார்
Psa 19:13 துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.
No comments:
Post a Comment