Tuesday, 24 March 2015

ஞானஸ்நானம் என்பது தேவனுடைய கட்டளையா அல்லது சடங்காசாராமா?



 பகுதி:2 ஞானஸ்நானம் பற்றிய சத்தியங்கள்

ஞானஸ்நானம் என்பது தேவனுடைய கட்டளையா அல்லது சடங்காசாராமா?

ஒரு சிலர் ஞானஸ்நானம் என்பது ஒன்றுமில்லை என்கிறார்கள் வேறு சிலர் அது சடங்காசாராம் என்கிறார்கள் தேவனுடைய கட்டளையை கைக் கொள்ளுவதே முக்கியம் என்கிறார்கள் இன்னும் சிலர் ஞானஸ்நானம் முக்கியமில்லை என்கிறார்கள்

இதுதெல்லாம் உண்மையா என்று வேத வாக்கியங்களை கொண்டு கற்றுக் கொள்ளுவோம்

நாம் இப்போது தண்ணீருக்குள்ளாக மூழ்கி பெறக் கூடிய ஞானஸ்நானத்தை பற்றி பார்க்கப்போகிறோம்
1) ஞானஸ்நானம் சகல தேசத்தாருக்கும் கொடுக்கப்பட்ட தேவனுடைய கட்டளை
Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Mat 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

2) ஞானஸ்நானத்தின் மூலமாக தான் நம்முடைய பாவங்கள் கழுவப்படுகிறது
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்,......
Act 22:16 இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

3) ஞானஸ்நானம் பண்ணப்பட்டு இரட்சிக்கப்படும் போது தான் சபையிலே கர்த்தர் மூலமாக சேர்க்கப்படுகிறோம்
Act 2:47 ....... இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
ஞானஸ்நானம் பெறாதவர்கள்
ஞானஸ்நானம் பெறாதவர்கள் சபையிலே சேர்க்கப்படுவதில்லை

4) ஞானஸ்நானம் பண்ணப்படும்போது கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்
Rom 6:3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?

5) ஞானஸ்நானம் பெறும் போது கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்படுகிறோம்
Rom 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

6) ஞானஸ்நானத்தின் மூலம் அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டால் தான் அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்படுவோம்
Rom 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெறவில்லையென்றால் பாவ மன்னிப்பும் இல்லை அவர்கள் சபையில் கர்த்தரால் சேர்க்கப்படுவதும் இல்லை நித்திய ஆவிக்குரிய உயிர்த்தெழுதலும் அவர்களுக்கு இல்லை

7) ஞானஸ்நானத்தின் மூலமாக தான் நாம் தேவனுடைய புத்திரராக இருக்கிறோம்
Gal 3:26 நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.

8) ஞானஸ்நானம் பெறும் போது தான் கிறிஸ்துவை தரித்துக் கொள்ளுகிறோம்
Gal 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

9) ஞானஸ்நானம் பெறும் போது எல்லாரும் கிறிஸ்துவினுடைய ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெறுகிறார்கள்
1Co 12:13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.

10) ஞானஸ்நானத்தின் மூலமாக தான் கிறிஸ்து நம்மை சுத்திகரித்து பரிசுத்தமாக்குகிறார்
Eph 5:26 தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
Eph 5:27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

11) ஞானஸ்நானம் ஆவிக்குரிய விருத்த சேதனமாக இருக்கிறது
Col 2:11 அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
Col 2:12 ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

12) ஞானஸ்நானம் தேவனைப் பற்றும் நல் மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருக்கிறது
1Pe 3:21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;

கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெறாதவர்கள் பாவமன்னிப்பை பெறுவதும் இல்லை சபையிலே கர்த்தரால் சேர்க்கப்படுவதும் இல்லை நித்திய உயிர்த்தெழுதலும் அவர்களுக்கு இல்லை

Mar 16:15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
Mar 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.


கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் ஞானஸ்நான சம்பந்தமான தேவனுடைய கட்டளைகளை கற்றுக் கொள்ளுவோம்










                                      




No comments:

Post a Comment