கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை சிட்சிக்கிறாரா?
Heb 12:5 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
கர்த்தர் ஏன் தம்முடைய பிள்ளைகளை சிட்சிக்கிறார்?
Heb 12:6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
தேவன் இரண்டு வகையாக கடிந்து கொள்ளுகிறார்
1) கோபத்துடன் கடிந்து கொள்ளுகிறார்
2) அன்பு செலுத்தி கடிந்து கொள்ளுகிறார்
தேவன் கோபத்துடன்
யாரை கடிந்து கொள்ளுகிறார்
Psa 119:21 உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
Isa 66:15 இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.
Isa 66:16 கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.
தாவீது தன்னை கோபத்துடன் கடிந்து கொள்ள வேண்டாம் என்கிறார்
Psa 38:1 கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
தேவன் ஏன் அன்பு செலுத்தி கடிந்து
கொள்ளுகிறார்?
தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் அவன் தண்டிக்கிறார்
Heb 12:6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
நீதிமானின் கடிந்து கொள்ளுதல் வேண்டும்
என்று தாவீது விரும்பினார்
Psa 141:5 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.
நாம் ஏன் கர்த்தருடைய சிட்சையை சகிக்க வேண்டும்?
Heb 12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
ஜீவவழிக்கான பாதை என்ன?
போதக சிட்சையே நமக்கு ஜீவவழியை கொடுக்கும்
Pro 6:23 கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.
தகப்பன் ஏன் பிள்ளைகளை சிட்சிக்கிறான்?
Pro 29:17 உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
பிரம்பும் கடிந்து கொள்ளுதலும்
எதைக் கொடுக்கிறது?
Pro 29:15 பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
Pro 22:15 பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்.
தகப்பன் தன் பிள்ளைகளை சிட்சிப்பதினால்
என்ன நடக்கிறது?
Pro 23:13 பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
Pro 23:14 நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
தாவீது அதோனியாவை கடிந்து கொள்ளாததால் என்ன
நடந்தது?
1Ki 1:6 அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்து கொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.
அதோனியா ராஜாவாகிறதற்கு முயற்சி செய்தார்
1Ki 1:12 இப்போதும் உன்
பிராணனையும், உன்
குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.
1Ki 1:13 நீ தாவீது ராஜாவினிடத்தில் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே,
எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள்.
ஆசாரியனாகிய ஏலி தன் பிள்ளைகளை கடிந்து கொள்ளவில்லை
ஏலி தம்முடைய பிள்ளைகளை கடிந்து கொண்டு சிட்சிக்கவில்லை
1Sa 2:29 என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு,
நீ என்னைப்பார்க்கிலும் உன்
குமாரரை மதிப்பானேன் என்கிறார்.
ஆபிரகாம் தன் வீட்டார் அனைவருக்கும்
கர்த்தருடைய வழியை போதித்தார்
ஆபிரகாம் தன் வீட்டாருக்கு கர்த்தருடைய
வழியை காத்து நடவுங்கள் என்று கட்டளையிட்டார்
Gen 18:19 கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
ஆபிரகாம் தன் வீட்டிலுள்ள எல்லாருக்கும்
கர்த்தருடைய கட்டளையின்படியே விருத்தசேதனம் பண்ணினார்
Gen 17:22 தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.
Gen 17:23 அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்.
நமக்கு தேவனுடைய சிட்சை கிடைக்கவில்லை
என்றால் நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோமா?
Heb 12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
தேவன் நம்மை சிட்சிக்கும் போது நாம் எப்படி
நடந்து கொள்ள வேண்டும்?
Heb 12:9 அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
தேவனுடைய சிட்சையை நாம் சகித்து நிலைத்து
இருக்கும் போது நமக்கு என்ன கிடைக்கும்?
Heb 12:10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
தொடர்ந்து தேவன் நம்மை சிட்சிக்கும் போது என்ன நடக்கிறது?
Heb 12:11 எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
தேவன் கொடுத்த இந்த சிட்சையின் நோக்கம் என்ன?
நம்முடைய உள்ளான மனுஷனை நம் சரிபடுத்திக்
கொள்ள வேண்டும்
Heb 12:12 ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,
Heb 12:13 முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.
Heb 12:14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
No comments:
Post a Comment