Thursday, 12 March 2015

நம்முடைய தேவன்(சிருஷ்டிகர்) இல்லை யார் சொல்லக்கூடும்?



இன்றைக்கு அநேகர் தேவன் ஒருவர் இல்லையென்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த பூமியின் சிருஷ்டிப்பையும் அண்டசாரசரங்களையும் அவர்கள் கவனித்து பார்ப்பார்கள் என்றால் தேவன் இல்லையென்று ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்
Isa 40:25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.
Isa 40:26 உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

நாம் வாழக்கூடிய பூமியானது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்

1) சூரியனிலிருந்து பூமி சரியான தூரத்தில் இருக்கிறது
சூரியனுடைய முதல் வட்டப்பாதையில் மெர்குரி இருக்கிறது இரண்டாவது வட்டப்பாதையில் வீனஸ் இருக்கிறது மூன்றாவது வட்டப்பாதையில் பூமி இருக்கிறது நான்காவது வட்டப்பாதையில் மார்ஸ் கிரகம் இருக்கிறது

2) பூமி 23.5 டிகிரி சாய்ந்து இருக்கிறது பாருங்கள் இந்த சாய்வு கொஞ்சம் மாறி இருக்கும் என்றர்ல் பூமியின் மேற்பரப்பு அதிக வெப்பமாக போய் எல்லாம் எரிந்து விடும்

3) பூமி தன்னுடைய வட்டப்பாதையில் இருந்து சூரியனுக்கு 5% நெருக்கமாக இருந்து இருக்கும் என்றால் 900 டிகிரி வெப்பமாக அதிகரித்து எல்லாம் எரிந்து சம்பலாக போய் விடும்

4) தன்னுடைய வட்டபாதையில் இருந்து சூரியனுக்கு கொஞ்சம் விலகி இருக்கும் என்றால் பூமி முழுவதும் உறை பனியாக போய் எல்லாரும் மரித்து போய் விடுவோம்

5) நாம் சுவாசிக்கக்கூடிய காற்றில் ஆக்ஸிசன் 21 சதவீதம் சரியாக இருக்கிறது. இந்த ஆக்ஸிஜன் 25 சதவீதம் அதிகமானால் எல்லாம் வெடித்து சிதறிவிடும், 15 சதவீதம் ஆக்ஸிசன் குறைந்தால் மூச்சு திணறி எல்லாரும் இறந்து விடுவோம்

6) கார்பன் டை ஆக்ஸைடும் காற்றில் சரியான விகிதத்தில் இருக்கிறது இது அதிகமானால் காற்று வெப்பமாகி நாம் எல்லாரும் மரித்து விடுவோம். 1சதவீதம் இந்த கார்பன் டை ஆக்ஸைடு குறைந்தால் தாவரங்கள் எல்லாம் செத்து விடும்

7) தண்ணீர் திரவமாக இருப்பதற்கு காரணம் சூரியனிலிருந்து வரக்கூடிய சரியான வெப்பம் தான் காரணம். தண்ணீரில் இருக்கக்கூடிய ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிசன் போன்றவைகள் நமக்கு நல்ல சத்துக்களை கொடுக்கிறது

8) சமுத்திரத்தில் இருக்கக்கூடிய தண்ணீர் பூமியின் மேல் இருக்கக்கூடிய வெப்பத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது (சமுத்திரத்தில் இருக்கக்கூடிய வெப்பம் மெதுவாக கூடும் மெதுவாக குறையும்)

9) காற்றில் இருக்கக்கூடிய நீராவி சரியான விகிதத்தில் இருக்கிறது இந்த நீராவி அளவு கொஞ்சம் அதிகரிக்கும் என்றால் பூமி முழுவதும் வெப்பம் மாகி விடும். நீராவியின் அளவு குறையும் என்றால் பூமி முழுவதும் உறைந்து போய் விடும்

10) சந்திரனும் 23.5 டிகிரி சாய்மானத்தில் இருக்கிறது. இப்படி இருப்பதால் பூமியின் வெப்ப நிலையை அதுவும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது

11) பூமியின் சூழற்சி 24 மணி நேரம் என்பது சரியாக இருக்கிறது. இது கொஞ்சம் மாறினாலும் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் ஏற்படும். வெப்ப நிலைகளும் மாறி போய்விடும், சரியான சுற்று திறன் இல்லையென்றால் சரியான காற்றும் வெப்பமும் பூமிக்கு கிடைக்காது

12) நம்முடைய பூமியின் புவி ஈர்ப்பு விசை கொஞ்சம் மாறினாலும் நாம் அண்ட வெளியில் தூக்கி வீசப்படுவோம்

13) சூரியன் சந்திரன் பூமி எல்லா கிரகங்களும் நேர்த்தியாக சிருஷ்டிக்கப்பட்டு சரியான முறையில் ஒழுங்காக வடிவமைக்கப்பட்டும் இருக்கிறது. அந்த கிரகங்கள் கொஞ்சம் தங்களுடைய நிலையில் இருந்து மாறினாலும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்

பூமியைப்பற்றி இன்னும் அநேக ஆச்சரியமான தகவல்கள் இருக்கிறது
பூமியை தேவன் தம்முடைய ஞானத்தினாலே சிருஷ்டித்து இருக்கிறார்
Pro 3:19 கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.

தேவன் பூமியை மனுபுத்திரருக்கு கொடுத்து இருக்கிறார்கள்
Psa 115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.

பூமியில் மாத்திரமே மனிதர்களுக்கு குடியிருப்பதற்கு தேவன் அனுமதி கொடுத்து இருக்கிறார்
Act 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

தேவனை நாம் தேவன்(சிருஷ்டிகர்) என்று விசுவாசித்து என்று மகிமைப்படுத்தி அவரை நாம் ஸ்தோத்தரிக்க வேண்டும்.
Heb 11:3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
Heb 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞானிகளில் அநேகர்  பூமியைக் குறித்து ஆராய்ச்சி செய்து சகலமும் நேர்த்தியாகவும் ஒழுக்கமாகவும் இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டு வெளிப்படையாக அறிக்கை செய்து இருக்கிறார்கள்
Ecc 3:11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்......

தேவன் (சிருஷ்டிகர்) இல்லையென்று யாரும் சொல்ல முடியாது












No comments:

Post a Comment