தேவனுடைய வார்த்தையை கூட்டாமல் குறைக்காமல் போதித்தால் இன்றைக்கு
அநேகருக்கு பிடிப்பதில்லை.
இன்றைக்கு அநேகர் மனுஷருடைய சாட்சிகள்,
போதகரின் கட்டுக்கதைகள் இவைகளை தான் அதிகமாக
விரும்புகிறார்கள்
நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு செவி
கொடுக்கிறீர்களாஅல்லது மனுஷருடைய வீணான
உபதேசங்களுக்கு செவிக் கொடுக்க விரும்புகிறீர்களா?
2Ti 4:1 நான் தேவனுக்கு முன்பாகவும்,
உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும்
நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக
வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
2Ti 4:2 சமயம் வாய்த்தாலும்
வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.
2Ti 4:3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய
இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
2Ti 4:4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி,
கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம்
வரும்.
தேவனுடைய வார்த்தைகள் எப்படிபட்டது
என்று பாருங்கள்
Jer 23:29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Heb 4:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும்
ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும்
இருக்கிறது.
Psa 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
Psa 19:8 கர்த்தருடைய நியாயங்கள்
செம்மையும், இருதயத்தைச்
சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும்,
கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.
தேவனுடைய வார்த்தையோடு கூட்டிக் குறைத்தும்
போதிக்கிற மனுஷருடைய உபதேசங்கள் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்
Mat 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
1Ti 6:3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற
உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப்
போதிக்கிறவனானால்,
1Ti 6:4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்
பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,
1Ti 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும்
சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற
மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
Tit 3:9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு
விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
Tit 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி
சொன்னபின்பு அவனை விட்டு விலகு.
Tit 3:11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று
அறிந்திருக்கிறாயே.
Col 2:4 ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச்
சொல்லுகிறேன்.
ஜென்ம சுபாவமான மனுஷன் ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று
பரிசுத்த ஆவியானவர் திட்டவட்டமாக போதிக்கிறார்
1Co 2:4 உங்கள் விசுவாசம் மனுஷருடைய
ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
1Co 2:5 என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ
ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும்
பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.
Co 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல்,
பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி,
ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே
சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.
1Co 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய
ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத்
தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து
நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
தேவனுடைய வார்த்தைகள் அல்லாத எந்த
உபதேசமும் அது மனுஷனுடைய ஞானமாக இருக்கிறது அதற்கு நீங்கள் எச்சரிக்கையாய்
இருங்கள்.
1Ti 6:20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ
காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும்,
ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற
கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
1Ti 6:21 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு
வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.
No comments:
Post a Comment