இன்றைய
கிறிஸ்தவ உலகில் இன்றைக்கு இருக்கக்கூடிய கேள்விகளில் ஒன்று இது தான் இந்த அந்தி கிறிஸ்து என்பவன் யார்?
அந்தி
கிறிஸ்து என்றால் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்று அர்த்தம்.
சரி இதற்கு மனிதர்கள்(போதகர்கள்) என்ன விளக்கம்
வேண்டுமானலும் கொடுத்து விட்டு போகட்டும், நம்முடைய தேவன் என்ன சொல்லுகிறார் என்று
பார்ப்போம்.
யார் அந்தி கிறிஸ்து(கிறிஸ்துவுக்கு எதிரானவன்)?
1Jo
4:3 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும்
தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது
இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
2Jo
1:7 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர்
உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
- அந்திகிறிஸ்து என்பவன் ஒரு மனிதன் அல்ல அது ஒரு ஆவி. அந்த ஆவி இந்த நிருபத்தை (யோவான் கி,பி 95ல்) எழுதும் போது உலகத்தில் இருந்து இருக்கிறது.
அந்த ஆவி என்ன சொல்லுகிறது?
மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை
அறிக்கை பண்ணாது
இது தேவனுடைய வார்த்தை இதை நீங்கள்
நம்ப போகிறீர்களா அல்லது மனிதனுடைய சுய இஷ்டமான உபதேசத்தை நம்ப போகிறீர்களா?
ஒருவன் இயேசு கிறிஸ்து
மாம்சத்தில் வரவில்லை என்று யாரெல்லாம் சொல்லுகிறானோ அவன் எல்லாம் அந்தி
கிறிஸ்துவாய் இருக்கிறான்.
1Jo
2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
- யோவானுடைய காலகட்டத்திலும் நிறைய அந்தி கிறிஸ்துக்கள் இருந்து இருக்கிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய யோவனைக் கொண்டு சொல்லும் போது பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவன் அதாவது தேவன் இல்லையென்று சொல்லக்கூடியவனும் அந்தி கிறிஸ்துவாய் இருக்கிறான் என்று சொல்லுகிறார்.
1Jo
2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று
மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார்
பொய்யன்?
பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
அப்படியானால் இன்றைக்கு எத்தனை
கோடிக்கணக்கான அந்திகிறிஸ்துகள்
இருக்கிறார்கள்?
மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை
ஏற்றுக் கொள்ளாமல் மறுதலிப்போம் என்றால் நீங்களும் நானும் அந்தி
கிறிஸ்துவாய்(கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள்) இருப்போம்இருக்கிறார்கள்?
அந்தி கிறிஸ்துவை பற்றி இந்த நான்கு
வசனங்களில் தான் தேவன் பேசியிருக்கிறார். ஆனால் இந்த வார்த்தைகளை வைத்துக் கொண்டு
ஒட்டு மொத்த கிறிஸ்தவ உலகத்தை இந்த கள்ளப்போதகர்கள் ஆட்டிப்படைக்கிறார்கள்.
1Co
4:6 சகோதரரே,
எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள்
எங்களாலே கற்றுக்கொள்ளவும்,......... இவைகளை
எழுதினேன்.
- அந்தி கிறிஸ்து யார் என்று மனிதர்கள் பல சுய விளக்கங்களை கொடுக்கிறார்கள். இவன் ஏழு வருடங்கள் அரசாட்சி செய்வான் என்றும் அந்த காலகட்டத்தில் மக்கள் மிகுந்த உபத்திரவப்படுவார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.
ஏழு வருடங்கள் அரசாட்சி செய்வான் என்ற வசன ஆதாரங்கள் எங்கே
இருக்கிறது. இதெல்லாம் கள்ளப்போதகர்களுடைய கற்பனை வளங்கள் இதற்கெல்லாம் நாம் செவி
கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை
Joh
7:16 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்
உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
Joh
7:17 அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம்
தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
Joh
7:18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
நீங்கள் மனுஷருடைய
கட்டுக்கதைகளுக்கு ஒரு போதும் செவி கொடுக்காதீர்கள்
1Ti
1:3 வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
1Ti
6:3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
1Ti
6:4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும்,
தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,
1Ti
6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
தேவன் நம்முடைய திராணிக்கு மேலாக
ஒருபோதும் சோதிக்கமாட்டார் இது தேவனுடைய வாக்குத்தத்தம்
No comments:
Post a Comment