இன்றைக்கு அநேகர் தாங்கள் பரலோகம் போய் தேவனை தரிசித்து
விட்டு வந்ததாக சொல்லுவதை கேட்டு இருப்பீர்கள் அது உண்மையா? அது தேவனுடைய சத்தியமா என்பதை தேவனுடைய வார்த்தையோடு கற்றுக்
கொள்ளுவோம்
இந்த சத்தியமானது
பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைகள். ஒருவேளை இதை ஏற்றுக் கொள்ளுவது
அநேகருக்கு கஷ்டமாக தான் இருக்கும், ஏனென்றால் இன்றைக்கு அநேக ஊழியர்கள்
தங்களுடைய கிறிஸ்தவ தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளிலும் தங்களுடைய கிறிஸ்தவ பத்திரிக்கைகளிலும் பரலோகம் போய் தேவனை
தரிசித்து விட்டு வந்த போதனைகள் தான் அதிகமாக இருக்கிறது
எந்த ஒரு சத்தியமும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின்
வாக்கினாலே நிலைவரப்படும் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 18:
16 ல் சொல்லியிருக்கிறார்
Mat
18:16 அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
இன்றைக்கு எந்த ஒரு மனிதனும் தேவனை தரிசிக்க முடியுமா என்று
மூன்று சாட்சிகளின் வாக்கினால் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட வேத வாக்கியத்தின்
வசனங்களோடு கற்றுக் கொள்ளுவோம்
முதல் சாட்சி; நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
Joh 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
Joh 5:37
என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
Joh 6:46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
- இந்த சத்தியத்தை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து போதித்த போது சுமார் கி,பி 31-32ம் வருடமாக இருக்கலாம், இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருந்த போது எந்த மனுஷனும் தேவனை தரிசித்தது இல்லை என்கிறார்
எந்த மனுஷனும் பிதாவாகிய தேவனை தரிசித்தது இல்லை என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த சாட்சிகள்
தான் இது
இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
இரண்டாவது சாட்சி: கிறிஸ்துவின்
அப்போஸ்தலனாகிய பவுலுடைய சாட்சியை கவனியுங்கள்
1Ti 1:17 நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
1Ti 6:15
அந்தப் பிரசன்னமாகுதலைத் தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
1Ti 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
இந்த வசனப்பகுதியில் பரலோகத்தில் இருக்கக்கூடிய பிதாவை மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாதவருமாயிருக்கிறார் என்று பவுல் சாட்சி கொடுக்கிறார்.
இந்த நிருபத்தை பவுல் எழுதும் போது சுமார் கி,பி 63-65 ம் ஆண்டாக இருக்கலாம், அந்த காலகட்டத்திலும் கூட பவுல் கூட தேவனை கண்டதில்லை என்று சாட்சி கொடுக்கிறார்.
மூன்றாவது சாட்சி: கிறிஸ்துவின்
அப்போஸ்தலனாகிய யோவானுடைய சாட்சியை கவனியுங்கள்
1Jo 4:12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
- இந்த புஸ்தகத்தை யோவான் எழுதும் போது சுமார் கி,பி 90-95 வருடமாக இருக்கலாம், அவர் சொல்லுகிறார் தேவனை ஒருவரும் கண்டதில்லை என்கிறார்
- இந்த சத்தியம் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினாலும் அவருடைய அப்போஸ்தலர்களாகிய பவுலாலும் மற்றும் யோவானாலும் உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது
அப்படியானால் எந்த ஒரு காலகட்டத்திலும் பிதாவாகிய தேவனை யாரும் தரிசித்தில்லை யாரும்
தரிசிக்க முடியாது என்று வேத வசனங்கள் நமக்கு தெளிவாக போதிக்கிறது
பிதாவாகிய தேவனை தரிசித்த ஓரே ஒரு மனிதர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்து மட்டுமே என்பதை வேத வசனங்கள் நமக்கு தெளிவாக போதிக்கிறது
இன்றைக்கு தேவனுடைய சத்தியத்திற்கு விரோதமாக தேவனை தரிசித்து விட்டு
வந்தேன், எனக்கு தேவன் இந்த ஊழியம் செய்யும் படி கட்டளையிட்டார் என்று மக்களை நம்ப வைக்கும் ஊழியர்களை பற்றி
என்ன?
ஒன்று தேவனும் அவருடைய வேத வசனங்களும் பொய் சொல்ல வேண்டும் அல்லது
தேவனை தரிசித்து விட்டு வந்தேன் என்று மனிதன் பொய் சொல்ல வேண்டும்
2Pe 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2Pe 2:2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
2Pe 2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
இதில் யார் பொய்யர்?
நம்முடைய தேவன்
பொய்யுரையாத தேவன்
Num
23:19 பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
Tit 1:3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,
நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றால் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே
ஏற்றுக் கொள்ளுவீர்கள்.
Joh 7:16
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
Joh 7:17
அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
Joh 7:18
சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
No comments:
Post a Comment