பகுதி:1 ஞானஸ்நானத்தைப் பற்றிய சத்தியங்கள்
எந்த நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற வேண்டும்?
இன்றைக்கு அநேகர் யாருடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பதை
குறித்து சில குழப்பமான விளக்கங்களை கொடுக்கிறார்கள்
1) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம்
2) இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம்
இந்த இரண்டு வகையான ஞானஸ்நானத்தில் எந்த நாமத்தில் ஞானஸ்நானத்தை நாம்
பெற வேண்டும்
முதலில் நாமம் என்ற வார்த்தை கிரேக்க வேதாகமத்தில் எப்படி
பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பாருங்கள்
G3686
ὄνομα
onoma
on'-om-ah
(authority, character): - called,
(+ sur-) name (-d).
நாமம் என்ற
வார்த்தைக்கு கிரேக்க வேதாகம எண் 3686 அதற்கான அர்த்தம் கிரேக்க வேதாகமத்தில்
பெயர் என்றும் அதிகாரம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது
ஒருவருடைய
நாமம் என்று நாம் சொல்லும் போது அது அவருடைய பெயராகவும் அதிகாரமாகவும் இருக்கிறது
உதாரணம்
ஒன்றை பாருங்கள்
Est 8:8 இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.
1) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறி
போகும் போது சீஷர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார் என்று பாருங்கள்
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
2) இந்த வசனத்தில் கிறிஸ்து பிதா குமாரன்
பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுங்கள் என்று சொல்லுவதற்கு அவருக்கு
என்ன கொடுக்கப்பட்டது என்று பாருங்கள்
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்
அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது
Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
3) நாமம் என்றால் பெயர் மாத்திரம் இல்லை
அதில் அதிகாரமும் அடங்கி இருக்கிறது
Act 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
4) அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும்
ஞானஸ்நான விசயத்தில் இயேசு கிறிஸ்துவின் கட்டளையை மீறினார்களா?
2Jo 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும்
இயேசுவின் நாமத்தினாலே(அதிகாரத்தினாலே) ஞானஸ்நானங் கொடுத்தார்கள்
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.....
Act 8:15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
Act 10:48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். ,,,,
Act 19:5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
5) அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும்
ஒருபோதும் ஞானஸ்நான விசயத்தில் கிறிஸ்துவினுடைய கட்டளையை அவர்கள் மீறவும் இல்லை
சுயமாய் போதிக்கவும் இல்லை
2Pe 1:20 வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
2Pe 1:21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
அப்படி அவர்கள் சுயமாய் போதிக்கவில்லை என்றால்
இயேசுவின் நாமத்தினாலே அவர்கள் எப்படி ஞாஸ்நானம் கொடுத்து இருக்கிறார்கள்?
Col 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
ஆவிக்குரிய காரியத்தில் எதை செய்தாலும்
கிறிஸ்துவின் நாமத்தில்(அதிகாரத்தில்) தான் செய்ய வேண்டும்
6) ஞானஸ்நான விசயத்தில் கிறிஸ்துவின்
அதிகாரம் என்ன?
Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
இயேசுவின் நாமத்தில் என்று சொல்லும் போது
ஞானஸ்நான விசயத்தில் இயேசு கிறிஸ்துவின் அதிகாரம் என்ன சொல்லுகிறதோ அதை தான்
அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் செய்தார்கள்
இன்றைக்கும் சபைக்கு மூலைக்கல்லாக இயேசு
கிறிஸ்து இருக்கிறார் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அஸ்திபாரமாக
இருக்கிறார்கள் அதின் மீது தான் நாம் ஆவிக்குரிய கற்களாக கட்டப்பட்டு வருகிறோம்
Eph 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;
ஞானஸ்நான விசயத்தில்
கிறிஸ்துவின்(அதிகாரம்) நாமம் என்ன?
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்
ஞானஸ்நானம் பெறுவது தான் சரியானது
அப்படி இல்லை இயேசுவின் நாமத்தினால் தான்
ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் கிறிஸ்துவின் கட்டளையை
மீறுகிறார்கள்
Gal 1:7 வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
Gal 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
Gal 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
தேவனுக்கு சித்தமானால் ஞானஸ்நானம் என்பது முக்கியமில்லை
என்றும் அது சாடாங்காசாரம் என்று சிலர் சொல்லுகிறார்கள் அது உண்மையா என்று கற்றுக்
கொள்ளுவோம்
No comments:
Post a Comment