Friday, 13 March 2015

புதிய ஏற்பாட்டில் பிதாவாகிய தேவன் இன்றைக்கு மனுஷர்களின் காதுகளில் பேசுகிறாரா?


புதிய ஏற்பாட்டில் பிதாவாகிய தேவன் இன்றைக்கு மனுஷர்களின் காதுகளில் பேசுகிறாரா?

1) அநேகருக்கு தேவனுடைய சத்தியங்களை அவருடைய வசனத்தை ஆதாரமாக வைத்து எடுத்து காண்பிக்கும் போது அது பிடிப்பதில்லை. அதற்கான காரணம் என்ன?
2Ti 4:3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
2Ti 4:4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

ஆகையால் நாம் பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்ட வேத வாக்கியங்களுக்கு நாம் செவி கொடுக்க வேண்டியது அவசியமாய் இருக்கிறது

2)புதிய ஏற்பாட்டில் தேவன் மனுஷர்களிடத்தில் எப்படி பேசி இருக்கிறார்?
தம்முடைய தூதர்கள் மூலம் பேசி இருக்கிறார்
Mat 1:20 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
Luk 1:11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
Luk 1:28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

3) இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்ற போதும் தம்முடைய மூன்று அப்போஸ்தலர்களுக்கு முன்பாக மறுரூபமான போதும் தேவன் வானத்திலிருந்தும் மேகத்திருந்தும் பேசினார். அப்போஸ்தலர்கள் அதை கேட்டார்கள்
Mat 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
Mat 17:5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

4) இயேசு கிறிஸ்து உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்ற சொன்ன போது வானத்திருந்து தேவன் பேசினார். அதை அங்கே இருந்தவர்கள் அதை கேட்டார்கள்
Joh 12:28 பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.

5) அப்போஸ்தலனாகிய பவுலுக்கு(சவுல்) கர்த்தர் தமஸ்குவுக்கு போகிற வழியில் அவருக்கு தரிசனமாகி அவரோடு பேசினார். காதுகளில் ஏதோ முணு முணு என்று பேசவில்லை. பவுலோடு கூட வந்தவர்கள் எல்லாரும் அந்த சத்தத்தை கேட்டார்கள்
Act 9:4 அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.
Act 9:7 அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள்.

6) அப்போஸ்தலனாகிய யோவானிடத்தில் தேவன் ஒரு முறை இடியின் சத்தத்தின் மூலம் பேசினார்
Rev 10:4 அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.


இப்படி அநேக வேத வாக்கியங்கள் புதிய ஏற்பாட்டில் இருக்கிறது. ஆனால் தேவன் மனுஷனுடைய காதுகளில் முணு முணு என்று அநுதினமும் பேசுகிறார் என்று எந்தவொரு வேத வசனமும் போதிப்பதில்லை.

இன்றைக்கு தேவன் மனுஷனுடத்தில் சொப்பனத்திலாவது அல்லது தரிசனத்திலாவது பேசுகிறாரா என்று வேத வாக்கியங்களைக் கொண்டு கற்றுக் கொள்ளுவோம்
7) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு அப்போஸ்தலனாகிய தோமா அவரை விலாவிலே கையைப்போட்டு பார்த்தலொழிய நான் விசுவாசிக்க மாட்டேன் என்றார். அதற்கு இயேசு கிறிஸ்து என்ன பதில் சொன்னார் பாருங்கள்
Joh 20:29 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

8) இயேசு கிறிஸ்துவை காணாதிருந்தும் நாம் விசுவாசிக்கும் போது நாம் பாக்கியவான்களாக இருக்கிறோம்
2Co 5:6 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.

1Pe 1:8 அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,
1Pe 1:9 உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.

9) இன்றைக்கு தேவன் நாம் எப்படி நடக்க வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் மூலம் தம்முடைய வார்த்தைகளை எழுதி நமக்கு கொடுத்து இருக்கிறார்
2Pe 1:19 அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.
2Pe 1:20 வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
2Pe 1:21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

10) வேத வாக்கியங்கள் நமக்கு எல்லாவற்றிற்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது
2Ti 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2Ti 3:17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

11) தேவபக்திக்கு வேண்டிய எல்லாவற்றையும் தம்முடைய வேத வசனத்தின் மூலமாக தேவன் நமக்கு கொடுத்து இருக்கிறார்
2Pe 1:3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
2Pe 1:4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் இன்றைக்கும் தேவன் எங்களுடைய காதுகளில் பேசிக் கொண்டு இருக்கிறார் என்கிற நபர்களை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.





















No comments:

Post a Comment