Tuesday, 24 March 2015

நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் (பெறும் போது) போது ஏன் பரிசுத்த ஆவியின் நாமத்தை பயன்படுத்த வேண்டும்?



பகுதி:5 ஞானஸ்நானம் பற்றிய சத்தியங்கள்

நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் (பெறும் போது) போது ஏன் பரிசுத்த ஆவியின் நாமத்தை பயன்படுத்த வேண்டும்?

நாம் பாவமன்னிப்புக்காக ஞானஸ்நானம் பெறும் போது பிதாவுடைய நாமத்தை பயன்படுத்தும் போது பிதாவுடைய அதிகாரத்திற்கும் குமாரனுடைய நாமத்தை பயன்படுத்தும் போது குமாரனுடைய அதிகாரத்திற்கும் கீழ்ப்படிகிறோம் என்பதைக் குறித்து பார்த்து இருக்கிறோம்

இப்போது ஏன் ஞானஸ்நானம் பெறும் போது பரிசுத்த ஆவியானவரின் நாமத்தை பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து வசன ஆதாரங்களோடு பார்ப்போம்

1) பரிசுத்த ஆவியாவர் தேவன் என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்
Act 5:3 ...... பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
Act 5:4 ..... நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.

2) அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் மூலம் சகல சத்தியத்தையும் உலககெமங்கும் அறிவித்தவர்
Act 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
Mat 10:20 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.


3) பரிசுத்த ஆவியானவர் உலகமெங்கும் சத்தியத்தை அறிவித்ததினால் தான் நாம் இன்றைக்கு கிறிஸ்துவை அறிந்து பாவ மன்னிப்பையும் பெற்று இருக்கிறோம்
1Pe 1:12 ..... பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; ...
1Co 2:12 நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
1Co 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.


4) பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும் அவைகளுக்கு பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தார்
1Pe 1:11 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, ....

5) பரிசுத்த ஆவியின் மூலமாக தான் தேவனுடைய அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டு இருக்கிறது
Rom 5:5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

6) நம்முடைய இரட்சிப்புக்கான எல்லா வேத வாக்கியங்கள் முழுவதும் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு இருக்கிறது
2Pe 1:20 வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
2Pe 1:21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

தேவனுடைய வேத வாக்கியங்கள் இல்லாத பட்சத்தில் நாம் எப்படி தேவனையும் குமாரனையும் அவர் மூலமாக பாவ மன்னிப்பையும் நாம் பெற்று இருக்க முடியும்?

7) பரிசுத்த ஆவியானவர் சுயமாய் ஒரு வார்த்தை கூட போதிக்கவில்லை
Joh 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

8) கிறிஸ்துவினுடைய வார்த்தைகளை அவர் எடுத்து போதித்த போது கிறிஸ்துவை அவர் மகிமைப்படுத்தினார்
Joh 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
Joh 16:14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
Joh 16:15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

9) பரிசுத்த ஆவியானவர் என்ன போதிப்பார் என்று கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்தார்?
 Joh 16:7 .... நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
Joh 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
Joh 16:9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
Joh 16:10 நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
Joh 16:11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

10) நாம் ஞானஸ்நானம் பெறும் போது பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினால் நம்மை தேவன் இரட்சிக்கிறார்
Tit 3:5 ..... தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

11) தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலமாக தான் இன்றைக்கும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஆலயத்தில் வாசம் செய்கிறார்
1Co 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
1Co 6:19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

12) சபையானது பக்திவிருத்தி அடைவதற்கு ஆவிக்குரிய ஒன்பது வரங்களையும் தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்தவர் பரிசுத்த ஆவியானவர் தான்
1Co 12:4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
1Co 12:11 இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.

13) இயேசு கிறிஸ்து உலகத்தை நியாயந்தீர்க்க வரும் போது நம்முடைய சாவுக்கேதுவான சரீரங்களை பிதாவாகிய தேவன் தம்முடைய ஆவியினால் தான் நம்மை உயிர்ப்பிப்பார்
Rom 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

இன்னும் பரிசுத்த ஆவியானவர் பற்றி அநேக சத்தியங்கள் இருக்கிறது

நாம் தேவனுடைய வார்த்தைகளை கேட்டு மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறுவது முதல் கிறிஸ்துவினுடைய சாயலுக்கு ஒப்பாக மாறுவதற்கும் மற்றும் நித்திய உயிர்த்தெழுதல் வரை சகலமும் பரிசுத்த ஆவியின் நாமத்தில்(அதிகாரத்தில்) தான் நடக்கிறது

நீங்கள் ஞானஸ்நானம் பெறும் போது பரிசுத்த ஆவியினுடைய நாமத்தை பயன்படுத்தாத பட்சத்தில் அவருடைய அதிகாரத்தை(நாமத்தை) அங்கிகரிக்கவில்லை என்று அர்த்தமாய் இருக்கிறது

பரிசுத்த ஆவியினுடைய நாமத்தை( அதிகாரத்தை) அங்கிகரிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
Mar 3:28 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
Mar 3:29 ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.

நாம் ஞானஸ்நானம் பெறும் போது ஏன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

தேவனுக்கு சித்தமானால் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் பெறும் ஞானஸ்நானத்தை குறித்து இன்னும் கற்றுக் கொள்ளுவோம்
















No comments:

Post a Comment