வெளிப்படுத்தின விசேஷத்தில் மனிதர்கள்(விசேஷமாக
ஆயிரம் வருடம் அரசாட்சி கொள்கைகாரர்கள்) கொடுக்கக்கூடிய விளக்கங்கள் எல்லாம் ஆச்சரியமாய் இருக்கிறது.
நாம் வெளிப்படுத்தின விசேஷம் என்ற
தீர்க்கதரிசன புஸ்கத்தை படிக்கும் போதும் போதிக்கும் போதும் தேவனுடைய எச்சரிப்பு
தான் நமக்கு முதலில் ஞாபகம் வரவேண்டும்
Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
Rev 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்
ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய
கள்ளப்போதகர்கள் இந்த வெளிப்படுத்தின புஸ்கத்தை வைத்து விளையாடிக் கொண்டு
இருக்கிறார்கள்
ஒருவர் சொல்லுகிறார் நான் தான்
வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்ட ஏழாம்
தூதன் என்கிறார். இன்னொருவர் நான் தான்
இரண்டு சாட்சியில் ஒரு சாட்சி என்கிறார். எவ்வளவு பெரிய மோசடி எவ்வளவு பொய்கள்
ஆனால் அநேகர் இதையெல்லாம் நம்பிக் கொண்டு
அவர்களை பின்பற்றி மோசம் போய் கொண்டு இருக்கிறார்கள்.
தேவனுடைய
ஒருவார்த்தையும் கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் நமக்கு அனுமதி இல்லை
Pro 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
தேவனுடைய வார்த்தையோடு ஒன்றை கூட்டுவது குறைப்பது என்றால் என்ன
அர்த்தம்?
உதாரணம் ஒன்றை தருகிறேன்,,
Gen 2:17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
பாருங்கள் ஆதாமுக்கு தேவன் இட்ட கட்டளை இது தான் அதை புசிக்கும்
நாளில் சாகவே சாவாய் என்றார்
ஆனால் சாத்தான் என்ன சொன்னான் பாருங்கள்
Gen 3:4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
தேவன் சாகவே சாவாய் என்றார் ஆனால் பிசாசு சாகவே சாவாதில்லை
இந்த வசனத்தில் சாவாய் என்ற வார்த்தையில் ’ய்’ என்ற வார்த்தையை எடுத்து போட்டு இல்லை
என்ற வார்த்தையை கூட்டி சொன்னான் அதனால் இயேசு கிறிஸ்து அவனை பொய்யுக்கு பிதா
என்கிறார்
Joh 8:44 ,,,,,,,,,,,,,சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
பாருங்கள் கீழே உள்ள வசனத்தில் எண்களுக்கும் காலங்களும் சுய விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் ஆயிரம்
வருடம்(1000) அரசாட்சி என்று வரும் போது அதற்கு சுயவிளக்கம் கொடுக்கமாட்டார்கள்
மாறாக ஆயிரம் வருஷம்(1000) கிறிஸ்துவோடு அரசாட்சி செய்வோம் என்று சொல்லிக்
கொள்ளுவார்கள்
Rev 2:10 ,,,,,,,,,,,,,,பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
இந்த வசனத்தில் சொல்லப்படும் பத்து(10) நாள்உபத்திரவப்படுவீர்கள்
என்பதற்கு ஆளுக்கொரு விளக்கம் கொடுப்பார்கள்
Rev 8:1 அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது,,,,,,,,,,,,,,
இந்த அரைமணி நேரத்திற்கு ஒரு சுய விளக்கம் கொடுப்பார்கள்
Rev 9:5,,,,,,,,, ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது,,,,,,,,,,,,,,,,,,.
இந்த ஜந்து மாத்திற்கு ஒரு சுயவிளக்கம் கொடுப்பார்கள்
Rev 9:16 குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.
இந்த இருபது கோடிக்கு(20கோடி) ஒரு சுயவிளக்கம் கொடுப்பார்கள்
Rev 11:2 ,,,,,,,,,,,,பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
இந்த நாற்பத்திரண்டு மாதம்(42 மாதம்) குறித்து சுயமாக ஒரு விளக்கம்
கொடுப்பார்கள்
Rev 11:11 மூன்றரை நாளைக்குப்பின்பு ,,,,,,,,,,,,,,
இந்த
மூன்றரை நாளுக்கு ஒரு சுயவிளக்கம் கொடுப்பார்கள்
Rev 11:13 ,,,,,,,,,மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
இந்த ஏழாயிரம் (7000) பேருக்கு ஒரு சுயவிளக்கம் கொடுப்பார்கள்
Rev 14:3,,,,,,,,,,,,,,, அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக் கூடாதிருந்தது.
இந்த 1,44,000 பேருக்கு ஒரு சுய விளக்கம் கொடுப்பார்கள்
Rev 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் மேலே உள்ள எல்லா எண்களும் சுயமாக விளக்கம்
கொடுக்க்கூடியவர்கள் இந்த ஆயிரம் வருஷம் என்று வந்தவுடன் இதற்கு சுயவிளக்கம்
எல்லாம் கொடுக்கமாட்டார்கள். மாறாக நாம் இயேசு கிறிஸ்துவோடு நிச்சயமாக இந்த
பூமியிலே 1000 வருஷம் அரசாட்சி செய்வோம் என்பார்கள்
என்றைக்குமே தேவனுடைய சத்தியங்கள் இரண்டு மூன்று சாட்சிகளின்
வாக்கினால் தான் நிலைவரப்படும்.
சிந்தித்துப்பாருங்கள் இயேசுகிறிஸ்துவோ அல்லது அப்போஸ்தலர்களோ அல்லது
தீர்க்கதரிசிகளோ வேறு எந்த ஒரு வசனத்திலாவது நாம் கிறிஸ்துவோடு இந்த பூமியிலே
ஆயிரம் வருஷம் அரசாளுவோம் என்று சொல்லியிருக்கிறார்களா?
Mat 18:16 அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
2Co 13:1 இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
இந்த ஆயிரம் வருஷம் அரசாட்சியைக் குறித்து போதிக்கிறவர்களிடத்தில்
எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் இந்த ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு கொடுக்கக்கூடிய
உபதேசங்கள் எல்லாம் அவர்களுடைய சொந்த உபதேசங்கள்.
இவர்கள் வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள வசனங்களை கூட்டியும்
குறைத்தும் சொல்லுகிறபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளிலே தேவன் இந்த புஸ்தகத்தில் சொன்ன எல்லா
நியாயத்தீர்ப்பும் இவர்களுக்கு நிச்சயமாக வரும்.
நம்முடைய தேவன் பொய்யுரையாதவர்.
No comments:
Post a Comment