இன்றைக்கு ஒரு பிரிவினை மதத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்து
சிலுவையில் மரிக்கவில்லை என்றும் அவர் உயிர்த்தெழவில்லை என்றும் கிறிஸ்தவர்களுடைய
விசுவாசத்தை அழித்துப்போட முயற்சி செய்கிறார்கள்
சில
கிறிஸ்தவர்கள் அவர்களுடைய உபதேசத்திற்கு வஞ்சிக்கப்பட்டு கிறிஸ்தவத்தை விட்டே
விலகி போய் விட்டார்கள். இதற்கு காரணம் அவர்கள் சரியான முறையில் வேத வாக்கியங்களை
உணர்ந்து கொள்ளாததே காரணம்
எந்தவொரு ஒரு
காரியமும் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே காரியம் நிலவரப்படும்
Mat 18:16 ,,,,,,,, இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.
கிறிஸ்து
சிலுவையில் மரித்தார் என்பதற்கு நமக்கு அநேக சாட்சிகள் இருக்கிறார்கள்
1) மத்தேயு,
மாற்கு, லுக்கா, யோவான் ஆகியோர் கிறிஸ்து
சிலுவையில் மரித்தார் என்பதற்கு சாட்சிளாக இருக்கிறார்கள்
Mat 27:50 இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
Mar 15:37 இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
Luk 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
Joh 19:30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
2) நூற்றுக்கு
அதிபதி சாட்சி
Mar 15:39 அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
3) ரோம
போர்சேவகர்கள் சாட்சி
Joh 19:32 அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.
Joh 19:33 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
4)
அப்போஸ்தலனாகிய யோவான் சாட்சி
Joh 19:34 ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
Joh 19:35 அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
5) அரிமத்தியா
ஊரானாகிய யோசேப்பு சாட்சி
Luk 23:52 அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
Luk 23:53 அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
6) யூதருக்குள்ளே
அதிகாரியான நிக்கொதேமு சாட்சி
Joh 19:39 ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
Joh 19:40 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
7)
தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து சாட்சி
Mar 15:44 அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.
Mar 15:45 நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.
8)
கலிலேயாவிலிருந்து அவருக்கு பின் சென்று வந்த ஸ்திரீகள் சாட்சி
Luk 23:55 கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
Luk 23:56 திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
9) மகதலேனா
மரியாளும் இயேசுவின் தாயாகிய மரியாளும் சாட்சி
Mat 27:56 அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.
Mar 15:47 அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
10)
சிலுவையில் அறையப்பட்டு இருந்த இயேசு கிறிஸ்துவுக்கு முன்பதாக இருந்த ஜனங்கள்
சாட்சி
Luk 23:48 இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
11) பிரதான
ஆசாரியரும் பரிசேயரும் சாட்சி
Mat 27:62 ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
Mat 27:63 ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
Mat 27:64 ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.
12)
கிறிஸ்துவின் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் சாட்சி
Act 2:23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
Act 3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
கிறிஸ்து
சிலுவையில் மரித்தார் என்று இத்தனை திரளான சாட்சிகளை தேவன் நமக்கு கொடுத்து
இருக்கிறார். ஆகையால் யாராவது உங்களிடத்தில் வந்து கிறிஸ்து சிலுவையில்
மரிக்கவில்லை என்று போதிப்பார்கள் என்றால் இவ்வசனங்களை கொண்டு அவர்களுடைய வாயை
அடைத்து விடுங்கள்
Tit 1:10 அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
Tit 1:11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
No comments:
Post a Comment