Monday, 30 March 2015

புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன புஸ்தகமான வெளிப்படுத்தின விசேஷத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.



பகுதி:1

புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன புஸ்தகமான வெளிப்படுத்தின விசேஷத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த புஸ்தகம் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டு அப்போஸ்தலனாகிய யோவானால் எழுதப்பட்டது. இந்த புஸ்தகத்தின் காலம் கி.பி 90-95ம் ஆண்டு எழுதப்பட்டு இருக்கலாம்.

இந்த புஸ்தகம் ஒரு விசேஷமான புஸ்தகம் எப்படியென்றால்
Rev 1:3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
இதை வாசிக்கிறவனும் கேட்கிறவனும் இதில் எழுதியிருக்கிறவைகளை கைக் கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் என்கிறார்.
இந்த புஸ்தகத்தை அதிகமாக வாசியுங்கள், வாசிக்க கேளுங்கள் நீங்கள் பாக்கியவான்கள். அதோடு மாத்திரம் அல்ல அதன்படி செய்தாலும் பாக்கியவான்கள் என்கிறார்.

இந்த புஸ்தகத்தின் எழுதப்பட்ட தன்மைகள்
1.       புரிந்து கொள்ளக் கூடிய நேரடியான வார்த்தைகள்
2.       தரிசனங்கள்
3.       உவமைகள்
4.       உருவகங்கள்

இந்த புஸ்தகம் எழுதப்பட்ட காலத்தில் டொமிசியன் என்ற ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவர்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி அவர்களை கொடுமையாய் கொலை செய்து கொண்டு இருந்தார்.
டொமிசியன் சக்கரவர்த்தி தன்னை ஆண்டவரும் தேவனும் என்று அழைக்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார். அப்படி தன்னை அழைக்காத கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்தார்.
இவருடைய காலத்திலும் கிறிஸ்தவ மார்க்கம் பெரும் பாடுகளுக்கும் துன்பத்திற்கும் உள்ளானது, அநேகர் கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரித்தார்கள்

அவர்களை ஆறுதல் படுத்தும் படியாகவும் விசுவாசத்தில் நிலைத்து இருக்கும் படியாகவும் இந்த புஸ்தகம் எழுதப்பட்டு இருக்கலாம்
Rev 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

இன்னும் அநேகர் இரத்த சாட்சியாக மரிப்பார்கள் என்றும் தேவன் சாட்சியாக அறிவித்து இருந்தார்.
Rev 6:11 அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

இந்த புஸ்தகத்தில் நம்மால் நேரடியாக புரிந்து கொள்ளக்கூடிய வசனங்களை படித்து அந்த சத்தியத்தைக் கைக் கொள்ள வேண்டும்
இந்த புஸ்தகத்தில் தேவன் ஒரு விசேஷித்த எச்சரிப்பை கொடுத்து இருக்கிறார், அது என்னவென்றால்
Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
Rev 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

ஆனால் இன்றைக்கு அவருடைய மறைப்பொருளாய் இருக்கக்கூடிய வெளிப்படுத்தின விசேஷத்தை இன்றைக்கு தேவன் கொடுத்த எச்சரிப்பை அறிந்தும் அநேகர் சுய விளக்கங்கள் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்
இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தில் உள்ள உருவகங்கள் மற்றும் மறைபொருளாக இருக்கிற வசனங்களுக்கு நாம் சுய விளக்கங்கள் கொடுத்தால் தேவனுடைய வசனத்தோடு ஒரு வார்த்தையைக் கூட்டுகிறோம் அதில் ஏதாவது குறைத்து போட்டால் அவருடைய வார்த்தையிலிருந்து எடுத்துப் போடுகிறோம்.
இதனிமித்தம் நாம் நித்திய ஜீவனையும் இழந்து  கிடைக்கும் தண்டனைகளும் கொடிதாக இருக்கும்

நாம் தேவனுடைய உருவகங்களுக்கும் மறைபொருளுக்கும் சுய விளக்கங்கள் கொடுக்க முடியாது, தேவன் தான் அதற்கான மறைபொருளை வெளிப்படுத்த முடியும்
Dan 2:27 தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.
Dan 2:28 மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:

தேவனுடைய மறைபொருளை வெளிப்படுத்துக் கூடியவர் தேவன் ஒருவர் மாத்திரமே, இந்த வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவன் சில தரிசனத்திற்கு மறைபொருளை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆனால் எல்லாவற்றிற்கும் அல்ல என்பதை நாம் நிச்சயமாக ஒத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு வெளிப்படுத்தின விசேஷத்திற்கு வியாக்கியானங்கள் கொடுக்க்க்கூடியவர்கள் ஜோசியரும் குறிசொல்லுகிறவர்களுமாய் இருக்கிறார்கள் அவர்களுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்
Isa 55:8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isa 55:9 பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

Deu 29:29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

அநேகர் இந்த வெளிப்படுத்தின விசேத்தை புரட்டி மக்களுக்கு போதித்து கொண்டு இருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களுடைய அக்கிரமம் நிறைவேறும் போது அவர்களை தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை தம்முடைய பாதபடியாக்கிப் போடுவதை நீங்கள் காண்பீர்கள்.
2Pe 3:16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
2Pe 3:17 ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
2Pe 3:18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.




No comments:

Post a Comment