தேவனுடைய வார்த்தையை யாருக்கு போதிக்க வேண்டும்? யாருக்கு போதிக்கக்
கூடாது?
இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் அநேக போதகர்கள் எல்லாருக்கும் சத்தியம்
உரைக்க வேண்டும் என்று போதிக்கிறார்கள்
ஆனால் தேவன் யாருக்கு போதிக்கும்படி சொல்லுகிறார் யாருக்கு போதிக்க
வேண்டாம் என்று சொல்லுகிறார் என்று பார்போம்
1) நாம்
யாருக்கு போதிக்க வேண்டும்?
2Ti 2:2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.
நாம் கேட்ட தேவனுடைய வார்த்தைகளை
எல்லாருக்கும் போதிக்க வேண்டுமா?
எல்லாருக்கும் போதிக்க கூடாது என்று
சொல்லுகிறார்
2) தேவனுடைய வார்த்தைகளை நாம் யாருக்கு
போதிக்கிறோமோ அவருக்கு இரண்டு தகுதிகள் இருக்க வேண்டும்
1) நாம் போதிக்கிறவர்கள் உண்மையுள்ள
மனுஷர்களாக இருக்க வேண்டும்
2) அந்த உண்மையுள்ள மனுஷர்கள்
மற்றவர்களுக்கு போதிக்கத்தக்க தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும்
நாம் இந்த பூமியிலுள்ள மற்றவர்களுக்கு
போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு போதிக்க வேண்டும்
3) உண்மையுள்ள மனிதர்களிடத்தில் நீங்கள்
தேவனுடைய வார்த்தைகளை போதிக்கும் போது என்னவாகிறது என்று பாருங்கள்
Luk 8:15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
அவர்கள் அதை உண்மையும் நன்மையான
இருதயத்தில் அதை காத்துப் பொறுமையுடனே பலன் கொடுப்பார்கள்
4) உண்மையுள்ளவர்கள் தான் தேவனை ஆவியோடும்
சத்தியத்தோடும் அவரை தொழுது கொள்ளுவார்கள்
Joh 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
5) கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள்
உண்மையுள்ளவர்களா இருந்தபடியால் தேவன் அந்த ஊழியத்தை அவர்களிடத்தில் ஒப்படைத்தார்
1Ti 1:12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
6) தேவனுடைய வார்த்தைகளை யாருக்கு
போதிக்கக்கூடாது?
Mat 7:6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
நாய்களைப் போல குணாதிசயங்களும் பன்றிகளைப்
போல குணாதிசயங்களையும் உடைய மனிதர்களுக்கு முன்பாக தேவனுடைய வார்த்தையை
பிரசங்கித்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?
Mat 7:6 ....தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
தேவனுடைய வார்த்தையை அசுத்தம் என்று எண்ணி
காலின் கீழ் மிதித்து உங்களையே பீறிப்போடுவார்கள்
நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று
தேவன் போதித்து இருக்கிறார்
Phi 3:2 நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்,,,
உலகத்தின் அசுத்தங்களுக்கு சிக்கிக்கொண்டு இருப்பவர்கள்
எப்படிப்பட்டவர்கள்?
2Pe 2:22 நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
இந்த தேவனுடைய வார்த்தையை மிதித்து போடக்கூடிய இவர்களுக்கு என்ன
தண்டனை கிடைக்கும்?
Rev 22:15 நாய்களும், ,,,,,, செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
7) தேவன் இல்லை என்று சொல்லக்கூடிய
மனிதர்களுக்கு போதிக்கலாமா?
Psa 14:1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்,,,
தேவன் இல்லை என்று சொல்லுகிறவர்கள்
மதிகெட்டவர்கள் அவர்களுக்கு நீங்கள் எப்படி போதிக்க முடியும்?
தேவன் இல்லை என்று சொல்லுகிறவர்கள் இரண்டு
வேலை செய்கிறார்கள்
1) தங்களை கொடுத்து கொள்ளுகிறார்கள்
2) அருவருப்பான கிரியைகளை செய்து
வருகிறார்கள்
8) இவர்கள் ஏன் தேவனை தேட மாட்டார்கள்?
Psa 10:4 துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
9) தேவன் இல்லை என்று சொல்லக் கூடிய
நபர்களுக்கு தேவன் ஒருவர் இருக்கிறார் என்பது அவர்களுக்கு தெரியும் ஆனால் அவர்கள் அவரைப்
பற்றி எங்களுக்கு தெரியாது என்பதைப் போல நடிக்கிறார்கள்
Psa 10:13 துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்?
10) இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் எப்படி
போதிக்க முடியும்?
அவர்களுக்கு தேவன் ஆவிக்குரிய கண்களை
திறக்காத பட்சத்தில் இவர்களிடத்தில் நாம் எந்த தேவனுடைய வார்த்தையும் போதிக்க
முடியாது
11) ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் போதிக்கலாமா?
Mat 11:25 அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
Mat 11:26 ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
12) ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும்
தேவன் தம்முடைய சத்தியத்தை மறைந்து வைத்து இருக்கிறார்
ஏனென்றால் இவர்கள் எல்லாரும் உலகத்தாலே
போற்றப்படக்கூடியவர்கள்
1Co 1:21 எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில்,,,,
இந்த ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும்
சுயஞானம் இருப்பதினால் தேவனை அவர்கள் அறியாமல் இருப்பதைப் போல நடிக்கிறார்கள்
தேவன் இவர்களுக்கு தம்முடைய சத்தியத்தை
மறைத்து வைத்து இருக்கும் போது இவர்களுக்கு நாம் ஒருபோதும் சத்தியத்தை போதிக்க
முடியாது
இந்த ஞானிகளும் கல்விமான்களும் தேவனை உலகத்தையும்
அதிலுள்ள சகலத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகர் என்று ஏற்றுக் கொள்ளும் போதுதான்
அவர்கள் தேவனுடைய சுவிசேஷத்தை அறிந்து கொள்ள முடியும்
தேவனுடைய வார்த்தைகளை மற்றவர்களுக்கு
போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவியுங்கள்
No comments:
Post a Comment