Monday, 30 March 2015

இரட்சிக்கப்படுகிறவர்கள் 1,44,000 பேர்தானா?



இரட்சிக்கப்படுகிறவர்கள் 1,44,000 பேர்தானா?

இன்றைக்கு ஒரு கூட்டத்தார் 1,44000 பேர் தான் இரட்சிக்கப்படுவார்கள் என்று போதிக்கிறார்கள் இது உண்மையா என்று நம்முடைய வேத வசனத்தில் இருந்து கற்றுக் கொள்ளுவோம்

அவர்கள் இதற்கு ஆதாரமாக இந்த வேத வசனப்பகுதியை தான் கொடுக்கிறார்கள்
Rev 7:4 முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்.
இவர்கள் மாத்திரம் தான் பரலோகம் முடியும் என்று போதிக்கிறார்கள்

இந்த 7ம் அதிகாரத்தில் எப்பிராயீம் மற்றும் தாண் கோத்திரம் ஆகிய இரண்டு கோத்திரங்களும்  விடப்பட்டு இருக்கிறது அப்படியானால் இந்த இரண்டு கோத்திரத்தாரும் பரலோகம் போக முடியாதா? இந்த இரண்டு கோத்திரத்திலும் அநேக பரிசுத்தவான்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய நிலைமை என்ன? எதற்காக தேவன் இந்த இரண்டு கோத்திரங்களை சொல்லாமல் விட்டார் என்று யார் ஒருவருக்கும்  தெரியாது

இந்த 1,44,000 யார் என்று முதலில் பார்ப்போம்,
Rev 14:3 அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக் கூடாதிருந்தது.
Rev 14:4 ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
Rev 14:5 இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.


மேலே சொல்லப்பட்ட வசனப்பகுதியில் இருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய சத்தியம் என்னவென்றால்
1.       இந்த 1,44000 பேரும் ஸ்திரீகளால் தங்களை கறைப்படுத்தாதவர்கள் என்று தேவன் சொல்லும் போது அவர்கள் எல்லாரும் புருஷர்கள் (அதாவது ஆண்கள்)
2.      ஸ்திரீகளால் தங்களை கறைப்படுத்தாதவர்கள் என்று சொல்லும் போது திருமணமாகாத புருஷர்கள் (ஆண்கள்)
3.      கற்புள்ளவர்கள்
இந்த 144000 பேருக்கு இருக்கக்கூடிய தகுதிகள் என்ன?
1.       ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரை பின்பற்றுகிறவர்கள்
2.      மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலானக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்
3.      இவர்கள் வாயிலே கபடம் காணப்படவில்லை
4.      இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கும் முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்
அப்படியானால் இந்த தகுதிகளில் அடிப்படையில் பார்க்கும் போது 144000 பேர் தான் இரட்சிக்கப்படுவார்கள் என்று போதிக்கிறவர்கள் ஏன் இந்த வசனங்களை சிந்திப்பது இல்லை
இந்த உபதேசத்தின் படி திருமணம் செய்தவர்களும் எந்த ஒரு ஸ்திரீகளும்( தேவனுடைய வார்த்தையின் படி ஜீவிக்கிறவர்கள்) பரலோகம் போக முடியாது,

தேவனுடைய சத்தியத்தின்படி நடக்கிற எந்த ஒரு ஆத்துமாவும் பரலோகம் போக முடியும்
2Ti 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
2Ti 4:8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
Rev 7:9 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
Rev 7:14 அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
Rev 7:15 ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.

இந்த வெளிப்படுத்தின விசேஷத்தை குறித்து தேவனுடைய எச்சரிப்பை பாருங்கள்.
Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
Rev 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
Rev 22:20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.







இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கிறது?



இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கிறது?

முதலில் நாம் என்னென்ன மரணங்கள் இருக்கிறது என்பதை பார்ப்போம்

1. பூமிக்குரிய வாழ்கையில் நம்முடைய சரீரத்தை விட்டு ஆவி பிரிவதை வேதாகமம் மரணம் என்று அழைக்கிறார்
Ecc 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
Heb 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
இன்னும் அநேக வசனங்கள் இருக்கிறது

பாருங்கள் இந்த மரணம் நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் பூமியில் வாழக்கூடிய எல்லாருக்கும் இந்த மரணம் நியமிக்கப்பட்டு இருக்கிறது.

2.   இப்பூமிக்குரிய வாழ்க்கையில் பாவம் செய்கின்றபோது அதனிமித்தமாக ஆத்துமா மரித்து போவது ஆவிக்குரிய மரணமாக இருக்கிறது
Rom 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
Eph 2:1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
Eph 2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; ,,,,,,,
இதைப் போல் இன்னும் அநேக வசனங்கள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டில் இருக்கிறது

3. இரண்டாம் மரணம் என்பது என்னவாக இருக்கிறது இதைக் குறித்து    பரிசுத்த ஆவியானவர் வசனங்களில் என்ன சொல்லி இருக்கிறார்
Rev 2:11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

இந்த இரண்டாம் மரணம் என்பது என்ன என்பதைக் குறித்து பிதாவாகிய தேவனே தெளிவாக சொல்லியிருக்கிறார். கீழே உள்ள வசனங்களை பாருங்கள்.
Rev 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
Rev 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
பாருங்கள் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நாளுக்கு பின்பு மரணமும் இன்றைக்கு இருக்கக்கூடிய பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்படுவதுதான் இரண்டாம் மரணம் என்கிறார்

யாரெல்லாம் இரண்டாம் மரணத்தில் பங்கடைவார்கள்?
Rev 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

இரண்டாம் மரணத்தினால் சேதப்படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
என்றைக்கும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிபந்தனையோடு கூட தான் இருக்கும் அப்படியானால் இந்த இரண்டாம் மரணத்தினால் நாம் சேதப்படாமல் இருப்பதற்கு தேவன் நம்மிடத்தில் என்ன கட்டளையிட்டு இருக்கிறார்.
Rev 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை,,,,.
Rev 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
Rev 2:11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

ஜெயங்கொண்டால் தான் நாம் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை ஜெயங்கொள்ளவில்லையென்றால் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவோம்